என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pahalgam"

    • பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்துகிறது.
    • எம்.ஐ.ஜி.எம். என்பது கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி போன்றது.

    புதுடெல்லி:

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

    இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்துகிறது. ஏற்கனவே இந்திய விமானப்படை போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை தங்கள் ஆயுத சோதனையில் தீவிரம் காட்டியுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஒ. மற்றும் இந்திய கடற்படை இணைந்து தயாரித்த எம்.ஐ.ஜி.எம். என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆயுதத்தை சோதனை செய்து அதில் வெற்றி கண்டுள்ளது.

    விசாகப்பட்டினத்தில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    எம்.ஐ.ஜி.எம்.ஆயுதமானது குறைந்த அளவிலான வெடிபொருள் கொண்டு கடலுக்கு அடியில் சோதனை செய்யப்பட்டது. எம்.ஐ.ஜி.எம். என்பது கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி போன்றது.

    இது எதிரி நாட்டு அதிநவீன போர் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் போன்றவற்றை குறிவைத்து தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வெற்றிகரமான சோதனைக்கு பிறகு எம்.ஐ.ஜி.எம். யுத்தமானது இந்திய கடற்படையில் சேர்க்க தயாராக உள்ளது என்பதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டி.ஆர்.டி.ஒ.வின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் உறுதிப்படுத்தியுள்ளார்.

    • பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
    • உமர் அப்துல்லா தலைமையில் இன்று மாலை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே உள்ளது பைசாரன் பள்ளத்தாக்கு. அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பஹல்காம் மற்றும் பைசாரன் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும்.

    இந்த பகுதியில் நேற்று திடீரென சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டு, தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனக் கூறப்படுகிறது.

    2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா மூலம் அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறைதான் முதுகெலும்பாக உள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இந்த நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல், சுற்றுலாத்துறை கேள்விக்குறியதாக்கியுள்ளது.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று மாலை சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    பயங்கரவாத தாக்குதல் குறித்தும், இதனால் சுற்றுலாத்துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • 3 ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
    • பஹல்காம் பகுதியில் பல்வேறு இடங்களில் அவர்கள் சுற்றி பார்த்தனர்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்

    இந்நிலையில், கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அனில் நரேந்திரன், அஜித்குமார், கிரிஷ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் பஹல்காம் பகுதியில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றிப்பார்த்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் தான் அப்பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் நீதிபதிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர்.

    • இன்றைய ஐபிஎல் போட்டியின்போது மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ அறிவிப்பு
    • வீரர்கள், நடுவர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியின்போது மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்த போட்டியின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீரர்கள், நடுவர்கள் கையில் கறுப்பு பட்டை அணிவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர்.
    • தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

    ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி நாலாவில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்குள்ள சர்ஜீவன் பொதுப்பகுதி வழியாக 2 முதல் 3 தீவிரவாதிகள் இன்று காலை ஊடுருவ முயன்றனர்.

    அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உடனே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்பினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர்.

    அந்த பகுதியில் வேறு தீவிரவாதிகள் இருக்கிறார்களா என்று தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்து 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று பதிலடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கிலும், சத்தீஸ்கரிலும், மணிப்பூரிலும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன.
    • லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

    காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    லைவ் 93 செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், பாகிஸ்தானுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. இது அனைத்தும் அவர்களின் (இந்தியாவின்) உள்நாட்டில் உருவான பிரச்சனை. இந்திய மாநிலங்களில் அந்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் உருவாகி உள்ளன.

    ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கான கிளர்ச்சிகள். நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கிலும், சத்தீஸ்கரிலும், மணிப்பூரிலும் கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்நாட்டின் எல்லா இடங்களிலும் இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.  

    • துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகிய புல்வெளி, ரத்தக்கறை படிந்து அலங்கோலமானது.
    • பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்களும் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகிய புல்வெளி, ரத்தக்கறை படிந்து அலங்கோலமானது. சுற்றுலாத்தலம் வெறிச்சோடியது.

    நேற்று நடந்த பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் 2019-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நேபாளம் இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது மற்றும் எந்தவொரு பயங்கரவாத செயல்களையும் கடுமையாக கண்டிக்கிறது.

    பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை சரிபார்த்து வருகிறோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேபாளம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • அரியானாவை சேர்ந்த கடற்படை அதிகாரி வினய் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தார்.
    • தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் உயிரிழந்துள்ளார்.

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

    • பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார்.
    • பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் கண்டனம் தெரிவித்தார்.

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

    காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார்.

    பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ், ரஷிய அதிபர் புடின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளளனர். 

    பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, "காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிர் இழந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை டிரம்ப் தெரிவித்தார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு முழு ஆதரவை அளிப்பதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது" என்று தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதின் கூறும்போது, "இந்த சம்பவம் எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம். அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்திய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு ரஷியா உறுதி பூண்டுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் துயர விளைவுகளுக்கு உண்மையான இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

    இத்தாலி பிரதமர் மெலோனி கூறும்போது, "பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்கள், காயமடைந்தவர்கள், அரசாங்கம் மற்றும் முழு இந்திய மக்களுக்கும் எனது ஒற்றுமையைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    • பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
    • அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

    பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.

    ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகக் கூறாமல், அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடக்காது. அப்பாவி இந்தியர்கள் இதுபோன்று தங்கள் உயிரை இழக்க மாட்டார்கள்.

    கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசினேன். அங்குள்ள தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நம்முடைய முழு ஆதரவையும் அவர்களுக்கு வழங்குவோம்"என்று பதிவிட்டுள்ளார். 


    • ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்தனர்.
    • அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலர் காயம் அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

    ×