என் மலர்

  நீங்கள் தேடியது "Congo"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கனமழை வெள்ளத்தால், வீடுகள், சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன
  • தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு.

   கின்ஷாசா:

  காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன. சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது குறித்து காங்கோ அரசு செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

  இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக காங்கோவின் கின்ஷாசா நகரம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காங்கோ நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா.படையில் பி.எஸ்.எப்.வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
  • இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்.

  காங்கோ நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்காக ஐ.நா. படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த படையில் இந்தியாவை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

  இந்நிலையில் நேற்று அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள புடெம்போ நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்கார்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய பிஎஸ்எப் படை வீரர்கள் இருந்த பகுதியை சுற்றி வைத்த போராட்டகாரர்கள் தாக்குதல் நடத்தினர்.

  இதில் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தனர். இதற்கு காங்கோ அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EbolaVirus #Congo
  கின்ஷசா:

  ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

  அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளது. அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இந்த நோய் தாக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடக்கு கிவு பிராந்தியத்தில் உள்ள பேனி நகரை சேர்ந்தவர்கள், அங்கு 8 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள் என அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

  இப்படி அங்கு எபோலா வைரஸ் தாக்கி வருகிற நிலையில், சிகிச்சை அளிக்கிற மருத்துவ குழுவினருக்கு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லைகள் கொடுத்து வருவதாக அந்த நாட்டின் சுகாதார துறை மந்திரி ஒளி இலுங்கா கூறினார்.

  காங்கோ நாட்டைப் பொறுத்தமட்டில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் தெரிவித்தார்.  #EbolaVirus #Congo 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென் ஆப்பிக்க நாடான காங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #Ebolavirus #Ebola
  காங்கோ:

  தென் ஆப்பிரிக்க நாடுகளில் 1976-ம் ஆண்டுகளில் இருந்து கொடூரமான நோயாக கருதப்பட்டது எபோலா என்னும் உயிர்கொல்லி நோய். இந்த வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

  இந்நிலையில், கடந்த வாரம் காங்கோவின் வடக்கு பகுதிகளில் 22 பேர் எபோலா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்கு காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 879 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

  உலக சுகாதார நிறுவனம் அனுப்பியுள்ள எபோலா வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலம் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. 

  காங்கோவில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வரும் நிலையில் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட உதவிப்பொருட்களை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

  எபோலா கிருமியினால் இந்நோய் உண்டாக்கப்படுகிறது. இந்தக் கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் ரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்படுகிறது. பழம் தின்னும் வௌவால்கள் கிருமியைக் பரப்புவதாக கூறப்படுகிறது.  #Ebolavirus #Ebola
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கோ நாட்டில் மீண்டும் எபேலா வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாகவும், கடந்த சில தினங்களில் இந்த வைரஸ் நோய் தாக்கி 23 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Congo #EbolaVirus
  கின்சசா:

  விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

  இந்த நோய் முதலில் 2013-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. 2016-ம் ஆண்டு வரை இந்த வைரஸ் நோய்க்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். எபோலா வைரஸ் நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்சுகளும் பாதிப்புக்கு ஆளாகினர்.

  இப்போது மறுபடியும், காங்கோ நாட்டில் இந்த வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு மபண்டாகா நகரில் இந்த நோய் பரவி வருகிறது. கடந்த சில தினங்களில் இந்த வைரஸ் நோய் தாக்கி 23 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த வைரஸ் நோய் பரவி வருவதை காங்கோ நாட்டின் சுகாதார மந்திரி ஒலி இலுங்கா கலிங்கா உறுதி செய்தார்.  தற்போது 52 பேரை இந்த நோய் தாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இதற்கிடையே அந்த நாட்டுக்கு 4 ஆயிரம் பேருக்கு செலுத்தத்தகுந்த எபோலா வைரஸ் தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் சோதனை ரீதியில் அனுப்பி வைத்து உள்ளது.  #Congo #EbolaVirus
  ×