என் மலர்
நீங்கள் தேடியது "மத்தியபிரதேசம்"
- நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன்.
- இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.
அறிவான குழந்தைகளை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பள்ளி மாணவிகளிடம் பெண் டிஜிபி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான மாநில அரசின் விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 4 ஆம் தேதி ஒரு தனியார் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிஐஜி சவிதா சோஹானே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நான்காவது புதிய தலைமுறையை நீங்கள்தான் கொண்டுவரப் போகிறீர்கள். அதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும். நான் சொல்வதை நீங்கள் குறித்துவைத்து கொள்ளுங்கள். பௌர்ணமி நாளில் கருத்தரிக்க கூடாது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, தண்ணீரை அருந்தி நமஸ்காரம் செய்தால் அறிவான குழந்தைகள் பிறக்கும்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பள்ளி மாணவிகளிடம் பேச வேண்டிய பேச்சா இது என்று நெட்டிசன்கள் பெண் டிஜிபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த டிஐஜி சவிதா சோஹானே, "நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன். இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அதனால் தான் அந்த நாளை குறிப்பிட்டு பேசினேன்" என்று விளக்கம் அளித்தார்.
An IPS officer in Madhya Pradesh offers advice to teenage school students on dos and don'ts for bearing "ojaswi" (bright) babies, including "not to conceive on full moon night". pic.twitter.com/CTZQG7yG6r
— Man Aman Singh Chhina (@manaman_chhina) January 11, 2025
- 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 2,600 கைதிகள் அடைக்கலாம்.
- சிறை வளாகத்தில் டிரோன் எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் மத்திய சிறைச்சாலை உள்ளது. 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 2,600 கைதிகள் அடைக்கலாம். ஆனால் தற்போது 3,600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடையவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே இங்கு பன்னடுக்கு உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலையின் பி பிளாக் கட்டிடம் அருகே சுமார் 40 கிராம் எடையுள்ள கருப்பு நிற டிரோன் கிடந்ததை, சிறை சூப்பிரண்டு ராகேஷ் குமார் பாங்க்ரே கண்டுபிடித்தார்.
இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளும், நிபுணர்களும் அங்கு வந்து, அந்த டிரோனை ஆய்வு செய்தனர். அப்போது அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்தது. போலீசார் அதனை கைப்பற்றி காந்தி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
உயர் பாதுகாப்பு பகுதியான சிறைச்சாலைக்குள் சீன டிரோன் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி சிறைத்துறையினர் கூறுகையில், சிறை வளாகத்தில் டிரோன் எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை. அது தரையிறங்குவதை யாரும் பார்க்கவில்லை. சிறைச்சாலைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடையதாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
போபால் மத்திய சிறைச்சாலைக்குள் சீன டிரோன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த சம்பவம் கடந்த மாதம் மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
- இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் 2 இளைஞர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில் 3 முஸ்லிம் சிறுவர்களை ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு இளைஞர் ஒருவர் செருப்பால் அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் கடந்த மாதம் ரத்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் 3 சிறுவர்களை அடித்து கொடுமைப்படுத்தி ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை இளைஞர் உடன் வந்த மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 2 இளைஞர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
In India see in this video how much hatred against Muslims has entered their hearts.This incident is from MP, Ratlam where these small terrorists are beating 3 Muslim children and forcing them to raise JSR slogans. pic.twitter.com/ph8cqnB0bq
— Al Faris Emirati (@Sheikhalfaris) December 5, 2024
- கிரேட் காளி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை பெற்று பிரபலம் ஆனவர்.
- கிரேட் காளி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
பஞ்சாபை சேர்ந்த கிரேட் காளி 2006-ம் ஆண்டு மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை பெற்று பிரபலம் ஆனவர். தற்போது போட்டிகளில் பங்கேற்பதை குறைத்து கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், கிரேட் காளி மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 'சனாதன் பாதயாத்ரா' நிகழ்வில் கலந்துகொண்டார். அங்கு சாமியார் ஒருவரின் தலைமுடியை பிடித்து கிரேட் காளி தூக்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில், காளியின் அருகில் நின்ற சாமியார் கிரேட் காளியிடம் தனது தலைமுடியை பிடித்து தூக்குமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து சாமியாரின் தலைமுடியை பிடித்து அவர் தூக்குகிறார். கிரேட் காளியின் பலத்தை கண்டு அங்குள்ள மக்கள் உற்சாகத்தில் கைதட்டி ரசித்தனர்.
खली ने यात्रा में शामिल एक साधु की चोटी पकड़कर उन्हें एक हाथ से उठाया । #Khali #bageshwardham #ViralVideo pic.twitter.com/QTxHNPBJw6
— ITM MEDIA 24 (@itmmedia24) November 26, 2024
- துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது.
- போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவை பார்த்ததும் மோசடி செய்ய முயன்ற நபர் அழைப்பை துண்டித்துள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் துணைக் காவல் ஆணையருக்கு கால் செய்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு துறையின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு நேற்று மதியம் ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது. காலில் பேசியவர் தன்னை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
துணைக் காவல் ஆணையரிடம் பேசிய அவர், உங்களது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1,11,930 சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக உங்கள் மீது மும்பை காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் உங்களிடம் இருந்து வாக்குமூலம் வாங்க வேண்டும் என்று கூறி அந்த நபர் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவை பார்த்து உடனடியாக அழைப்பை துண்டித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இத்தகைய சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதனை துணைக் காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார்.
- பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
- பழங்குடியின நபரை தாக்கியபோது தடுக்க முயன்ற விதவை பெண்ணையும் கிராம மக்கள் அடித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதவை பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 48 வயது பழங்குடியின நபரை கிராம மக்கள் நிர்வாணப்படுத்தி, அடித்து, ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 14 அன்று அலிராஜ்பூர் மாவட்டத்தின் சோட்டி மால்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழங்குடியின நபரை தாக்கியபோது தடுக்க முயன்ற விதவை பெண்ணையும் கிராம மக்கள் அடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அந்த சமயத்தில் அப்பெண்ணுக்கு கிராம மக்கள் யாரும் உதவி செய்யவில்லை. பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர் தான் அப்பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து அவளது குழந்தைகளை வளர்க்க உதவி செய்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக அந்நபரை கிராம மக்கள் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- மர்ம நபர்கள் சோஹைல் ஷா மீது பெவிக்விக் வீசி சென்றுள்ளனர்.
- பெவிகுவிக் தாக்குதலால் அவரின் கண்கள் மற்றும் வாயில் பெவிக்விக் ஒட்டியது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் மோமோஸ் விற்பனை செய்யும் நபர் மீது பெவிகுவிக் வீசி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவாலியர் நகரில் சோஹைல் ஷா (21) என்ற இளைஞர் தனது மனைவியுடன் சேர்ந்து சாலை ஓரமாக மோமோஸ் கடை ஒன்றை நடத்து வருகிறார்.
இந்நிலையில், நவம்பர் 15 அன்று இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சோஹைல் ஷா மீது பெவிகுவிக் வீசி சென்றுள்ளனர். இந்த தாக்குதலால் அவரின் கண்கள் மற்றும் வாயில் பெவிகுவிக் ஒட்டியது.
இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சோஹைலின் மனைவியின் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் வாகனத்தை பார்த்ததும் காய்கறி கடை நடத்தி வந்த சல்மான் கான் பயந்துள்ளார்.
- சல்மானை கட்டிப்பிடித்து DSP சந்தோஷ் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் 14 வருடங்களுக்கு பிறகு காய்கறி வியாபாரம் செய்யும் தனது நண்பரை சந்தித்தது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் படேல் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சந்தோஷ் படேல் தனது போலீஸ் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு காய்கறி கடையில் வாகனத்தை நிறுத்த சொல்லியுள்ளார்.
போலீஸ் வாகனத்தை பார்த்ததும் காய்கறி கடை நடத்தி வந்த சல்மான் கான் பயந்துள்ளார். அப்போது என்னை நியாபகம் இருக்கிறதா என்று சந்தோஷ் சல்மானை பார்த்து கேட்டுள்ளார். அதற்கு தலையை அசைத்த சல்மான் உங்களை என்னால் மறக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார். உடனே சல்மானை சந்தோஷ் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
सलमान ख़ान से भोपाल में इंजीनियरिंग की पढ़ाई के समय मुलाक़ात हुई थी। ये हमारी भावनाओं को समझकर फ्री में सब्ज़ी दे दिया करते थे।14 साल बाद जब अचानक मिले तो दोनों बहुत खुश हुए।बुरे समय में साथ निभाने वाले को भूल जाना किसी पाप से कम नहीं।बंदे में एक दोष न हो, बंदा ऐहसान फ़रामोश न हो pic.twitter.com/FMTdOW5cBH
— Santosh Patel DSP (@Santoshpateldsp) November 10, 2024
இது தொடர்பான வீடியோவை சந்தோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் போபாலில் பொறியியல் படிக்கும் போது கையில் காசில்லாமல் இரவு உணவு கூட வாங்க முடியாத நிலையில் இருந்தேன். அந்த சமயத்தில் தான் காய்கறி கடை நடத்தி வரும் சல்மான் கானை சந்தித்தேன். என்னுடைய நிலையை உணர்ந்து அவர் எனக்கு இலவசமாக காய்கறிகளை கொடுத்தார். ஒவ்வொரு இரவும் கத்தரிக்காயையும் தக்காளியையும் எனக்கு கொடுத்தார். அதனை சமைத்து எனது பசியை நான் போக்கிக்கொண்டேன்.
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாங்கள் எதிர்பாராத விதமாக சந்தித்தோம். இதனால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்தோம். நம்முடைய கடினமான காலங்களில் துணை நின்ற ஒருவரை மறப்பது பாவமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
- சமைத்துக் கொண்டே செல்போன் பயன்படுத்திய போது இந்த விபத்து நடந்துள்ளது.
- படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மத்திய பிரதேசத்தில் சூடான எண்ணெயில் செல்போன் தவறி விழுந்து பேட்டரி வெடித்து சிதறியதில் சந்திர பிரகாஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமைத்துக் கொண்டே செல்போன் பயன்படுத்திய போது இந்த விபத்து நடந்துள்ளது.
செல்போனின் பேட்டரி வெடித்ததில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாதி வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது.
ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்று உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
உயிரிழந்த சந்திர பிரகாஷ்-க்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 13 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது.
- யானைகள் உயிரிழந்தற்கான காரணம் புரியாமல் வனத்துறை அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 13 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் அடுத்தடுத்து 10 யானைகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 29 அன்று 4 யானைகளும், 30 அன்று 4 யானைகளும் 31 அன்று 2 யானைகளும் உயிரிழந்தன. யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்தற்கான காரணம் புரியாமல் குழம்பிய வனத்துறை அதிகாரிகள் யானைகளுக்கு பிரேத பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொண்டனர். எனினும் சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
பூஞ்சை பாதித்த கருவரகை (Kodo millet) சாப்பிட்டதால் யானைகள் உயிரிந்ததா என்ற அச்சத்தில் அதன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவும் இதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 24 மணி நேரத்திற்குள் இந்து தொடர்பாக அறிக்கை சமர்பிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராஜ் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- மருத்துவமனைக்கு ஷோ - காஸ் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் தரம் சிங் மராவி என்பவரின் குடும்பத்தினருக்கும் இன்னொரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இதன் காரணமாக அக்டோபர் 31 அன்று 25 பேர் கொண்ட மர்ம நபர்கள் தரம் சிங் மராவி (65) மற்றும் அவரது 2 மகன்களையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தரம் சிங்கும் அவரது மகன் ரகுராஜும் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராஜ் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், 5 மாத கர்ப்பிணியான சிவராஜின் மனைவி, மருத்துவமனை படுக்கையில் உயிரிழந்த சிவராஜின் ரத்த கறையை துடைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ये महिला सरकारी अस्पताल के जिस बिस्तर को साफ कर रही है उस पर थोड़ी देर पहले इनका पति लेटा था 5 महीने की गर्भवती है अस्पताल ने कथित तौर पर मौत के बाद बिस्तर इनसे साफ करवाया डिंडोरी में तिहरे हत्याकांड का मामला है इसके आगे मानवता और शब्द मर जाते हैंश्रद्धांजलि... pic.twitter.com/IuDzX3kYM8
— Anurag Dwary (@Anurag_Dwary) November 1, 2024
இந்த வீடியோ வைரலானதை அடுத்து மருத்துவமனைக்கு ஷோ - காஸ் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய மருத்துவர் சந்திரசேகர், "ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் ரோஷனி இரத்தத்தில் நனைந்த துணிகளை சேகரித்தார் எனவும் படுக்கையை சுத்தம் செய்யும்படி நாங்கள் அவரிடம் அறிவுறுத்தவில்லை என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- 17 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தியவுடன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார்.
- இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், காரை அடித்து நொறுக்கினர்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 17 வயது சிறுவன் ஓட்டிவந்த கார் ரங்கோலி கோலம் போட்டி கொண்டிருந்த 2 பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவ்யா (13) என்ற சிறுமியும் பிரியன்ஷி (21) என்ற இளம்பெண்ணும் தீபாவளியை ஒட்டி தங்களது வீட்டிற்கு வெளியே ரங்கோலி கோலம் போட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் இவர்கள் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் காயமைடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நவ்யா (13) கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தியவுடன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், காரை அடித்து நொறுக்கி, ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
மேலும் காருக்குள் மதுபாட்டில்கள் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார். இதனையடுத்து விபத்து ஏற்படுத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
In Indore, Madhya Pradesh, A Full Speed Car crushed two girls. The girls were making Rangoli outside the house. The accused driver is said to be 17 years old Monor. The police have arrested him. The condition of both the girls is very serious pic.twitter.com/F34Rb87XBs
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 29, 2024