என் மலர்

  நீங்கள் தேடியது "Indian railways"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடப்பாண்டு சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.92,345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
  • அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரிப்பு.

  மத்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல், அக்டோபர் மாதம் வரையிலான 7 மாதக் காலகட்டத்தில், சரக்கு ரெயில்கள் மூலம் மொத்தம் 855.63 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 786.2 மெட்ரிக் டன்னாக இது இருந்தது. இதனால், சரக்குகள் கையாளுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9% அதிகரித்துள்ளது.

  இதேபோல் நடப்பாண்டு அக்டோபர் மாதம் சரக்கு ரெயில்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதே அக்டோபர மாதம் வரை வருவாய் ரூ.78,921 கோடியாக இருந்தது. இதனால் சரக்கு ரெயில் வருவாய் 17% அதிகரித்துள்ளது.

  அதே போல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 117.34 மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகள் கையாளுதல் இந்த அக்டோபர் மாதம் மட்டும் 118.94 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பயன்படுத்த முடியாத இரும்பு ஸ்லீப்பர்கள் ரெயில்வே விதிகளின்படி அகற்றப்படுகின்றன.
  • மின்னணுமுறை ஏலம் மூலம் கழிவுப் பொருட்கள் விற்பனை.

  நாடு முழுவதும் ரெயில் பாதை கட்டுமானப் பணிகளின் போது உருவாகும் இரும்புக் கழிவுகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள மீண்டும் பயன்படுத்த முடியாத வார்ப்பு இரும்பு ஸ்லீப்பர்கள் ரெயில்வே விதிகளின்படி அகற்றப்படுகின்றன.

  இந்த இரும்புக் கழிவுகளை தொடர் நடவடிக்கை மூலம் ரெயில்வே விற்பனை செய்து வருகிறது. மின்னணுமுறை ஏலம் மூலம் இந்த கழிவுப் பொருட்கள் விற்பனை செய்யப் படுகின்றன. இந்த செயல்முறை மண்டல ரெயில்வே மற்றும் ரெயில்வே வாரியம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 


  இந்நிலையில் 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கழிவுப் பொருட்கள் விற்பனையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய ரயில்வே ரூ.2500 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

  2021-22 நிதியாண்டின் இதே கால கட்டத்தில் ரூ.2300 கோடி கழிவு பொருள் ஏலம் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. அதை ஒப்பிடும்போது நடப்பாண்டு 28.91 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ரெயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த ஆண்டு ரூ.1,086 கோடி கிடைத்தது.
  • இந்த ஆண்டு ரூ.6 ஆயிரத்து 515 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

  புதுடெல்லி :

  கொரோனா நோய் பரவல் ஓய்ந்ததை அடுத்து நாட்டில் மக்கள் நடமாட்டம் சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களும் அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டியுள்ளன.

  இந்திய ரெயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் இந்த மாதம் 8-ந்தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த காலக்கட்டத்தில் மொத்தம் சுமார் ரூ.33 ஆயிரத்து 476 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வருவாய் ரூ.17 ஆயிரத்து 394 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வருவாய் 92 சதவீதம் உயர்ந்துள்ளது.

  முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு 34.56 கோடி பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 42.89 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

  முன்பதிவு செய்த வகையில் கடந்த ஆண்டு ரூ.16 ஆயிரத்து 307 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. ஆனால் இந்த ஆண்டு ரூ.26 ஆயிரத்து 961 கோடி கிடைத்து இருக்கிறது. இது 65 சதவீதம் அதிகம் ஆகும்.

  முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 197 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 90.57 கோடி பேர் பயணம் செய்த நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 268.56 கோடியாக உயர்ந்துள்ளது.

  இதைப்போல முன்பதிவு அல்லாத பயணத்தில் வருவாயும் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட 6 மடங்கு உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.1,086 கோடி கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.6 ஆயிரத்து 515 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
  • பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடி கிடைத்துள்ளது.

  புதுடெல்லி

  நடப்பு ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான 8 மாதங்களில் இந்திய ரெயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.95 ஆயிரத்து 486 கோடியே 58 லட்சம் ஆகும். இது, கடந்த ஆண்டில் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தின் வருவாயை விட ரூ.26 ஆயிரத்து 271 கோடி (38 சதவீதம்) அதிகம்.

  பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் ரூ.25 ஆயிரத்து 276 கோடியே 54 லட்சம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13 ஆயிரத்து 574 கோடி (116 சதவீதம்) அதிகம்.

  பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பயணிகள் மற்றும் புறநகர் ரெயில்களை விட நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.

  சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.65 ஆயிரத்து 505 கோடியும், இதர வருவாய் ரூ.2 ஆயிரத்து 267 கோடியும், பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடியும் கிடைத்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரெயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது.
  • குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும் சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம்.

  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் விலாய் பகுதியில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது.

  இந்நிலையில், ரெயில்வே விதிகளின் படி ராஜேந்திரகுமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரெயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்தது. தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது.

  சிறிய குழந்தை என்பதால் அதன் கைரேகையைப் பதிவுசெய்து பணி நியமனம் உறுதிபடுத்தப்பட்டது. குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய ரெயில்வேயிடம் குறை இருப்பதாக கூறி கேள்விகேட்ட பயணி ஒருவருக்கு, மூக்கறுக்கும் விதமாக ரெயில்வேத்துறை பதில் அளித்துள்ளது.
  புது டெல்லி:

  இந்திய ரெயில்வேயில் பயணம் செய்ய வேண்டி ஆன்லைன் மூலம் புக் செய்வதற்காக செல்போனில் ரெயில்வே ஆப் உள்ளே சென்றிருக்கிறார் ஆனந்த்குமார். அப்போது விளம்பரங்கள் வந்துள்ளது. இந்த விளம்பரங்கள் ஆபாசமாக இருந்துள்ளது.

  இதனையடுத்து ஆனந்த், ரெயில்வேயின் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி பதில் பகுதியில் செல்போனில் இருந்த படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சுட்டிக்காட்டி, 'பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யும்போது  மிகவும் ஆபாசமான, மோசமான விளம்பரங்கள் தொடர்ச்சியாக காட்சியாகிறது. இது அருவருப்பாகவும், எரிச்சல் மூட்டுவதாகவும் இருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.  இதற்கு பதிலளித்த ரெயில்வேத்துறை ஆனந்தின் மூக்கை அறுப்பதுபோல், 'இந்திய ரெயில்வே விளம்பரங்களுக்காக கூகுள் விளம்பர சேவையை பயன்படுத்துகிறது. பயனாளர்களை தக்க வைத்துக் கொள்ள குக்கீஸினை பயன்படுத்தும். உங்கள் கூகுள் வரலாறு, குக்கீஸ் ஆகியவற்றை பொருத்தே இந்த விளம்பரங்கள் காட்சியாகும்.

  இதுபோன்ற விளம்பரங்கள் மீண்டும் தோன்றாமல் இருக்க உங்கள் கூகுள் வரலாறு, குக்கீஸ் ஆகியவற்றை தயவுசெய்து அழித்து விடுங்கள்' என அதிரடியாக கூறியுள்ளது. இந்த கேள்வி பதில் அடங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

   
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில்வே நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #IndiaPakistanWar #IndianRailway
  புதுடெல்லி:

  இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில்வே நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  அதில், இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில்வே ஜெனரல் மானேஜர்களுக்கும் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எல்லா ரெயில்களையும் மிகுந்த பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் இயக்க பகுதிகள் மற்றும் ரெயில் நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயக்கப்படும் ரெயில்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு குறைபாடு உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய ரெயில்வேயில் சுமார் 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. #IndianRailwaysVacancies
  புதுடெல்லி:

  பொதுமக்கள் தங்களின் வெளியூர் பயணத்துக்கு ரெயில்களையே தேர்வு செய்து வருகின்றனர். இதனால் அதிக தொழிலாளர்களை கொண்ட நிறுவனமாக இந்தியன் ரெயில்வே இயங்கி வருகிறது. அவ்வப்போது இந்தியன் ரெயில்வேயில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாவது வழக்கம்.

  இந்நிலையில், இந்தியன் ரெயில்வேயில் சுமார் 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக, ரெயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெயில்வேயின் பல்வேறு துறைகளில் உள்ள 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கு நாளை அறிவிப்பு வெளியாகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 28ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். 
   
  ஜூனியர் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், டைப்பிஸ்ட், டிராபிக் அசிஸ்டெண்ட், கூட்ஸ் கார்ட், சீனியர் கிளர்க், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.

  மேலும், மார்ச் மாதத்திலும் தொடர்ந்து காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது என தெரிவித்துள்ளது. #IndianRailwaysVacancies
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமாயண நிகழ்விடங்களுக்கு செல்லும் வகையில் ராமாயண யாத்திரை என்ற சிறப்பு சுற்றுலா ரெயிலை ரெயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரெயில் நெல்லை, மதுரை, திருச்சி மற்றும் சென்னை வழியாக இயக்கப்படுகிறது. #RamayanaYatra
  புதுடெல்லி:

  இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது ராமாயண யாத்திரை என்ற பெயரில் சுற்றுலா ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  அதாவது ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு பயணிகளை அழைத்து சென்று காண்பிப்பதே இந்த சுற்றுலாவின் நோக்கம் ஆகும். மத்தியபிரதேசத்தில் உள்ள சித்திரகுட், உத்தரபிரதேசத்தில் உள்ள ஸ்ரீவெங்வெர்புர், துளசிமான்ஸ் மந்திர், அயோத்தி, பீகார் மாநிலத்தில் உள்ள சீதா மார்கி (சீதை பிறந்த இடம்), தார்பங்கா, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு இந்த சுற்றுலா ரெயில் செல்கிறது.

  இந்த சிறப்பு ரெயில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேளியில் இருந்து வருகிற 31-ந் தேதி புறப்படுகிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு நெல்லையிலும், காலை 6.35 மணிக்கு மதுரையிலும், 9.45 மணிக்கு திருச்சியிலும், மாலை 4 மணிக்கு சென்னை எழும்பூரிலும் பயணிகள் ஏறுவதற்காக நின்று செல்லும்.

  இந்த ராமாயண யாத்திரை வருகிற செப்டம்பர் மாதம் 11-ந் தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. இதில் பயணிப்பதற்கு டீலக்ஸ், கம்போர்ட், ஸ்டேண்டர்டு ஆகிய 3 நிலைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  இதன்படி ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.39 ஆயிரத்து 350-ல் இருந்து, அதிகபட்சம் ரூ.60 ஆயிரத்து 750 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உணவு, தண்ணீர், பஸ் பயணம் அனைத்தும் இதில் அடங்கும். குழந்தைகளுக்கு கட்டண சலுகையும் உண்டு.

  இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு சென்னை, மதுரை, பெங்களூரு, மைசூரு, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் ரெயில்நிலையங்களின் சுற்றுலா பிரிவையோ அல்லது www.irctctourism.com என்ற இணையதள முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.

  மேற்கண்ட தகவலை இந்திய ரெயில்வேயின் சுற்றுலா பிரிவு மேலாளர் எல்.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.  #RamayanaYatra
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  1000 ஆண்டு பின்தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே நிர்வாகத்தின் தவறால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பயணிக்கு ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. #IndianRailway #Fined
  சஹரன்பூர்:

  உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் விஷ்ணுகாந்த் சுக்லா. இவர் கன்னஜ் நகருக்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். ரெயிலில் ஏறியும் விட்டார். டிக்கெட் பரிசோதகர் அவரை பரிசோதனை செய்தபோது டிக்கெட்டில் பயண தேதியில் 2013-ம் ஆண்டு என்பதற்கு பதிலாக 3013 என்று அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் ரூ.800 அபராதம் செலுத்துமாறு டிக்கெட் பரிசோதகர் கேட்டார். அவர் தர மறுத்தார். உடனே டிக்கெட் பரிசோதகர் அவரை நடுவழியில் இறக்கி விட்டார்.  மன உளைச்சலுக்கு ஆளான பயணி விஷ்ணுகாந்த் சுக்லா, சஹரன்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

  விசாரணையின்போது பயணி தான் டிக்கெட்டில் பயண தேதி சரியாக இருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும் என்று ரெயில்வே தரப்பில் வாதாடினர். ஆனால் அதை கோர்ட்டு நிராகரித்தது.

  முடிவில் பயணிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவு ரூ.3 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.  #IndianRailway #Fined 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அக்டோபர் 2-ந் தேதி ரெயில்களில் சைவ தின அனுசரிப்பு குறித்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. #VegetarianDay #IndianRailway
  புதுடெல்லி:

  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி 2018, 2019, 2020 ஆகிய 3 ஆண்டுகளிலும் அக்டோபர் 2-ந்தேதியை சைவ தினமாக அனுசரிக்க பரிந்துரை செய்து அண்மையில் ரெயில்வே வாரியம், மண்டல ரெயில்வே மேலாளர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியது.

  அதில், சைவ தின அனுசரிப்பையொட்டி அன்று ரெயில்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்வேயின் இதர கட்டிடங்கள் எதிலும் அசைவ உணவு வினியோகிக்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

  இதைத்தொடர்ந்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கும்படி அனைத்து மண்டலங்களின் ரெயில்வே தலைமை வர்த்தக மேலாளர்களுக்கும் ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்தது.  #VegetarianDay #IndianRailway
  ×