என் மலர்
நீங்கள் தேடியது "Lover"
- திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
- மாணவியை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என கூறப்படுகிறது.
மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வருகிறார்.
நேற்று மாணவி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மாணவியை தாக்கினார். ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில் யாருமே மாணவியை காப்பாற்ற முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பட்டப்பகலில் நடை பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் தனது செல்போனிலும் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இதற்கிடையே மாண வியை கழுத்தறுத்து கொலை செய்த வாலிபர் தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தினர்.
இதில் மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது. இவரும், மாணவியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.
- ஹெப்பல் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- உடலையும், நான்கு பக்க தற்கொலைக் குறிப்பையும் போலீசார் மீட்டனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணின் தாய், தந்தை மற்றும் சகோதரி தற்கொலை செய்து கொண்டனர்.
இறந்தவர்கள் மகாதேவ சுவாமி (55), மஞ்சுளா (45) மற்றும் ஹர்ஷிதா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தக் குடும்பம் புதனூர் கிராமத்தில் வசித்து வந்தது. ரியல் எஸ்டேட் முகவரான சுவாமிக்கு இருந்து வந்தார்.
சுவாமியின் மூத்த மகள் காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை. பின்னர் அந்த பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து பெண்ணின், தாய், தந்தை, சகோதரி மூவரும் ஹெப்பல் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடலையும், நான்கு பக்க தற்கொலைக் குறிப்பையும் கடந்த சனிக்கிழமை போலீசார் மீட்டனர்.
அந்தக் கடிதத்தில், மூத்த மகள், மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்களின் இறுதிச் சடங்குகளில் அவள் பங்கேற்கக் கூடாது என்றும், சொத்துக்களை அவளுடைய சகோதரனுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அவருக்கு மதுரையைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
- அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 48). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் பிரான்சிஸ் தனது கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலியின் மகள் ஆகியோருடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாஸ்கோ நகரில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
அப்போது கள்ளக்காதலியின் 16 வயது மகளை பிரான்சிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரான்சிசை கைது செய்தனர்.
- திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது.
- மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா எனக்கூறி கண்டித்தார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் சந்த்கபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி காதலர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்களுக்கு தெரியவந்தது. இது பற்றி அவர்கள் பப்லுவிடம் தெரிவித்தனர். அவரும் மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்தார்.
இதனால் வேறு வழியின்றி, காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, கோர்ட்டில் வைத்து ராதிகாவுக்கும், காதலனுக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் கண் முன் ராதிகாவும், காதலனும் மாலை மாற்றிக்கொண்டனர்.
திருமணம் முடிந்ததும் பப்லு தனது மனைவியிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராதிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 8 ஆண்டு தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை பப்லு காதலனுடன் அனுப்பி வைத்து விட்டு 2 குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், காதலனுடன் சென்ற ராதிகாவை அவரது புதிய மாமியார் திருப்பி அனுப்பியுள்ளார். ராதிகா தனது முதல் கணவருடன் பெற்ற இரு குழந்தைகளுக்காக வருத்தப்படுவதாகவும், அவர்கள் தங்கள் தாயின் அன்பைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் கூறி ராதிகாவை திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, வீட்டுக்கு வந்த ராதிகாவை ஏற்றுக்கொண்ட பப்லு, இனிமேல் அவளுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பு என தெரிவித்தார்.
- சூரியதேவ் என்ற இளைஞர் 2 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார்.
- இந்த திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கானாவில் பழங்குடி இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆசிபாபாத் மாவட்டம் கும்னூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சூரியதேவ், ராஜ் கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி என்ற 2 பெண்களை ஒரே நேரத்தில் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது 2 காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து சூரியதேவ் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சூரியதேவின் திருமண வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
- மார்ச் 5 ஆம் தேதி பிரகதியை திலீப் என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
- பிரகதி அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது
உத்தரபிரதேசத்தில் திருமணமான 15 நாட்களில் மனைவி கூலிப்படையினரை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரகதி யாதவ் மற்றும் அனுராக் யாதவ் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலை, அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், மார்ச் 5 ஆம் தேதி பிரகதியை திலீப் என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மார்ச் 19 அன்று, திலீப் வயலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலீப் மார்ச் 20 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திலீப்பின் சகோதரர் சஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் திலீப்பின் மனைவி பிரகதி அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது
இருவரும் திலீப்பைக் கொலை செய்ய ராமாஜி சவுத்ரி என்ற காண்டராக்ட் கொலையாளியை நியமித்து, அந்த வேலையைச் செய்ய அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திலீப்பை கொலை செய்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், நான்கு தோட்டாக்கள், ஒரு பைக், இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தக் குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார்.
- ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவி எரித்துள்ளனர்.
ராஜஸ்தானின் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி பைக்கில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேள்வி எழுப்பித்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவியும் கள்ளகாதலனும் எரித்துள்ளனர்.
மார்ச் 16 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்க்கின்றனர்.
- குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.
அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.
உலக அளவில் லட்சக்கணக்கானோர் டிண்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்ப்பதற்காகவே அச்செயலியை பயன்படுத்துவதாக CHEAT EYE ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில், கணவர்களோ காதலர்களோ தங்களை ஏமாற்றுகிறார்களா என துப்பறிவதற்காகவே லண்டன் பெண்கள் அதிகளவில் (62.4%) டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மான்செஸ்டரில் 8.8% பெண்களும், பிர்மிங்கத்தில் 8.3% பெண்களும் காதலர்கள் குறித்து துப்பறிந்துள்ளனர். குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அபிஜீத் வெளியிட்ட வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார்.
- அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், ‘செல்லம்... நாம சொர்க்கத்தில் சந்திப்போம்’ என்றும் கூறியிருக்கிறார்.
போபால் :
குஜராத்தை பூர்வீகமாக கொண்ட அபிஜீத் படிதார் என்ற வாலிபர், மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் நகரில் வசித்து வந்தார்.
எண்ணெய் மற்றும் சர்க்கரை தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், 'துரோகம் செய்யக்கூடாது' என்று அபிஜீத் கூறுகிறார். பின்னர், படுக்கையில் கிடக்கும் ஒரு உருவத்தின் மீது மூடப்பட்ட போர்வையை விலக்கிக்காண்பிக்கிறார். அதில், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு இளம்பெண் இறந்து கிடக்கிறார்.
அபிஜீத் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார். மேலும் தனது காதலியான அப்பெண், தன்னுடைய தொழில் பங்குதாரரான ஜிதேந்திரகுமார் என்பவருடனும் உறவு வைத்திருந்திருக்கிறார். அவரிடம் ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். ஜிதேந்திரகுமார் சொன்னதன் பேரில்தான் நான் அவளை கொன்றேன் என்று கூறியிருக்கிறார்.
அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், 'செல்லம்... நாம சொர்க்கத்தில் சந்திப்போம்' என்றும் கூறியிருக்கிறார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷில்பா ஜாரியா (வயது 22). அவரும் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அந்த பெண், ஜபல்பூரில் உள்ள ஒரு ரிசார்ட் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கொலை செய்ததாக கருதப்படும் அபிஜீத் தலைமறைவாகிவிட்டார். அவர் தான் கொலை செய்த காதலியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில்தான் முதலாவது வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அபிஜீத்தின் தொழில் பங்குதாரராக கருதப்படும் ஜிதேந்திரகுமாரையும், அவரது உதவியாளரான சுமித் படேல் என்பவரையும் பீகாரில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும், கொலையாளி அபிஜீத் பதுங்கியுள்ள இடத்தையும் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவரை மடக்கிப்பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளதாகவும் மத்தியபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
- ஆத்திரம் அடைந்த இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாலிபரை கழுத்தில் குத்தினார்.
கோவை:
கோவை அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையத்தை சேர்ந்தவர் 25 வயது தொழிலாளி.
இவரும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் வாலிபர் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதுகுறித்து வாலிபர் தனது காதலியிடமும் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதித்தார்.
மேலும் தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்குமாறு, வாலிபரிடம் இளம்பெண் தெரிவித்தார்.
இதையடுத்து வாலிபர், பெண்ணின் வீட்டிற்கு சென்று, நானும், உங்களது மகளும் விரும்புகிறோம். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறோம். எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என கேட்டுள்ளார்.
ஆனால் இளம்பெண்ணின் வீட்டார் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் தனது முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்து வந்தார். மேலும் வாலிபர், இளம்பெண்ணை அடிக்கடி சந்தித்து, அவரிடம் பணமும் வாங்கி வந்தார்.
நேற்றிரவு வாலிபரும், இளம்பெண்ணும் அன்னூர் பகுதியில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது வாலிபர் ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு வாக்குவாதமாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாலிபரை கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். மேலும் வாலிபர், இளம்பெண்ணையும் தாக்கினார்.
இவர்களது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார்.
- 2 பேரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 23). கணிதவியல் பட்டதாரி. இவரை கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரியா எங்கு சென்றார் என்பது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் பிரியா வேடசந்தூர் ஆத்துமேட்டில் பூக்கடை வைத்திருக்கும் பி.ஏ. தமிழ் பட்டதாரியான மனோபாலாஜி (வயது 23) என்பவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் தனது காதலனை மணப்பாறை அருகில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் தங்கள் வீட்டிற்கு சென்றால் எப்படியும் பிரச்சினை செய்து பிரித்து விடுவார்கள் என நினைத்து மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். வடமதுரை போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.
பிரியாவின் குடும்பத்தினர் தங்களுடன் வருமாறு அழைத்தபோதும் தான் கணவருடன் தான் செல்வேன் என அவர் உறுதியாக கூறினார். இதனையடுத்து காதல் ஜோடிகளை போலீசார் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
- இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் செய்து வந்தனர்.
- பெற்றோரிடம் தான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடலை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது23). இவர் சென்னையில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் வசித்து வரும் சரவணன் மகன் வினோத் குமார்(27). இவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இருவரும் கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக காதல் செய்து வந்த நிலையில் வினோத்குமார், பாக்கிய லட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை தகாத உறவு வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாக்கியலட்சுமி கர்ப்பிணியானார். தற்போது 5மாத கர்ப்பிணியான பாக்கியலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி வினோத்குமாரிடம் வற்புறுத்தி உள்ளார். திரு மணம் செய்து கொள்வதை மறுத்த வினோத்குமார் கருவை கலைத்து விடு மாறு கூறியுள்ளார். பாக்கிய லட்சுமி அதனை மறுக்கவே தனது பெற்றோரிடம் தான் 5 மாத கர்ப்பமாக இருப்ப தாக கூறியுள்ளார். மேலும் காதலன் வினோத் குமார்தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோத்குமார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் வினோத்குமார், பாக்கியலட்சுமியை ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வினோத்குமாரிடம் பாக்கியலட்சுமியை திரு மணம் செய்து கொள்ளு மாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை ஏற்ற வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் உள்பட இருவீட்டார் சம்ம தத்துடன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் இருவீட்டார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.






