என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரி"

    • திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
    • மாணவியை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வருகிறார்.

    நேற்று மாணவி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மாணவியை தாக்கினார். ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில் யாருமே மாணவியை காப்பாற்ற முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பட்டப்பகலில் நடை பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் தனது செல்போனிலும் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

    இதற்கிடையே மாண வியை கழுத்தறுத்து கொலை செய்த வாலிபர் தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தினர்.

    இதில் மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது. இவரும், மாணவியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    சமீபத்தில் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.

    • சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

    இங்குள்ள நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல லாரி ஒன்று வந்தது. லாரியை திருத்துறைப்பூண்டி உப்பூக்கார தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 53) ஓட்டி வந்தார்.

    கொள்முதல் நிலையத்தில் லாரியை நிறுத்திவிட்டு தான் ஏற்றி வந்த சாக்குகளை இறக்க லாரியின் பின்பகுதி கதவை சுப்பிரமணியன் திறந்து விட்டார்.

    அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணியன் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 14-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மருத்துவமனை முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்தப் பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×