என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terrorist attack"

    • ராணாவின் வழக்கறிஞர் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தார்.
    • உடல்நிலை குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் உசேன் ராணாவின் நீதிமன்றக் காவலை ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றக் காவல் முடிவடைந்த பிறகு, வீடியோ கான்பரன்சிங் மூலம் ராணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சிறப்பு நீதிபதி சந்தர்ஜித் சிங் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

    இதற்கிடையில், ராணாவின் வழக்கறிஞர் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததை அடுத்து, ஜூன் 9 ஆம் தேதிக்குள் அவரது உடல்நிலை குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    பாகிஸ்தான்-கனடா தொழிலதிபரும் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ மருத்துவருமான ராணா, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் அஜித் தோவல் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    • முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இது தொடர்பாக தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் அஜித் தோவல் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த ஆலோசனையின் முடிவில், இனிமேல் இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் போராகவே கருதப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், வருங்காலத்தில் தீவிரவாத தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    • சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அளித்த தகவல் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
    • சோதனைக்கு பிறகு காலதாமதமாக இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூர் சென்றுள்ளன.

    இந்தியாவில் தேடப்படும் நபர் இலங்கைக்கு விமானத்தில் தப்பியதாக இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய 6 பேர், விமானத்தில் இலங்கை தப்ப முயன்றதாக, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதன் எதிரொலியால், சந்ததேகத்தின் அடிப்படையில் சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் இலங்கை சேவை நிறுவனம் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அளித்த தகவல் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

    சோதனைக்கு பிறகு காலதாமதமாக இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூர் சென்றுள்ளன.

    மேலும், இலங்கையில் உள்ள பண்டாரநாயக்க விமான நிலையத்திலும் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    • பயங்கரவாதத்துடனான தொடர்பின் காரணமாகவே பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு.

    பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், சமீபத்தில் அளித்த பேட்டியில் பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருந்தது என்றும், நிதி உதவி அளித்ததையும் ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சரும், பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது என்பதில் ரகசியம் எதுவும் கிடையாது. அந்த தொடர்பின் காரணமாகவே பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    அப்படி பாதிக்கப்பட்டதால் நாங்கள் பாடங்களை கற்றுக் கொண்டோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண சீர்திருத்தமும் செய்தோம். பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.
    • பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம்.

    ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொது வெளியில் பேசியுள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் கூறியதாவது:-

    பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு துணையாக இருக்கிறது.

    பயங்கரவாதிகள் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள். அனைத்து பயங்கரவாதிகளையும் எச்சரிக்கிறோம்.

    பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம்.

    பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது. பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
    • கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் 45 வயது சமூக ஆர்வலர் ஒருவர் மீது பயங்கரவாதிகள்  என சந்தேகிக்கப்படுபவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

    நேற்று (சனிக்கிழமை) இரவு கண்டி காஸில் வசித்து வந்த சமூக ஆர்வலர் குலாம் ரசூல் மாக்ரேயின் வீட்டிற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து அவரை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரசூலைக் கொன்ற பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கூறப்படும் வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
    • இந்தியா அதன் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    அதன்படி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.

    இந்நிலையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ கூறியதாவது:-

    சிந்து நதி எங்களுடையது. அது எங்களுடையதாகவே இருக்கும் என்று நான் இந்தியாவிடம் சொல்ல விரும்புகிறேன். ஒன்று எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும், அல்லது அவர்களின்(இந்தியா) ரத்தம் ஓடும். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை இந்தியா பலிகடா ஆக்குகிறது. இதன் மூலம் அதன் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது,

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
    • மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம்.

    சென்னை:

    காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    வருகிற 27-ந்தேதி வரை மட்டுமே பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள விசா செல்லு படி ஆகும் என்றும், மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

    இதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    வருகிற 27-ந் தேதிக்குள் தமிழகத்தில் தங்கி உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவை பெற்றுக் கொண்டு சென்னையில் உள்ள 2 பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அந்நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகவே வந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இதுபோன்று சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம் என்றும் அதன் பின்னர் அவர்களும் சென்னையை விட்டு வெளி யேறிவிட வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 200 பாகிஸ்தானியர்கள் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னையில் இருப்பதும் தெரியவந்து உள்ளது. அதே நேரத்தில் வேலூர் பகுதியிலும் சிலர் சிகிச்சைக்காக வந்து தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக வருகிற 29-ந்தேதிக்குள் வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இதன் பிறகும் வெளியேறாத பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 70 ராணுவ வீரர்களை கொன்றதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

    மாலியை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, சமீபத்தில் தனது செயல்பாடுகளை பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

    வடக்கு பெனினில் கிளர்ச்சியாளர்கள் செயல்படத் தொடங்கியதிலிருந்து இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

    • சுற்றுலா பயணிகளாக சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழப்பு.
    • பஹல்காம் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பிறகு, திமுக எம்பி திருச்சி சிவா கூறியதாவது:-

    காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளாக சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள சூழலில், இன்றைக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர், நிதி அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்றார்கள்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    பஹல்காம் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்ததோடு, தனது மனவேதனையையும் தெரிவித்தார்.

    நம் ஜனநாயக நாட்டில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. அப்பாடி பொது மக்கள் கொலை செய்யப்படுகின்ற நிலை தொடரக்கூடாது.

    அப்பாடி பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நம் கடமை. அந்த வகையில், இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை வெறும் வார்த்தைகளால் கண்டிப்பதோடு நிறுத்திவிடாமல், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும்.

    இதுதொடர்பாக மத்திய அரசு மேற்கொள்கின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடும், தமிழ்நாடு மக்களும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி.
    • பஹல்காம் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும்., எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

    • பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமர் பேச்சு.

    ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர் பேசியுள்ளார்.

    அப்போது அவர், "இந்தியா பழி போடுகிறது... ஆதாரமிருந்தால் காண்பிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.

    இதுகுறத்து அவர் மேலும் கூறுகையில்," நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம். இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது.

    பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்" என்றார்.

    ×