என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு- எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
- சிக்னல்கள் இயங்க தடைபட்டதால் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
- தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மின் சாதன கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கும் புளியமங்கலம் ரெயில் நிலையம் இடையே மின்சாதன கோளாறு ஏற்பட்டது .
இதனால் சிக்னல்கள் இயங்க தடைபட்டதால் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மின் சாதன கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றன.
குறிப்பாக கோவையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குறித்த நேரத்திற்கு பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில்:-
மின்சார துண்டிப்பு, தண்டவாளம் பழுது, மின்சார கோளாறு என பல்வேறு காரணங்களால் அரக்கோணத்தில் ரெயில்கள் இயக்கம் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடும் அவதி அடைந்து வருகிறோம். அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளை மேற்பார்வையிட்டு இது போன்ற தவறை இனி நடக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






