search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E rickshaw"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பின்னால் தொங்கியநிலையில் ஆட்டோ வேகமாக செல்லும் காட்சி பதிவு.
    • வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    கேஸ் சிலிண்டர் திருட முயன்றதாக கூறி ஒருவரை ஓடும் ஆட்டோவில் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

    இந்த சம்பவம் நடந்த இடம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வீடியோவில், ஓடும் ஆட்டோவின் பின்னால் ஒரு நபர் தொங்கியநிலையில் ஆட்டோ வேகமாக செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

    இதில், அந்த நபரின் கால்கள் சாலையில் தேய்ந்தபடி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறது.

    இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாக கமென்டில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

    ஆட்டோ பின்னால் ஒரு நபர் அலறியபடி இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • ரத்தோர் தன்னுடைய ரிக்ஷாவில்' எனக்கு மணப்பெண் வேண்டும்' என விளம்பரம் செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
    • அந்த விளம்பரத்தில் ரத்தோரின் வயது, உயரம், பிறந்த தேதி, ரத்தப் பிரிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.

    மத்தியபிரதேச மாநிலத்தில் 29 வயது இளைஞரான ரத்தோர் தன்னுடைய ரிக்ஷாவில் 'எனக்கு மணப்பெண் வேண்டும்' என விளம்பரம் செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

    திருமணத்திற்கு பெண் தேடாமல் தனது பெற்றோர் பிரார்த்தனை மட்டுமே செய்து வந்ததால், விரக்தியடைந்த தீபேந்திர ரத்தோர் திருமண வரன் பார்க்கும் குழுவில் இணைந்துள்ளார். அங்கும் அவருக்கு பெண் கிடைக்கத்தால் மனமுடைந்த அவர் வித்தியாசமான முறையில் 'எனக்கு மணப்பெண் வேண்டும்' என தன்னுடைய சொந்த ரிக்ஷயாவில் விளம்பரம் செய்துள்ளார்.

    அந்த விளம்பரத்தில் ரத்தோரின் வயது, உயரம், பிறந்த தேதி, ரத்தப் பிரிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.

    இது தொடர்பாகப் பேசிய ரத்தோர், "எந்த சாதி, மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய மனைவியாக வருபவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.  

    • வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்த காரை விற்க நேரிட்டது.
    • நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

    ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கின் முதல் பெண் இ-ரிக்ஷா ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார் 39 வயதான மீனாட்சி தேவி. கடந்த ஆண்டு இவரின் கணவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை செலவுக்காக மீனாட்சி தேவியின் குடும்ப சூழல் தலைகீழாக மாறிப் போனது. இதன் காரணமாக மீனாட்சி தேவியின் குடும்பம் வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்த காரை விற்க நேரிட்டது.

    குடும்ப சூழலில் மனம் தளராத மீனாட்சி, நிதி நிலையை எதிர்கொள்ள தானே களத்தில் இறங்க முடிவு செய்தார். அதன்படி இ-ரிக்ஷா ஓட்டி வருமானம் ஈட்டலாம் என அதற்கான பணிகளை துவங்கினார். இவரது முடிவுக்கு அவரது உறவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதே போன்று நண்பர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா கூட்டமைப்பினரும் இவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எனினும், எதிர்ப்புகளை கடந்து செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் இ-ரிக்ஷா ஓட்டும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். முதற்கட்டமாக இவரது தொழில் சற்று சுமாராகவே இருந்துள்ளது. ஆனால், தற்போது தினமும் நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

    "முதலில் எல்லாரும் என்ன வேற்றுகிரகவாசி போன்றே பார்த்தனர். ஆனால், எதிர்ப்புகளை கண்டு கவலை கொள்ளாமல், எனது நிலைமையை எப்படி மாற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். இதன் மூலம் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை சம்பளம் ஈட்டுகிறேன். எனது வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவை வழங்குவதால் என்னை யாரும் ஆட்டோ ஸ்டாண்ட்-இல் பார்க்க முடியாது," என்று மீனாட்சி தேவி தெரிவித்தார்.

    • பெண்களால் ரெயில்களையும், விமானங்களையும் இயக்க முடியும் போது, நாம் ஏன் இ-ரிக்சாவை ஓட்ட முடியாது என்று நினைத்தேன்.
    • என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. நான் அதை விரைவாக கற்றுக்கொண்டேன். எனது கணவர் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்.

    ஸ்ரீநகர்:

    பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில், 3 குழந்தைகளின் தாய் ஒருவர் மின்சார வாகனமாக 'இ-ரிக்சா' ஓட்டிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    அங்குள்ள நக்ரோடா பகுதியை சேர்ந்தவர் சீமா. 40 வயதான இவருக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 மற்றும் 12 வயதுடைய 2 மகள்களும் உள்ளனர்.

    இவர் கடந்த 4 மாதங்களாக நக்ரோடா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 'இ-ரிக்சா' ஓட்டி வருகிறார். இது குறித்து சீமா கூறியதாவது:-

    எனது கணவரின் வருமானம் போதாத காரணத்தால் இந்த வேலையை செய்தேன். எங்களுக்கு குடும்ப செலவு அதிகமாக இருக்கிறது. எனவே செலவை சமாளிக்கவும், கணவருக்கு உதவியாக இருக்கவும் விரும்பினேன்.

    எனக்கு வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனவே நானும், என் கணவரும் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி, ரூ.3 ஆயிரம் மாத தவணையில் 'இ-ரிக்சா' வாங்கினோம். எனது கணவர் எனக்கு இ-ரிக்சாவை ஓட்ட கற்றுக்கொடுத்தார்.

    பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களால் நான் ஈர்க்கப்பட்டேன். பெண்களால் ரெயில்களையும், விமானங்களையும் இயக்க முடியும் போது, நாம் ஏன் இ-ரிக்சாவை ஓட்ட முடியாது என்று நினைத்தேன். அது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. நான் அதை விரைவாக கற்றுக்கொண்டேன். எனது கணவர் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்.

    பெண்கள் எனது வாகனத்தில் பயணம் செய்வதை பாதுகாப்பாக உணர்கிறார்கள். மாணவிகளையும் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×