search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்"

    • சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் மணல் கொட்டப்பட்டிருக்கலாம் எனத் தகவல்.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் மண்ணை கொட்டிய லாரி டிரைவர் தப்பி ஓடிய நிலையில், லோகோ பைலட் துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ் சிங் ரெயில் நிலையே அருகே ரெயில் தண்டவாளத்தில் மண் குவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக லோகோ பைலட்டிற்கு தகவல் கிடைத்ததும், அவர் ரேபரேலியில் இருந்து ரகுராஜ் சிங் நிலையம் வரவிருந்த ரெயில்லை தகவல் கொடுத்து நிறுத்தினார்.

    இதனால் பயணிகள் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது. பின்னர் தண்டவாளத்தில் கொட்டிய மணலை அகற்றியபின் ரெயில் சேவை தொடங்கியது.

    அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும், அதற்கு மணல் கொண்டு வந்த லாரி டிரைவர் தண்டவாளத்தில் மணலை கொட்டிவிட்டு சென்றிக்கலாம் எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

    மணலை கொட்டிச் சென்ற டிரைவர் போலீசார் தேடிவருகின்றன. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசேஷ நாட்களில் வெளியூர் பயணம் அதிகரிப்பது வழக்கம்.
    • வந்தே பாரத் ரெயில்களும் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர் பயணம் அதிகரிப்பது வழக்கம். வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப் படும் தசரா பண்டிகை நேற்று தொடங்கியது.

    இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்திலும் இடங்கள் நிரம்பின.

    தமிழகத்தில் ஆயுதபூஜை, வருகிற 11-ந் தேதி (வெள்ளிக் கிழமை), 12-ந் தேதி (சனிக்கிழமை) விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.


    இதனை தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் எல்லா ரெயில்களிலும் 10-ந் தேதி (வியாழக்கிழமை) பயணத்திற்கான இடங்கள் நிரம்பின.

    குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் நெல்லை, முத்து நகர், அனந்தபுரி, திருச்செந்தூர், பொதிகை, பாண்டியன், கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன.

    இதேபோல கோவை செல்லக் கூடிய ரெயில்களில் இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீடிக்கிறது. பெங்களூர் பயணத்திற்கும் இடமில்லை. சிறப்பு ரெயில்களும் நிரம்பிவிட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில்களும் நிரம்பிவிட்டன. தீபாவளி, பொங்கல், வரை அதில் இடமில்லை.

    ஆயுதபூஜை விடுமுறை பயணத்திற்கு இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் முன்பதிவு விறு விறுப்பாக இருக்கும் என்று அரசு விரைவு போக்கு வரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரி வித்தார்.


    ஆயுத பூஜை விடுமுறையை யொட்டி வருகிற 9, 10-ந் தேதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றிய அறிவிப்பு 7-ந் தேதி வெளியிடப்படும்.

    பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணத்தை தொடர முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் 14 அல்லது 15-ந் தேதி நடைபெறும்.

    அதில் தமிழகம் முழுவ தும் சிறப்பு பஸ்கள் இயக்கு வது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பஸ்கள் வந்துள்ளன. பழைய பஸ்களுக்கு பதிலாக இவை இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலத்தை ஹைட்ராலிக் எந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    தற்போது பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலத்தை பொருத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 650 டன் கொண்ட தூக்கு பாலத்தை ஹைட்ராலிக் எந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தை திறந்து மூட இருபுற எடையும் சமமாக இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தூக்கு பாலத்தில் மேலே உள்ள இரு பெட்டிகளில் தலா 300 டன் வீதம் 600 டன் இரும்பு பட்டைகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த சில நாட்களாக 600 டன் இரும்பு பட்டைகளை அதி நவீன கிரேன் மூலம் ஏற்றும் பணி கடும் சிரமத்திற்கிடையே நடந்து வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    600 டன் இரும்பு பட்டை பொருத்தும் பணி இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என ரெயில்வே என்ஜீனியர்கள் தெரிவித்தனர். அதன்பின் தூக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெறும்.

    • தண்டவாளத்தின் நடுவில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.
    • ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை 6.25 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

    பாம்புச்சந்தை ரெயில் நிலையத்திற்கும், சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திற்கும் இடையே சங்கனாப்பேரி பகுதியில் மாலை 6.50 மணிக்கு ரெயில் வந்தபோது, தண்டவாளத்தின் நடுவில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.

    உடனடியாக சாமர்த்தியமாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் அந்த கல்லை அகற்றிவிட்டு சுமார் 20 நிமிடம் தாமதமாக ரெயில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நெல்லை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்தனர்.

    தொடர்ந்து தண்டவாளங்களை ஆய்வு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா, என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பாறாங்கல்லை வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து இன்று 2-வது நாளாக ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவம் நடந்த நாளன்று அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் வாகனங்கள் வந்துள்ளதா? அங்கு திட்டமிட்டு ஏதேனும் கும்பல் வந்ததா? அல்லது குடிபோதையில் யாரேனும் இந்த செயலை செய்தார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ஆவடி- மூர்மார்க்கெட் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
    • மின்சார ரெயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு சில ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள ஆவடி பணிமனையில் இன்று (25-ந்தேதி) முதல் 27-ந் தேதி வரையில் இரவு 12.30 மணி முதல் காலை 3.30 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 27-ந்தேதி வரை இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ஆவடி- மூர்மார்க்கெட் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 27-ந்தேதி வரை காலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரால் வரும் மின்சார ரெயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இதற்கு ஏற்றவாறு பயணிகள் தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்பதிவு இல்லாத பெட்டியின் சீட்டில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கோவை:

    சென்னையில் இருந்து கோவைக்கு சம்பவத்தன்று இரவு கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், ஊழியர்கள் ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியின் சீட்டில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.

    இதை பார்த்ததும் ரெயில் பணியாளர்கள் அதிர்ச்சியாகினர். உடனடியாக இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் கஜேந்திரன், ரம்யா ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர்.

    அங்கு குழந்தை தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையை போலீசார் மீட்டனர்.

    அந்த குழந்தையை ரெயிலில் அழைத்து வந்தது யார்? அதனுடைய தாய் யார்? என்பது தெரியவில்லை.

    இதையடுத்து போலீசார் குழந்தையை குழந்தைகள் நல அலுவலர் மூலம் கிணத்துக்கடவு பகுதியில் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    அந்த குழந்தையை ரெயிலில் பயணித்த பயணி மறந்து போய் விட்டு சென்றாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி லூப் லைன் வழியாக சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

    செப்டம்பர் 9ம் தேதி கான்பூர்-காஸ்கஞ்ச் வழித்தடத்தில் பயணித்த காளிந்தி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்து கேஸ் சிலிண்டருடன் மோதியது. இதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், ரெயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

    இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

    • உத்தரப்பிரதேசத்தில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் செனறனர்.
    • உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல.

    பிரேக் டவுன் ஆகிவிட்ட பேருந்தை பயணிகள் பலரும் தள்ளி செல்லும் காட்சியை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் பழுதாகி நின்ற ரெயிலை யாரவது தள்ளிச் செல்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல. இந்தாண்டு மார்ச் மாதம் அமேதி மாவட்டத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கான ரெயில் சென்றுகொண்டிருக்கும்போது நடுவழியிலேயே பழுதாகி நின்றதால் தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரெயிலை ஊழியர்கள் தள்ளிச் சென்றுள்ளனர்.

    • வயல் வெளியில் நிற்கும் ரெயிலை சூழ்ந்து அதிசயமான கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளார்.
    • ரெயிலைக் கொண்டு வயலை உழுது பண்படுத்தும் அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கிண்டலடித்து வருகிறனர்.

    பீகாரில் வயல்வெளிக்குள் சம்பந்தமே இல்லாமல் கட்டப்பட்ட பாலம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பீகாரின் கயா மாவட்டத்தில் ரகுநாத்பூர் கிராமத்தின் அருகே உள்ள வயல்வெளியில் ரெயில் இன்ஜின் பெட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை எந்த சம்பந்தமும் இல்லாமல் தனிமரமாகக் நின்று கொண்டிருத்தத்தை பார்த்து கிராமவாசிகள் திகைத்துள்ளனர்.

    வயல் வெளியில் நிற்கும் ரெயிலை சூழ்ந்து அதிசயமான நிகழ்வாக கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் ரெயிலைக் கொண்டு வயலை உழுது பண்படுத்தும் அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கிண்டலடித்து வருகிறனர்.

    வாசிர்கஞ் ரெயில் நிலையத்தில் இருந்து எந்த பெட்டிகளும் இல்லாமல் வந்த ரெயில் இன்ஜின் கயா நோக்கி செல்லும் வழியில் தடம் புரண்டு வயல்வெளிக்குள் சென்றுள்ளதாக பின்னர் தெரிவியவந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரெயில் அதிகாரிகள் தரப்பில் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.

    • உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ-கான்பூர் இடையே செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் [Humsafar Express] விரைவு ரெயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது
    • தனது பெர்த் -இல் வந்து அமரும்படி அழைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

    ஓடும் ரெயிலில் 11 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ரெயில்வே ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ-கான்பூர் இடையே செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் [Humsafar Express] விரைவு ரெயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

    தனது குடும்பத்துடன் பயணித்துக்கொண்டிருந்த 11 வயது சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்த பிரசாந்த் குமார் [34 வயது] என்ற ரெயில்வே ஒப்பந்த ஊழியர் தனது பெர்த் -இல் வந்து அமரும்படி அழைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

    தனது தாய் வந்தவுடன் அந்த சிறுமி நடந்ததைக் கூறவே, சிறுமியின் குடும்பத்தினரும், அந்த பெட்டியில் பயணித்த சக பயணிகளும் இணைந்து பிரசாந்த் குமாரை சுமார் ஒன்றரை மணி நேரமாக சரமாரியாகத் தாக்கினர். பின் கான்பூர் சென்ட்ரல் ஸ்டேஷனில் அவர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 

    • உத்தரப் பிரதேசத்தின் லக்ஹிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள உமாரியா கிராமத்தின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • தண்டவாளத்தில் நின்றுகொண்டு சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்காக ரீலிஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கணவன் மனைவி மற்றும் அவர்களது 3 வயது மகன் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் லக்ஹிம்பூர் கேரி [Lakhimpur Kheri] மாவட்டத்தில் உள்ள உமாரியா[Umariya] கிராமத்தின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அருகே உள்ள சீதாபூர் மாவட்டத்தின் லஹர்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது அகமது (26 வயது), அவரது மனைவி நஜ்னீன் (24 வயது) இன்று காலை 11 மணி அளவில் அவர்களது 3 வயது மகன் அப்துல்லாவுடன் உமாரியா கிராமத்தின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்காக ரீலிஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரெயில் அவர்கள் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். அவர்களது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

    • தமிழ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் இளையராஜா.
    • இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.

    இசைஞானி இளையராஜா லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு ரெயில் பயணம் மேற்கொள்ளும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில் 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

    தமிழ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக இருந்த இளையராஜா தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

    இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க நடிகர் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×