என் மலர்
நீங்கள் தேடியது "அரக்கோணம்"
- சிக்னல்கள் இயங்க தடைபட்டதால் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
- தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மின் சாதன கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கும் புளியமங்கலம் ரெயில் நிலையம் இடையே மின்சாதன கோளாறு ஏற்பட்டது .
இதனால் சிக்னல்கள் இயங்க தடைபட்டதால் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மின் சாதன கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றன.
குறிப்பாக கோவையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குறித்த நேரத்திற்கு பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில்:-
மின்சார துண்டிப்பு, தண்டவாளம் பழுது, மின்சார கோளாறு என பல்வேறு காரணங்களால் அரக்கோணத்தில் ரெயில்கள் இயக்கம் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடும் அவதி அடைந்து வருகிறோம். அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளை மேற்பார்வையிட்டு இது போன்ற தவறை இனி நடக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
- சென்னை- பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாக சென்ற சரக்கு ரெயில் நார்த் கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.
சரக்கு ரெயில் தடம் புரண்டதை அடுத்து, சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை- திருத்தணி மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து, தடம் புரண்ட 3 பெட்டிகளை சரி செய்யும் பணியில் பணியாள்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
இதனால், சென்னை- பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பாலியல் ரீதியாக துன்புறித்து வருவதாகவும் கல்லூரி மாணவி குற்றச்சாட்டு.
- பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் வெளியிட்டுள்ளார். தெய்வச்செயலுக்கு பதிலாக கவியரசு அப்பதவியில் நியமிக்கப்படுவதாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவி ஒருவர், தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பாலியல் ரீதியாக துன்புறித்து வருவதாகவும், பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் சென்னை டிஜபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அத்துடன் இளம் பெண்களை திருமணம் செய்து அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சி செய்கிறார் சென்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த நிலையில்தான் தெய்வச்செயல் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- அரசியல் கட்சியினர் தலையீட்டால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு.
- 10ஆம் தேதி அன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது கல்லூரி மாணவி வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஆனார் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தன்னை குற்றவாளிகள் போல் காவல்துறை நடத்துகின்றன. அரசியல் தலையீடு காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் பெண்களை திருமணம் செய்து அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சி செய்கிறார். இதில் 20 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த மாணவி தெரிவித்தார்.
மாணவியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்து. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் அளித்த விளக்கத்தில்,
* அரசியல் கட்சியினர் தலையீட்டால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு
* 10ஆம் தேதி அன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* 20 வயதுள்ள பெண்கள் 20 பேர் பாதிப்பு என்று கூறும் பெண் அவர்களை பறறிய தகவல்களை கூறவில்லை.
* அரசியல் பிரமுகரின் பி.ஏ.-வுக்கு இரையாக்க முயற்சித்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
- வேலூர், அரக்கோணம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
- அப்போது பேசிய அவர், தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்றார்.
வேலூர்:
வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால் வாக்காளர்களான நீங்கள் 'அவர்களை' தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
தி.மு.க.வின் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைகிறார்கள். இன்று காலை, சமூக வலைதளத்தில் கனடா நாட்டின் பள்ளிகளில் உணவுத்திட்டம் வழங்கப்படுவதாக செய்தியைப் பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'ஒன்றிணைவோம் வா' என உங்களுக்காக பணியாற்றுவோம். ஆட்சியில் இருந்தால் திட்டங்களை நிறைவேற்றி 'நீங்கள் நலமா?' என உங்களிடம் கேட்போம்.
பொய்களையும், அவதூறுகளையும் துணையாக அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. தேர்தல் முடிந்ததும் அவர்கள் தமிழ்நாட்டின் பக்கமே வர மாட்டார்கள்; நிதி கேட்டா தர மாட்டார்.
பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?
இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய என் மீது, திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர்மீது வழக்குப்பதிவு செய்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
- வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு நகை கொள்ளை போனது தெரியவந்தது.
- ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அரக்கோணம்:
திருவள்ளூரை சேர்ந்தவர் மணிவண்ணன் இவருடைய மனைவி பிரித்தி (வயது 26). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் ஐதராபாத் சென்றனர். அங்கிருந்து தனது தாத்தா பாட்டி ஆகியோருடன் புறப்பட்டு வந்தனர்.
அவர்கள் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். ரெயிலில் வந்த போது மர்மநபர்கள் அவர்கள் பெட்டியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடினர்.
இதனை அறியாத மணிவண்ணன் குடும்பத்தினர் அரக்கோணம் வந்ததும் ரெயிலில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் கார் மூலம் திருவள்ளூர் சென்றனர். வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது தங்கள் பயணம் செய்த பெட்டியில் வட மாநில வாலிபர்கள் 4 பேர் இருந்தனர். அவர்கள் எங்களோடு பேசிக்கொண்டு வந்தனர். எங்கள் கவனத்தை திசை திருப்பி அவர்கள் நகையை கொள்ளையடித்திருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.
கொள்ளை நடந்த ரெயில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயிலில் படுத்திருந்ததால் வாலிபர் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தார்.
- பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அரக்கோணம்:
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்டிரலில் இருந்து புறப்பட்டது.
இந்த ரெயிலில் ஏ.சி.பெட்டியின் கழிவறை அருகே வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். ஓடும் ரெயிலில் படுத்திருந்ததால் வாலிபர் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தார்.
இதனால் பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரெயில் பயணிகள் வாலிபரை எழுப்ப முயன்றனர். முடியாததால் இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் அளித்தனர்.
டிக்கெட் பரிசோதகர் வாலிபரை எழுப்ப முயன்றார். அப்போது தான் அவர் மது போதையில் படுத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில் அரக்கோணம் வந்ததும், தயாராக இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கழிவறையின் அருகே படுத்திருந்த போதை வாலிபரை தூக்கி வெளியே இழுத்து பிளாட்பாரத்தில் போட்டனர்.
இதனால் ரெயில் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போதை வாலிபர் எழுந்திருக்க முடியாமல் பிளாட்பாரத்திலும் படுத்துக்கொண்டு உருண்டார்.
மேலும் அந்த நபர் யார்? எங்கிருந்து பயணம் செய்கிறார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தண்ணீரை வித்தியாசமாக குடிப்பது போன்று சேட்டைகள் செய்ய ஆரம்பித்தார்.
- மேஜையின் அடியில் படுத்துக்கொண்டார்.
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று வட மாநில வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார்.
திடீரென விலங்குகள் நடப்பது போன்று நடைமேடையில் நடந்தார். பின்னர் நாய் போல குரைத்தார். குழாயில் வந்த தண்ணீரை வித்தியாசமாக குடிப்பது போன்று சேட்டைகள் செய்ய ஆரம்பித்தார்.
இதனை வேடிக்கை பார்த்த பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் வட மாநில வாலிபர் செயலைப் பார்த்து அச்சமடைந்தனர்.
வட மாநில வாலிபர் எங்கே நம்மிடம் வந்து விடுவாரோ என்று எண்ணி பயணிகள் மெல்ல மெல்ல நகர்ந்தனர்.
ரெயில்வே போலீசார் அவரது அருகே சென்றனர். கையில் லத்தியுடன் வருவதை பார்த்த வட மாநில வாலிபர் ஓட்டம் பிடித்தார். மேலும் ரெயில்வே அதிகாரி அலுவலகத்திற்குள் புகுந்தார். அங்கிருந்த பெட் துணி போடப்பட்டிருந்த மேஜையின் அடியில் படுத்துக்கொண்டார்.
பின்னர் அந்த துணியை விலக்கி விலக்கி பார்த்தார். இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் வட மாநில வாலிபரிடம் இருந்த பையை ஆய்வு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவரிடம் இருந்த ஒரு சீட்டில் செல்போன் எண் ஒன்று இருந்தது. அதனை ரெயில்வே போலீசார் தொடர்பு கொண்டனர்.
செல்போனில் பேசியவர் வடமாநில வாலிபர் தனது தம்பி என்று கூறினார். இதனையடுத்து ரெயில்வே போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு வரும்படி கூறினர்.
இதற்கிடையில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதி ரெயில்வே டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.
ரெயில்வே டாக்டர் போலீசாரிடம் வட மாநில வாலிபருக்கு ஒன்றும் இல்லை நன்றாக தான் உள்ளார் என்று கூறினார். ஏதோ விரக்தியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்று கூறினார்.
வாலிபரின் அண்ணனிடம் நடந்தவைகள் பற்றி ரெயில்வே போலீசார் கூறினர். அந்த வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபு குமார் ஷர்மா என்றும், தற்போது இவருக்கு வேலை இல்லாததால் அண்ணனைத் தேடி வந்ததும் தெரியவந்தது.
ஏன் இப்படி இவர் செய்கிறார் என்று ரெயில்வே போலீசார் கேட்டபோது தனக்கு தெரியவில்லை என்று வாலிபரின் அண்ணன் கூறினார்.
இதனையடுத்து கடிதம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டு ரெயில்வே போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடும் வயிறு வலி ஏற்பட்டதாக கூறி ரெயிலில் உருண்டு புரண்டு துடித்தார்.
- சக பயணிகள் பரிதாபப்பட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர்.
அரக்கோணம்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீராஜ்குமார். இவர் பெங்களூரு செல்வதற்காக பீகாரில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
ரெயில் பெரம்பூர் வந்த போது அவருக்கு பல்வலி ஏற்பட்டது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை. பல்வலி என்றால் சிகிச்சை அளிக்க மாட்டார்கள். வயிறு வலி என கூறினால் உடனடி சிகிச்சை கிடைக்கும் என நினைத்தார்.
தனக்கு கடும் வயிறு வலி ஏற்பட்டதாக கூறி ரெயிலில் உருண்டு புரண்டு துடித்தார். வலி தாங்க முடியாதவர் போல் நடித்து அட்டகாசம் செய்தார். சக பயணிகள் பரிதாப பட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர்.
மேலும் அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே நிலைய மேலாளர் அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனை டாக்டர்கள், உதவியாளர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை என குழுக்களாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
ரெயிலில் பயணம் செய்பவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி நடைமேடை 1-ல் அனுமதித்து ரெயிலை நிறுத்தினர்.
தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் நீராஜ்குமாரை வெளியே அழைத்து வந்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் நீராஜ் குமார் வயிற்றை காண்பிக்காமல் வாயை திறந்து பல்வலி என கூறினார்.
இதனை பார்த்து ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயிற்று வலிக்கான மாத்திரை மருந்துகளை தயார் நிலையில் வைத்திருந்த நிலையில் பல் வலி என கூறியதால் ரெயில்வே டாக்டர்கள் கடிந்து கொண்டனர். பல் வலிக்கான மாத்திரையை வழங்கினர்.
மேலும் அந்த நபரை இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனக் கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனால் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






