என் மலர்

  நீங்கள் தேடியது "Sex"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க. கவுன்சிலர் பக்கிரிசாமி நடத்தும் நர்சரி பள்ளியில் படித்த 6 வயது சிறுமி, பள்ளி தாளாளர் பக்கிரிசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
  • அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்

  கடலூர்:

  விருத்தாசலத்தில் கடந்த 11-ந்தேதி தி.மு.க. கவுன்சிலர் பக்கிரிசாமி நடத்தும் நர்சரி பள்ளியில் படித்த 6 வயது சிறுமி, பள்ளி தாளாளர் பக்கிரிசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு பா.ஜ.க. மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ். பி. செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு மருத்துவ மனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும், பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும், முதல் தகவல் அறிக்கையில் உண்மை தகவலை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களிட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பா.ஜ.க. கடலூர் மாவட்ட தலைவர் மணி கண்டன், விருத்தாசலம் நகர செயலாளர் மணியழகன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது போல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
  • முருகன், செல்வம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  சுவாமிமலை:

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் செக்கடி தெருவை சேர்ந்த ஒருவரின் 8 வயது பெண் குழந்தைக்கு அதே பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளர்கள் முருகன் (வயது 55) மற்றும் செல்வம் (65) 2 பேரும் அந்த குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது போல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

  சம்பவத்தன்று அதேபோல் இருவரும் அந்த பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் போது அந்த குழந்தையின் தந்தை பார்த்து இருவரையும் கண்டித்துள்ளார்.

  பின்னர் அவர் இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார், அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகன், செல்வத்தை கைது செய்தனர்.

  பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • 16 வயது மாணவி அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மைக்குடியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். மைக்குடியை சேர்ந்த அஜித்(எ)அழகு பாண்டி (வயது21) என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அவரை தொந்தரவு செய்து வந்தார்.

  இது குறி்த்து மாணவியின் தாய் கொடு்த்த புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து வாலிபர் அஜித்(எ)அழகுபாண்டியை தேடி வருகின்றனர்

  திருமங்கலத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கப்பலூர் சின்னகாமன் மகன் கார்த்திக்(20) என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

  இதனால் மாணவி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது வழக்கு செய்தனர்.
  • இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

  சேலம்:

  சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் செல்வம் என்பவர் சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், செல்வத்தை கண்டித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுமி குளித்து கொண்டிருந்ததை செல்வம் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயிர் கடன் வழங்க விவசாயி மனைவியை ஆசைக்கு இணங்க வங்கி அதிகாரி அழைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மும்பை:

  மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டம் டடாலா கிராமத்தில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் மானேஜர் ஆக பணிபுரிபவர் ராஜேஷ் ஹிவாஸ். அப்பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி பயிர் கடன் கேட்டு இவரது வங்கியில் விண்ணப்பித்து இருந்தார்.

  ஆனால் அவருக்கு கடன் வழங்காமல் மானேஜர் ராஜேஷ் ஹிவாஸ் இழுத்தடித்தார். எனவே விவசாயியின் மனைவி அவரை சந்தித்து பயிர் கடன் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.

  அவரைப் பார்த்ததும் மானேஜர் ராஜேஷ் சபலம் அடைந்தார். கடன் வழங்க வேண்டுமானால் என்னுடன் ‘செக்ஸ்’சில் ஈடுபட வேண்டும் என அழைத்தார். அதற்கு அவரது பியூன் மனோஜ்சவான் (37) என்பவரும் உடந்தையாக இருந்தார்.

  இதுகுறித்து புல்தானா மாவட்ட கலெக்டர் நிரூபமா டாங்கேவிடம் விவசாயியின் மனைவி புகார் செய்தார். அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் கலெக்டர் நேரடியாக தலையிட்டு வங்கி மானேஜர் மற்றும் பியூன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

  அதைத் தொடர்ந்து பியூன் மனோஜ் சவான் தர்யாபூர் கிராமத்தில் கைது செய்யப்பட்டார். வங்கி மானேஜர் ராஜேஷ் ஹிவாஸ் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய வார்தா மற்றும் நாக்பூருக்கு போலீஸ் குழு அனுப்பப்பட்டுள்ளது.

  சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் அசோக்சவான் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளார். #tamilnews

  ×