என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்"

    • கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, ஜனவரி 11, 18, 2026) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும்.
    • பயணிகளின் வசதிக்காக ஆந்திரா மற்றும் கேரளா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.07103/07104) இயக்கப்படும் என கடப்பா ரெயில்வே முதுநிலை வணிக ஆய்வாளர் ஏ.ஜனார்தன் தெரிவித்துள்ளார் .

    இந்த ரெயில் வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 5, 12, 19 மற்றும் ஜனவரி 9, 16, 2026) காலை 11 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தில் இருந்து புறப்படும். அதிகாலை 3.25 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்.

    இது அதே நாளில் இரவு 10 மணிக்கு காட்பாடி, ஜோலர்பேட்டை வழியாக கொல்லத்தை அடையும். கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, ஜனவரி 11, 18, 2026) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும். அதே நாளில் இரவு 9.50 மணிக்கு ரேணிகுண்டாவையும், 10.36 மணிக்கு கோடூரையும், 11.08 மணிக்கு ராஜம்பேட்டையையும், 11.53 மணிக்கு கடப்பாவையும் சென்றடையும்.

    இது நள்ளிரவு 12.28 மணிக்கு எர்ரகுன்லாவையும், மதியம் 12.53 மணிக்கு புரோட்டாத்தூரையும் சென்றடையும். பயணிகளின் வசதிக்காக ஆந்திரா மற்றும் கேரளா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    • வரும் நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்.
    • சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    பௌர்ணமி கிரிவல நிகழ்வை ஒட்டி நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

    • பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • திருச்செந்தூரில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06135), மறுநாள் காலை 8 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06136), மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
    • சென்டிரலில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06166), மறுநாள் காலை 10.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் சிறப்பு ரெயில் (06165) மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு நெல்லை வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில்,

    பயணிகள் முன்பதிவு மிக குறைவாக இருப்பதால் வருகிற 24 மற்றும் 26-ந் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    இதே தேதியில் நெல்லையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில், 28-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில், 29-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று (புதன்கிழமை) மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து கோட்டயம் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில், நாளை (வியாழக்கிழமை) கோட்டயத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு சென்னை சென்டிரல் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • நெல்லையில் இருந்து இரவு 11.55 மணிக்கு ரெயில் இயக்கப்படுகிறது.
    • மறுமார்க்கமாக வியாழக்கிழமை சென்னையில் இருந்து ரெயில் புறப்படுகிறது.

    தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கான சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். அவர்கள் நாளை முதல் சென்னை திரும்புவார்கள். இதனால் வழக்கமான பேருந்துகள், ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.

    தமிழக அரசு சிறப்பு பேருந்துக்கள் இயக்குகிறது. அதேபோல் தெற்கு ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.

    இந்த நிலையில் நாளைமறுநாள் புதன்கிழமை நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்.

    2 ஏசி மூன்றடுக்கு, 9 படுக்கை வசதி, 4 பொதுப்பெட்டிகளுடன் மதுரை, திருச்சி, அரியலூர் வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமை பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    • மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 24 ரெயில்கள் இன்று இயக்கப்பட உள்ளது.
    • கடந்த வியாழக்கிழமை 13 ரெயில்களும், நேற்று 24 ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரையில் எத்தனை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்ற தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தாம்பரம்-திருச்சி (வண்டி எண்.06191), திருச்சி-தாம்பரம் (06190), போத்தனூர்-சென்டிரல் (06050), தாம்பரம்-கன்னியாகுமரி (06133), மதுரை-தாம்பரம் (06162), எழும்பூர்-மதுரை (06045), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140), சென்டிரல்-போத்தனூர் (06049), மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 24 ரெயில்கள் இன்று இயக்கப்பட உள்ளது.

    19, 20 ஆகிய தேதிகளில்

    * திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), நெல்லை-மேட்டுப்பாளையம் (06030), நாகர்கோவில்-தாம்பரம் (06012), போத்தனூர்-சென்டிரல் (06044), நெல்லை-செங்கல்பட்டு (06154), செங்கல்பட்டு-நெல்லை (06153) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 19 ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    * தாம்பரம்-நாகர்கோவில் (06011), தூத்துக்குடி-எழும்பூர் (06018), சென்டிரல்-கன்னியாகுமரி (06151), மேட்டுப்பாளையம்-நெல்லை (06029), செங்கோட்டை-தாம்பரம் (06014), திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 23 ரெயில்கள் வருகிற 20-ந்தேதி இயக்கப்பட உள்ளது.

    20, 21 ஆகிய தேதிகளில்

    * எழும்பூர்-தூத்துக்குடி (06017), திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), நாகர்கோவில்-சென்டிரல் (06054), கன்னியாகுமரி- சென்டிரல் (06152), தூத்துக்குடி-எழும்பூர் (06018), நெல்லை-செங்கல்பட்டு (06156), செங்கல்பட்டு-நெல்லை (06155), போத்தனூர்-சென்டிரல் (06100), மதுரை-தாம்பரம் (06046), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 25 ரெயில்கள் வரும் 21-ந்தேதி இயக்கப்பட உள்ளன.

    * திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), சென்டிரல்-நாகர்கோவில் (06053), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140), நெல்லை-செங்கல்பட்டு (06156), செங்கல்பட்டு-நெல்லை (06155), சென்டிரல்-போத்தனூர் (06043) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 19 ரெயில்கள் வரும் 22-ந்தேதி இயக்கப்பட உள்ளன.

    தெற்கு ரெயில்வே முழுவதும் சிறப்பு ரெயில்களை பொறுத்த வரையில் கடந்த வியாழக்கிழமை 13 ரெயில்களும், நேற்று 24 ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளது. இதேபோல, இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரையில் மொத்தம் 110 ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 16-ந்தேதி முதல் வருகிற 22-ந்தேதி வரையில் மொத்தம் 147 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு நாளை 16-ந்தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் பகல் 1.25 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

    இந்த ரெயில் 17-ந் தேதி பிற்பகல் 3.35 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடைகிறது. இதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் 17, 18-ந்தேதியில் சென்ட்ரலில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூர் சென்று அடைகிறது. 18-ந்தேதி போத்தனூரில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.10 மணிக்கு சென்ட்ரல் வந்து அடைகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    • ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
    • வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் கிளாம்பாக்கம் சென்று பஸ் ஏறுவார்கள். இதனால் தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை அதிக கூட்ட நெரிசல் காணப்படும்.

    இதைத் தவிர்க்க தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரையில் வருகிற 17-ந் தேதி 3 பயணிகள் சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7.45, 7.53, 8.10 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். இந்த ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    இதே போல் வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி வருகிற 22-ந்தேதி காட்டாங்கொளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    • இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரெயிலில் 1300 பேர் உட்கார்ந்து செல்ல முடியும்.
    • மதுரையில் இருந்து சென்னைக்கு அன்று இரவே திரும்பும் வகையில் இந்த சேவை அமைகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    17, 18, 19 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு ரெயில்களில் இடமில்லை. அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மேலும் சில சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடிய மக்கள் வசதிக்காக மதுரை வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலை (மெமு) இயக்குவதற்கு ஆலோசிக்கப்படுகிறது. இந்த ரெயில் 12 பெட்டிகளுடன் பகல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது.

    இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரெயிலில் 1300 பேர் உட்கார்ந்து செல்ல முடியும். 700 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும் என்பதால் 2000 பேர் வரை பயணிக்கலாம்.

    கடைசி நேர கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தீபாவளிக்கு முதல் நாள் வீடு சேரும் வகையில் முன்பதிவு இல்லாத ரெயில் விடப்படுகிறது. இதே போல மதுரையில் இருந்து சென்னைக்கு அன்று இரவே திரும்பும் வகையில் இந்த சேவை அமைகிறது.

    மேலும் 18-ந்தேதி இரவு எழும்பூரில் இருந்து மதுரை அல்லது நெல்லைக்கு சிறப்பு ரெயில் இரவு 11 மணிக்கு மேல் இயக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. இது தவிர தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மாலையில் சிறப்பு ரெயில்களை அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தமிழ் செல்வன் கூறியதாவது:-

    ரெயில்களில் உள்ள காத்திருப்போர் பட்டியலை கண்காணித்து வருகிறோம். சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிக்கு செல்ல கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்க ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக மதுரைக்கு பகல் நேர முன்பதிவு இல்லாத ரெயில் இயக்கப்படும்.

    இரவிலும் சில ரெயில்களை இயக்க ஆலோசித்து வருகிறோம். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளிவரும். காலி ரெயில் பெட்டிகளை கணக்கெடுத்து அதற்கேற்ப சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அந்த நாட்களை கணக்கிட்டு கூடுதல் ரெயில்கள் விடப்படும்.

    மேலும் பீகார் மாநிலத்துக்கு செல்ல கூடிய ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

    அவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருக்கிறோம். கூட்ட நெரிசலை குறைக்க நடைமேடை டிக்கெட் நிறுத்தம் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகள் ஒரு சில முக்கிய ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்றார். 

    • ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு உயர்வு.
    • பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-யை தாண்டி உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு 15 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.

    ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு அதிகரித்து உள்ள நிலையில் குடும்பத்துடன் செல்லும் பெரும்பாலானோர் ரெயில்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

    பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-யை தாண்டி உள்ளது. ஆம்னி பஸ்களை விட ரெயில்களில் கட்டணம் குறைவு என்பதால் வழக்கமான ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காதோர் அடுத்ததாக பயணம் செய்யும் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க காத்து இருக்கிறார்கள்.

    எனவே தீபாவளியை முன்னிட்டு மேலும் கூடுதல் சிறப்பு ரெயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்களை இயக்க ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பெங்களூருவில் இருந்து 16-ந்தேதி மாலை புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை கொல்லம் சென்றடையும்.
    • கொல்லத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி மாலை புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை பெங்களூரு சென்றடையும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * பெங்களூருவில் இருந்து வருகிற 16-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06561), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06562), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    * பெங்களூருவில் இருந்து வருகிற 21-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் (06567), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06568), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    * பெங்களூருவில் இருந்து வருகிற 17, 21 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வரும் சிறப்பு ரெயில் (06297), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து வருகிற 18, 22 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06298), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லையில் இருந்து இன்று மாலை புறப்பட்டு நாளை திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
    • மதுரையில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை இயக்கப்படுகிறது.

    ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த மக்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு முன்பதிவில்லாத சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06014) நெல்லையில் இருந்து இன்று (அக்டோபர் 5ம் தேதி) மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு நாளை திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

    மேலும் இந்த சிறப்பு ரெயிலானது நெல்லையில் இருந்து 11-உட்காரும் சேர் கார் பெட்டிகள், 4-பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2-பொது இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என மொத்தம் 17 முன்பதிவில்லாத பெட்டிகளுடன் செல்கிறது.

    இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தன், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேலும், மதுரையில் இருந்து இன்று (அக்டோபர்-05) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×