என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு"

    • போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
    • பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அடுத்த குஜ்ஜார அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்முடி (வயது45). இவர் கடந்த 18-ந் தேதி இரவு, சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மாரண்ட அள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடி குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

    இது குறித்து, மாரண்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.

    இதையடுத்து, குஜ்ஜார அள்ளிக்கு சென்ற போது, பொன்முடி தலைமறைவாகி விட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பொன்முடி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவ்வப்போது 100 என்ற எண்ணுக்கு போன் செய்து பேசுவேன் என்றும், அதே போல் கடந்த 18-ந் தேதி வெடிகுண்டு வைத்ததாக கூறியதாக குற்றத்தை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்துகிறது.
    • எம்.ஐ.ஜி.எம். என்பது கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி போன்றது.

    புதுடெல்லி:

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

    இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்துகிறது. ஏற்கனவே இந்திய விமானப்படை போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை தங்கள் ஆயுத சோதனையில் தீவிரம் காட்டியுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஒ. மற்றும் இந்திய கடற்படை இணைந்து தயாரித்த எம்.ஐ.ஜி.எம். என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆயுதத்தை சோதனை செய்து அதில் வெற்றி கண்டுள்ளது.

    விசாகப்பட்டினத்தில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    எம்.ஐ.ஜி.எம்.ஆயுதமானது குறைந்த அளவிலான வெடிபொருள் கொண்டு கடலுக்கு அடியில் சோதனை செய்யப்பட்டது. எம்.ஐ.ஜி.எம். என்பது கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி போன்றது.

    இது எதிரி நாட்டு அதிநவீன போர் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் போன்றவற்றை குறிவைத்து தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வெற்றிகரமான சோதனைக்கு பிறகு எம்.ஐ.ஜி.எம். யுத்தமானது இந்திய கடற்படையில் சேர்க்க தயாராக உள்ளது என்பதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டி.ஆர்.டி.ஒ.வின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் உறுதிப்படுத்தியுள்ளார்.

    • சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.
    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

    திருப்பூர்:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு போன் வந்தது.

    அதில் பேசிய நபர், திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் இருந்து பேசுவதாகவும், தனக்கு அருகே இருந்து மது அருந்திய 2பேர் , திருப்பூர் படியூரில் உள்ள முருகன் கோவில், கோவை மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுங்கள் என்று பேசி விட்டு உடனே போனை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சென்னை போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனையிட்டனர்.

    அப்போது போனில் தகவல்தெரிவித்த நபர் அங்கு இல்லை. மேலும் அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.இதில் போனில் பேசிய நபர் திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (வயது 47)என்பது தெரியவந்தது. இன்று காலை அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 2019ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மேலும் உண்மையிலேயே 2பேர் கோவிலில் குண்டு வைத்து தகர்க்க போவதாக பேசியதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தாரா?, அல்லது மனநிலை பாதிப்பு காரணமாக இப்படி செயல்பட்டாரா? என்று போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு அதில் மர்மநபர்கள் யாராவது வந்து சென்றுள்ளனரா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில்களில் குண்டு வைக்கப்போவதாக வந்த தகவலால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 14-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மருத்துவமனை முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்தப் பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஓட்டல்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • விசாரணை முடிவில் மிரட்டல் குறித்து விவரங்கள் வெளியாகும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரில் விமான நிலையப் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    கடந்த வாரம் பள்ளி, கல்லூரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அது புரளி என்பது தெரியவந்தது.

    இதனால் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருச்சியில் 4 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை ஒரு தகவல் வந்தது. அதில் திருச்சி மாநகரில் உள்ள பிரபலமான 4 ஓட்டல்களின் பெயர் குறிப்பிட்டு அந்த ஓட்டல்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து 4 ஓட்டல்களுக்கும் போலீசார் விரைந்தனர். ஓட்டல்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் 4 பிரிவுகளாக சென்று 4 ஓட்டல்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஓட்டல் அறைகள், வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து இதுபற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? எந்த முகவரியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    சைபர் கிரைம் போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணை முடிவில் இந்த மிரட்டல் குறித்து விவரங்கள் வெளியாகும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×