என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Ticket"

    • இந்தச் சலுகை 2026 ஜனவரி 14 முதல் 2026 ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
    • 'R-Wallet' மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் தொடரும்.

    இந்திய ரெயில்வேயின் 'RailOne' செயலி மூலம் முன்பதிவுவில்லாத டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, ரயில்ஒன் செயலி மூலம் யுபிஐ, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றின் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்குபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் தள்ளுபடி நேரடியாக வழங்கப்படும்.

    இந்தச் சலுகை 2026 ஜனவரி 14 முதல் 2026 ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

    பயணிகள் டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தத் சலுகை RailOne செயலியில் மட்டுமே கிடைக்கும். மற்ற ஆன்லைன் தளங்களுக்கு இது பொருந்தாது.

    ஏற்கனவே 'R-Wallet' மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் இதனுடன் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக பயணிகள் புகார்
    • டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர்.

    வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக டிக்கெட் எடுத்த பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அதில், ஒருசிலர் மட்டும் அபராதத்தை செலுத்தியுள்ளனர்; மற்றவர்கள் ஜெய்கோ என முழக்கமிட்டவாறு அபராதம் செலுத்தாமல் தப்பி ஓடினர்.

    ரெயிலில் 400க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்கள் வந்த நிலையில் சுமார் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
    • ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பண்டிகை சீசனில் ரெயில் டிக்கெட் தேவை அதிகரிப்பதால், இந்திய ரெயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் 60 நாட்கள் முன்பு முன்பதிவு வசதி வழங்குகிறது.

    அந்த வகையில், ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலம் பயணிகள் முன்பதிவு செய்ததால் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. 

    • அவர்களால் மட்டுமே அந்த நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.
    • இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும்.

    ரெயில் டிக்கெட் முன்பதிவு முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மோசடியைத் தடுக்கவும் ரெயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

    அக்டோபர் 1, 2025 முதல், பொது முன்பதிவு திறந்த முதல் 15 நிமிடங்களில் டிக்கெட் பதிவு செய்வோர் ஆதாரை கட்டாயமாக இணைந்திருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே அந்த இடைப்பட்ட நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.

    தற்போது, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமாகும். இப்போது இந்தக் கொள்கை பொது ஒதுக்கீட்டு டிக்கெட்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக, நவம்பர் 15 ஆம் தேதி பயணிக்க பொதிகை எக்ஸ்பிரஸில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால், விதிகளின்படி, முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே, அதாவது செப்டம்பர் 16 காலை 8 மணிக்கு தொடங்கும். புதிய விதியின்படி, ஆதார் சரிபார்ப்பை முடித்த IRCTC பயனர்கள் மட்டுமே 8.00 முதல் 8:15 வரை, அதாவது முதல் 15 நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

    ஆதார் இணைப்பு இல்லாத வாடிக்கையாளர்கள் அந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது. இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், சரிபார்க்கப்பட்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தீபாவளிக்கு 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
    • காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.

    தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 20 ம்தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

    கீழ்க்காணும் தேதிகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

    ரெயில் டிக்கெட் முன்பதிவு நாள்

    பயண நாள்

    பயண கிழமை

    ஆகஸ்ட் 17

    அக்டோபர் 16

    வியாழன்

    ஆகஸ்ட் 18

    அக்டோபர் 17

    வெள்ளி

    ஆகஸ்ட் 19

    அக்டோபர் 18

    சனிக்கிழமை

    ஆகஸ்ட் 20

    அக்டோபர் 19

    ஞாயிறு

    ஆகஸ்ட் 21

    அக்டோபர் 20

     திங்கட்கிழமை - தீபாவளி பண்டிகை

    ஆகஸ்ட் 22

    அக்டோபர் 21

    செவ்வாய்

    ஆகஸ்ட் 23

    அக்டோபர் 16

    புதன்கிழமை

    வட இந்திய ரெயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும். வட இந்திய ரெயில் பட்டியல் மற்றும் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரெயில்கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும்

    • இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    • இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புறநகர் தொடர்வண்டிகளிலும், சாதாரண தொடர்வண்டிகளில் 500 கி.மீ வரையிலும் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், விரைவு வண்டிகளில் சாதாரண வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதமும், குளிரூட்டி வசதி கொண்ட தொடர்வண்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்குள் அதிகபட்ச பயணதூரமான சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சாதாரண தொடர்வண்டிகளில் பயணம் செய்ய 5 ரூபாயும், விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புகளில் பயணிக்க 8 ரூபாயும், குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க 15 ரூபாயும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒப்பீட்டளவில் இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

    மேலும் இந்தக் கட்டண உயர்வின் மூலம் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும் கூடுதல் வருமானமான ரூ.1,100 கோடி என்பது, நடப்பாண்டில் பயணியர் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானமான ரூ. 92,800 கோடியில் 1.18% மட்டும் தான். இதை வேறு ஆதாரங்களின் மூலம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் திரட்ட முடியும். எனவே, தொடர்வண்டிக் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட உள்ளது.
    • இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

    இந்திய ரெயில்வே, ரெயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்பட உள்ளது.

    புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோமீட்டருக்கு குறைவான தொலைவு பயணங்களுக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறுகிய தூர பயணிகள் மற்றும் புறநகர் ரெயில் பயணிகள் இந்த உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம்.
    • ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என தெரிவித்தார்.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் எனக்கூறிய அஸ்வினி வைஷ்ணவ், ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

    • இந்த செயலி மூலம் 5 கி.மீ. தூரம் வரை முன்பதிவல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடிகிறது.
    • தற்போது, ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    ரெயில்வேயின் முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு (யு.டி.எஸ்.) செயலி மூலம் பயணிகள் சீசன் டிக்கெட்டுகள், மாதாந்திர பாஸ்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் போன்றவற்றை பதிவு செய்ய முடிகிறது. இதனால் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டரில் காத்திருக்க தேவையில்லாத நிலையுடன், அவர்களின் நேரமும் மிச்சமாகிறது.

    இந்த செயலி மூலம் பயணிகள், புறநகர் அல்லாத பகுதிகளில் ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை முன்பதிவல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடிகிறது. அது தற்போது, ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, புறநகர்ப் பகுதிகளில் இந்த தூரம் 2 கி.மீ. தூரத்தில் இருந்து 5 கி.மீ.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தினசரி பாசஞ்சர் ரெயில்களிலும், நீண்டதூர ரெயில்களிலும் பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

    இதுதொடர்பான அறிவுறுத்தல் அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    5 கி.மீ. தூர கட்டுப்பாட்டை 10 கி.மீ. அளவுக்கு அதிகரிக்க விரும்பும் மண்டல ரெயில்வே நிர்வாகங்கள், அதுகுறித்து ரெயில்வே தகவல் அமைப்பு மையத்துக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன.

    புதுடெல்லி:

    ரெயில் டிக்கெட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அதில், "ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் முன்னெடுப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்கள் மூலம் ஊரக மற்றும் கிராமப்புறங்களில் வழக்கமான முகாம்கள் நடத்தப்படுகிறது.

    ரெயில் பயணச்சீட்டுகளில் சுமார் 80 சதவீதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தற்போது ஒரு நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் வழங்கும் திறன் உள்ளது.
    • நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் ‘ஜன சுவிதா’ கடைகள் நிறுவப்படும்.

    புதுடெல்லி :

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது 2023-24-ம் நிதியாண்டில் ரெயில்வேயில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பயணிகள் முன்பதிவு முறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் இணையதள வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் கிட்டத்தட்ட 10 மடங்கு வேகம் இருக்கும்.

    தற்போது ஒரு நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் வழங்கும் திறன் உள்ளது. இதை நிமிடத்திற்கு 2.25 லட்சமாக மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    இதைப்போல பயணிகளின் விசாரணை அழைப்புகளை எதிர்கொள்ளும் திறனையும் நிமிடத்துக்கு 40 ஆயிரம் என்ற இலக்கில் இருந்து 4 லட்சமாக அதிகரிக்கும் திட்டம் உள்ளது.

    2022-23-ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த 4,500 கி.மீ. புதிய ரெயில் பாதை இலக்கு எட்டப்பட்டு உள்ளது. இது நாளொன்றுக்கு 12 கி.மீ. ஆகும். அதேநேரம் 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை நாளுக்கு 4 கி.மீ.யாக இருந்தது.

    2023-24-ம் நிதியாண்டில் 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் புதிய பாதைகள், இரட்டைமயமாக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

    நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 'ஜன சுவிதா' கடைகள் நிறுவப்படும். இவை 24 மணி நேரமும் திறந்து இருக்கும். இந்த கடைகளில் தினசரி உபயோகப் பொருட்கள் அனைத்தும் இருக்கும்.

    ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கிழ் 550 ரெயில் நிலையங்களில் 594 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையங்களின் எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்படும்.

    2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2.40 லட்சம் கோடியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சிறிய தயாரிப்பான வந்தே மெட்ரோ உருவாக்கப்படும். இது பெரிய நகரங்களில் பணியாற்றும் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    • மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது.
    • 2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது.

    புதுடெல்லி :

    நாட்டில் இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை, ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு கீழ் 'பெர்த்' (கீழ்ப்படுக்கை) கிடைப்பதற்கான வசதிகள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி (தி.மு.க.) மற்றும் தீபக் அதிகாரி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    இதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாட்டில் 2,687 பயணிகள் ரெயில்கள், 2,032 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட மொத்தம் 10,378 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது.

    2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது. மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கியதில் அந்த ஆண்டு சுமார் ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

    ரெயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் முன்பதிவின்போது கீழ் 'பெர்த்' தானாகவே கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 4 முதல் 5 படுக்கை என்ற அளவிலும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 3 முதல் 4 படுக்கை என்ற அளவிலும் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×