என் மலர்
நீங்கள் தேடியது "train toilet"
- தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பிழைப்பிற்காக நாட்டை விட்டோ அல்லது மாநிலம் தாண்டியோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலானவர்கள் சொந்த ஊர், குடும்பத்தினர்கள், உறவினர்களை விட்டு பிரிந்து சென்று பணி செய்யும் சூழ்நிலையில் ஆண்டுக்கு முறையோ, பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, பண்டிகை, சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ சொந்த ஊருக்கு வருவார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் ரெயில்கள் முன்பதிவு செய்தும், முன்பதிவில்லாமலும் படிக்கட்டுகளில் நின்று பயணிப்பது என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகவே உள்ளது.
இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை பார்த்து, பலரும் அடடே! இது நமக்கு தோன்றாமல் போனதே என்று யோசிக்கும் அளவிற்கு உள்ளது.
விஷால் என்பவர் பகிர்ந்து வீடியோவில், ஒரு நபர் ரெயில் கழிப்பறையை தனது படுக்கையறையாக மாற்றி பயணிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிளாட்பாரத்தில் ரெயில் வந்து நின்ற போது இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த விஷால் வீடியோ எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் சென்று கழிவறையை ஒரு படுக்கையறையாக மாற்றியுள்ளீர்கள் என்று கூறும் விஷால் அந்த நபர் வைத்துள்ள பொருட்களை வீடியோவில் காட்டுகிறார். மேலும் இதெல்லாம் உங்கள் வீட்டுப் பொருட்களா? என்று விஷால் கேட்க அந்த நபரோ, அலட்சியமாக ஆம் என்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தள பயனர்களிடையே, இந்திய ரெயில்களின் நிலை, இடப்பற்றாக்குறை, பொது சொத்துக்களை பயணிகள் மதிக்காதது குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. மேலும் விவாத பொருளாகவே மாறியுள்ளது.
- கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணத்தில் இருந்து காட்பாடி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.
இதில் ரிஸ்வான் (வயது 22) என்பவர் பொதுப்பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிக்னல் காரணமாக மேல்பாக்கத்தில் ரெயில் நின்றது.
வெகு நேரமாக ரெயில் செல்லாததால் பொதுப் பெட்டியில் பயணம் செய்த ரிஸ்வான் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் முன்பதிவு செய்த பெட்டியின் அருகே சென்றார்.
ரெயில் அங்கிருந்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த ரிஸ்வான் கீழே இருந்த கல்லை எடுத்து முன்பதிவு பெட்டியின் கழிவறையின் கண்ணாடி மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் கழிவறையின் கண்ணாடி உடைந்தது.
சிறிது நேரத்திற்கு பின்பு ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ரிஸ்வானை பிடித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரெயில்வே போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வாலிபர் மரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பி வந்து கொண்டிருந்தது. இதில் முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்து வந்து கொண்டிருந்தனர்.
இந்த பொதுப் பெட்டியில் உள்ள கழிப்பறையில் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உள்ளே சென்றார். பின்னர் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை.
கதவு நீண்ட நேரம் திறக்கவில்லை. பயணிகள் கதவை தட்டினாலும் பதில் இல்லை. அப்போது அந்த ரெயில் சேலத்தைத் தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனை அடுத்து இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் நிலையில் இருந்தனர்.
பின்னர், அந்த ரெயில் ஈரோடு இரண்டாவது நடைமேடையில் வந்து நின்றது. அங்கு தயாராக இருந்த ஈரோடு ரெயில்வே போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த நபர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நபர் எப்படி இறந்தார் என தெரியவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபர் சந்தன கலர் முழுக்கை ரவுண்ட் நெக் பனியன் அணிந்திருந்தார். ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிதிருந்தார். நெற்றியின் வலது பக்கம் ஒரு கருப்பு மச்சம் இருந்தது. வலது கால் முட்டியில் ஒரு கருப்பு மச்சம் உள்ளது. வலது தொடையின் வெளிப்புறத்தில் ஒரு காய தழும்பு உள்ளது.
மேலும், அந்த நபரின் சட்டை பையில் ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட் இருந்தது. மற்றபடி எந்த ஒரு பொருட்களும் பைகளும் சிக்கவில்லை. அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






