என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அமெரிக்காவில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    அச்சமயம், அதிபர் டிரம்ப் கண்களை மூடி தூங்கிக்கொண்டுள்ளார். டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவு செயலாளர் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த மக்கள், 79 வயதான டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை இந்த வீடியோ காட்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர். 



    • இரவு 12 மணிக்கு மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்தார்.
    • இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும், சத்தம்கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்துவிட்டு தூங்கினார்.

    பொதுவாக நமக்கு நெருங்கியவர்களின் பிறந்தநாளில் அவர்களுக்கு தெரியாமல் இன்ப அதிர்ச்சியூட்டும் விதமாக திடீரென வாழ்த்து தெரிவிப்போம். அந்த வகையில் கணவர் ஒருவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு அவருக்கு தெரியாமல் முன்கூட்டியே பிரிட்ஜில் கேக் வாங்கி வைத்தார்.

    இரவு 12 மணிக்கு மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்தார். இவரது மனைவியோ இரவு 9½ மணிக்கே தூங்கிவிட்டார். பின்னர் இவரும் செல்போனில் படம் பார்த்துக்கொண்டே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும், சத்தம்கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்துவிட்டு தூங்கினார். இந்நிலையில் காலையில் எழுந்து பிரிட்ஜை திறந்த மனைவிக்கு கேக்கை பார்த்ததும் அதிர்ச்சி. அப்போது அவர் கோபப்படாமல் சிரித்தபடி கணவர் தனக்காக செய்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். இதையடுத்து கேக் வெட்டுவதுபோன்ற வீடியோ எடுத்து தனது கணவருக்கு காண்பித்தார்.

    இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்று வைரலாகி வருகிறது.



    • வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
    • இச்சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கும், மருத்துவத்துக்கும் மட்டுமே அதிக செலவாகிறது. இதிலும் பிள்ளைகளின் கல்விக்காக மழலையர் வகுப்பு தொடங்கி பட்டயப்படிப்பு வரை பெற்றோர் செய்யும் செலவு சொல்லி மாளாது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

    தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து, வளர்ந்து, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையில் தான் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் சத்தீஸ்கரில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து வெளியாகி உள்ள வீடியோ, மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே அடிப்படை கற்றல் கூட தெரியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியரான கமலேஷ் பாண்டே தொடக்கப் பள்ளியில் ஆங்கில வகுப்பை எடுக்கிறார். அப்போது, Friday-க்கு பதில் FarDay, என்றும் Saturday-க்கு பதில் Saterday என்றும் பலகையில் எழுதுகிறார். Father, Mother, Brother, Sister என்று குடும்ப உறுப்பினர் சொற்களுக்கு முறையே Farder, Mader, Barpr, Sester என்றும், அதேபோல் Nose, Ear, Eye-க்கு பதில் Noge, eare, iey என்று கரும்பலகையில் எழுதி மாணவர்களையும் சொல்லச் சொல்லி நோட்டில் எழுதிக்கொள்கின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

    இதனிடையே, தொடக்கப்பள்ளியில் 42 குழந்தைகள் படித்து வருவதாகவும், அவர்களுக்கு கல்வி கற்க இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் அடிக்கடி பள்ளிக்கு குடிபோதையில் வந்து வகுப்பு நேரங்களில் தூங்குவதாகவும், மற்றொருவர் தவறான எழுத்துப்பிழைகளைக் கற்பிப்பதாகவும் கிராமவாசிகள் குற்றம் சாட்டினர்.

    இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

    • ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார்.
    • இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.

    முன்பெல்லாம் குழந்தைகள் கதை கேட்டு தூங்கிய காலம் போய், தற்போது செல்போன் பார்த்து விட்டு தான் தூங்கும் நிலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைக்கு பாடம் புகட்ட தாய் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் இருக்கிறார். அவரது கண்ணை சுற்றி அவரது தாய் கருப்பு மையை தடவி விட்டுள்ளார். ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார். உடனடியாக அந்த குழந்தை கண்ணாடியை பார்த்து அழத் தொடங்குகிறது. இனிமேல் செல்போன் பார்ப்பியா? என தாய் கேட்கும் போது, குழந்தை அழுதபடி தலையசைத்து மறுக்கிறது. மேலும் குழந்தை எனது கண்கள் சிவப்பாகுமா? என கேட்கும் போது அவரது தாய், இல்லை… கருப்பாகும் என கூறுகிறர்.

    இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் சிலர், இது சூப்பர் ஐடியா, எல்லா அம்மாவும் இதை முயற்சி செய்ய வேண்டும் என்று பாராட்டி பதிவிட்டனர்.

    • கார் பழுதாவது தொடர் கதையானது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சங்கடே. இவர் சமீபத்தில் புதிதாக ஒரு கார் வாங்கினார். ஆனால் அந்த காரில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தான் கார் வாங்கிய ஷோரூம் நிறுவனத்தினரிடம் புகார் செய்தார். ஆனாலும் அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.

    எனவே கார் பழுதாவது தொடர் கதையானது. இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ் சம்பவத்தன்று நூதன போராட்டத்தை நடத்த திட்டமிட்டார். அதன்படி தனது புது காரை மேள தாளங்கள் முழங்க கழுதைகளை வைத்து இழுத்து வந்து ஷோரூம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • குழந்தைகள் உள்ள வீடு என்றாலே பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருமே தூக்கத்தை தொலைக்க வேண்டி இருக்கும்.
    • வீடியோ சுமார் 9 லட்சம் பேரின் விருப்பங்களை பெற்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணியாற்றி வரும் நடிகர் சோமேந்திர சோலங்கி. சீன பெண்ணை மணந்த அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. பொதுவாக குழந்தைகள் உள்ள வீடு என்றாலே பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருமே தூக்கத்தை தொலைக்க வேண்டி இருக்கும்.

    அந்தவகையில், சோமேந்திர சோலங்கியின் குழந்தையும் இரவில் தூங்காமல் அழுது கொண்டே இருந்தது. இதற்கு தீர்வாக அந்த குழந்தையின் தாத்தா சீனாவில் இருந்து ஒரு நவீன எந்திரத்தை வாங்கி சென்று அவர்களுக்கு பரிசளித்தார்.

    அந்த எந்திரத்தில் 5 விரல்களுடன் கை போன்ற ஒரு அமைப்பு உள்ளது. குழந்தை தூங்கினாலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்த விரல்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறது. இதன்மூலம் குழந்தை மட்டுமின்றி தாங்களும் நிம்மதியாக உறங்குவதாக அவர் பேசிய வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சுமார் 9 லட்சம் பேரின் விருப்பங்களை பெற்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • தனது வீட்டின் விலை மிகவும் அதிகம். ஆனால் கட்டுமானத்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
    • பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பென்சிலால் கூட வீட்டு சுவரில் துளைகள் போட முடிகிறது.

    பொது மக்கள் தங்கள் கனவு இல்லத்தை கட்டுவதற்காக பல லட்சங்கள் முதல் கோடிகள் வரை செலவழிக்கின்றனர். ஆனால் சில இடங்களில் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டின் கட்டுமானத்தை தரமில்லாமல் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ரூ.1½ கோடி மதிப்பில் கட்டப்பட்ட வீட்டின் தரம் மோசமாக இருப்பதை காட்டுவதற்காக வீட்டு உரிமையாளர் வீட்டு சுவற்றில் பென்சிலால் ஓட்டை போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கபீர் என்ற அந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் தனது வீட்டின் விலை மிகவும் அதிகம். ஆனால் கட்டுமானத்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பென்சிலால் கூட வீட்டு சுவரில் துளைகள் போட முடிகிறது என கூறியவாறு அவர், பென்சிலை வைத்து சுத்தியலால் சுவற்றில் தட்டுகிறார். அப்போது பென்சில் சுவற்றில் துளையிடும் காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், வீடு கட்டும் போது கட்டுமான பணிகளை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக பதிவிட்டனர்.

    • ஷோரூம் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நாணயங்களை தரையில் கொட்டி எண்ணத்தொடங்கினர்.
    • சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் ஸ்கூட்டர் வாங்கித்தருமாறு கேட்டார்.

    மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் அருகே உள்ள மவுலா பகுதியை சேர்ந்தவர் பச்சு சவுத்ரி. இவர் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஒரு பெரிய டிரம்முடன் ஸ்கூட்டர் ஷோரூமுக்கு சென்றார். அங்கிருந்த ஊழியர்களிடம் எனது மகளுக்கு புது ஸ்கூட்டர் வேண்டும் என கூறிய அவர், அதற்கான தொகையாக நான் 4 ஆண்டுகளாக சேமித்து வைத்த நாணயங்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

    ஷோரூம் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நாணயங்களை தரையில் கொட்டி எண்ணத்தொடங்கினர். 2 மணிநேரமாக நடந்த நாணயங்கள் எண்ணும் பணியின் முடிவில் மொத்தத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நாணயங்கள் இருந்தது. அவற்றை பெற்றுக்கொண்டு ஸ்கூட்டர் வழங்கினர்.

    இதுகுறித்து பச்சு சவுத்ரி கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் ஸ்கூட்டர் வாங்கித்தருமாறு கேட்டார். அப்போது அவரது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் நாணயங்கள் சேகரிக்க தொடங்கினேன். தற்போது அவரது ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்றார்.

    • வன விலங்கு மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வீடியோ காட்டுவதாக பலரும் பதிவிட்டனர்.

    குளிர் மற்றும் மழை காலங்களில் பாம்புகள் வெப்பம் தேடி வாகனங்களுக்குள் தஞ்சமடையும் சம்பவங்கள் நிகழ்ந்தது உண்டு. இந்நிலையில் தமிழ்நாட்டின் நாமக்கல்-சேலம் சாலையில் கார் ஓட்டி சென்ற ஒருவர் காரின் கண்ணாடியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    அதில், கார் டிரைவர் நெடுஞ்சாலையில் கார் ஓட்டி செல்கிறார். அப்போது காரின் பக்கவாட்டு கண்ணாடியில் ஏதோ அசைவு இருப்பதை கண்டார். அப்போது கண்ணாடியின் மறைவில் இருந்து ஒரு பாம்பு வெளியே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து வெளியேறினார்.

    பின்னர் அவ்வழியே சென்றவர்கள் வன விலங்கு மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் அந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றனர். இதுகுறித்த காட்சிகள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ காட்டுவதாக பலரும் பதிவிட்டனர்.



    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
    • சமூக வலைதள புகழுக்காக வரம்புகளை மீறக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    ஓடும் ரெயிலின் ஸ்லீப்பர் கோச் பெட்டியில் இருக்கைகளுக்கு அருகே நடைபாதையில் ஒரு வாலிபர் குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜான்சி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் ஸ்லீப்பர் கோச்சில் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து குவளை மூலம் எடுத்து தனது தலையில் ஊற்றி குளிக்கிறார். மேலும் அவர் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். இதற்கிடையே ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் ஜான்சி பகுதியை சேர்ந்த பிரமோத் ஸ்ரீவாஸ் என்பது தெரியவந்தது. அவர் சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு குளித்து ரீல் வீடியோ எடுத்து பதிவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சமூக வலைதள புகழுக்காக வரம்புகளை மீறக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.



    • அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
    • பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஹாங்கி என்று பெயரிடப்பட்ட அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஷுவாங்ஜியாங்கோ நீர்மின் நிலையத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

    இதையடுத்து 758 மீட்டர் நீளமுள்ள ஹாங்கி பாலத்தில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.



    • ரோபோ எந்திரம் நீங்கள் விரும்பும் ஸ்டைலில் முடிவெட்ட காத்திருக்கிறது.
    • வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அழகாக முடிவெட்டிக் கொள்வது சவாலான வேலையாக மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும் நண்பர்கள் நம்மை கேலி செய்யாத அளவுக்கு அழகான சிகை அலங்காரம் அமைவதற்கு தனி முடி திருத்துனரை தேர்வு செய்து, காத்திருந்து கத்தரித்துக் கொண்டால்தான் உண்டு.

    ஆனால் இனி அந்தக் கவலையில்லாமல் ரோபோ எந்திரம் நீங்கள் விரும்பும் ஸ்டைலில் முடிவெட்ட காத்திருக்கிறது. ஆம்... அப்படியொரு எந்திரத்தில் வாலிபர்கள் சிலர் முடிவெட்டி சிகை அலங்காரம் செய்து கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நிஜம்தான், அது கற்பனை சினிமா காட்சியல்ல. 'ஆட்டோ ஸ்ட்ரீட் பார்பர்' என குறிப்பிடப்படும் அந்த எந்திரம், ராட்சத ஸ்பீக்கர் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. அதில் விரும்பிய ஸ்டைல் குறித்த கட்டளைகளை சொடுக்கி வாஷிங்மெஷின் கதவு போன்ற ஒரு திறப்புக்குள் நமது தலையை நுழைத்தால் போதும், சில வினாடிகளில் சிகை அலங்காரத்தை முடித்து விடுகிறது ரோபோ. அதிகபட்சம் ஒரு நிமிடம் கூட ஆகாது.

    இந்த எந்திரங்கள் நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ சிகை அலங்கார பிரியர்களால் ஆச்சரியத்துடன் பரப்பப்பட்டு வருகிறது.



    ×