என் மலர்
இந்தியா

உயர்கிறது ரெயில் டிக்கெட் கட்டணம்.. அதிர்ச்சியில் பயணிகள்
- ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட உள்ளது.
- இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இந்திய ரெயில்வே, ரெயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்பட உள்ளது.
புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோமீட்டருக்கு குறைவான தொலைவு பயணங்களுக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறுகிய தூர பயணிகள் மற்றும் புறநகர் ரெயில் பயணிகள் இந்த உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
Next Story






