என் மலர்
நீங்கள் தேடியது "ஆப்பிரிக்கா"
- மெஸ்சி இதுவரை 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார்.
- ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தி்ல் உள்ள அங்கோலா நாட்டின் 50-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி உலக கால்பந்து சாம்பியனான அர்ஜென்டினா அணியை காச்சி கால்பந்து போட்டியில் விளையாட அழைக்கப்பட்டடு இருந்தது.
இந்தப் போட்டியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி 44-வது நிமிடத்தில் கோலும் அடித்தார்.
இதன்மூலம் ஆப்பிரிக்க மண்ணில் தனது முதல் கோல் அடித்து மெஸ்சி அசத்தினார். மொத்தமாக அவர் 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார்.
ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார். ஸ்பெயினில் 624, பிரான்சில் 34, இங்கிலாந்தில் 9, ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் தலா 6 கோல்களும் அடித்துள்ளார்.
ஆசியாவில் 22 கோல்கள் அடித்துள்ளார். 2022 உலகக் கோப்பை நடந்த கத்தாரில் 8 கோல்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல், ஜப்பானில் தலா 3 கோல்களும் அடித்து உள்ளார்.
அமெரிக்க கண்டத்தில் 156 கோல்கள் அடித்து உள்ளார். அமெரிக்காவில் 92, அர்ஜென்டினாவில் 37 கோல்கள் அடித்தார். கிளப் போட்டிகளில் அவரது சொந்த மண்ணில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் அதிபர் பதவிக்கால வரம்புகளை நீக்கினார்
- எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினர் இடையேயான மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் அதிபராக பால் பயா (Paul Biya) எட்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகில் அதிபர் பதவியில் இருக்கும் வயது முதிர்ந்த அதிபராக அவர் உள்ளார்.
கடந்த அக்டோபர் 12 அன்று அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 57.7% ஆகும்.
இந்நிலையில் பால் பயா 53.66% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அனைத்தின் அரசியலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான இசா ச்ரோமா பகாரி 35.19% வாக்குகளைப் பெற்றார்.
இந்த வெற்றியின்மூலம், பால் பயா 2032 ஆம் ஆண்டு வரை கேமரூன் அதிபராக தொடர்வார்.
கேமரூனின் முதல் அதிபரின் ராஜினாமாவைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு பால் பயா முதன்முதலில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
பின்னர், அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் அதிபர் பதவிக்கால வரம்புகளை நீக்கி, தொடர்ந்து அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கேமரூனில் கடந்த வாரம் பதற்றம் நீடித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, டூவாலாவா நகரில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினர் இடையேயான மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
எதிர்க்கட்சியினர் வாக்குகள் திருடப்பட்டதாக கூறி தேர்தல் முடிவுகளை எதிர்த்து வருகின்றனர்.
- ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான்.
- எசுவாத்தினி நாட்டை மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார்.
தெற்கு ஆப்பிரிக்காவில் எசுவாத்தினி என்ற நாடு உள்ளது. பின்னர் இந்த நாடு சுவாசிலாந்து என்று அழைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான்.
எசுவாத்தினி நாட்டை மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார். 1986 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 40 வருடங்களாக அந்நாட்டை அவர் ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், எசுவாத்தினி மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி தனி விமானத்தில் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கினார். அப்போது ன்னர் மூன்றாம் எம்ஸ்வதி அந்நாட்டின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.
மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி உடன் அவரது 15 மனைவிகள் மற்றும் 30 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்கள் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.
- மத்திய ஆப்பிரிக்க குடியரசில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலியாகினர்.
- பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பாங்குய்:
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகர் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது.
இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
எனவே மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும், இங்குமாக ஓடினர்.
இதனை தொடர்ந்து பள்ளி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென தீப்பற்றி எரிந்ததால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது.
இதற்கிடையே தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கிய 280 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பள்ளி அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் சீரமைப்பு பணி நடந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது தெரிய வந்துள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அதிபர் பாஸ்டின் ஆர்க்கஞ்ச் டூடேரா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவித்தார்.
- இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.
- மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன.
மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள கசாபா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.
உள்ளூர் நிர்வாகத்தின் கூற்றுப்படி, இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.
வெள்ளத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர், சுமார் 150 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த வெள்ளப்பெருக்கினால் கசாபா நதியின் நீர்மட்டம் உயர்ந்து, பெரிய பாறைகள், மரங்கள் மற்றும் சேறு கிராமத்திற்குள் பாய்ந்து வீடுகளை அழித்தது.
வெள்ளம் நீரினால் பரவும் நோய்கள், சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்று உள்ளூர் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
கனமழை காரணமாக நிவாரணப் பணிகளும் சிரமங்களை எதிர்கொள்கின்றன. கசாபா கிராமம் டாங்கன்யிகா ஏரியின் கரையில் அமைந்துள்ளது மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன.
பேரழிவைத் தொடர்ந்து காங்கோ அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவியைக் கோரியுள்ளது.
- புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
- இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 70 ராணுவ வீரர்களை கொன்றதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
மாலியை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, சமீபத்தில் தனது செயல்பாடுகளை பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
வடக்கு பெனினில் கிளர்ச்சியாளர்கள் செயல்படத் தொடங்கியதிலிருந்து இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
- சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சில கைதிகள் காவலர்களின் அறைக்குள் நுழைந்தனர்.
என்ஜாமெனா:
மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டின் மோங்கோ நகரத்தில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு தண்டனை கைதிகள் உள்பட சுமார் 500 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அங்குள்ள கைதிகள் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் குவேரா மாகாண கவர்னர் மோங்கோ சிறைச்சாலையை பார்வையிட சென்றிருந்தார். அப்போது சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் சில கைதிகள் காவலர்களின் அறைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தில் 3 பேர் பலியாகினர். கவர்னர் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி 130-க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
- பலர் காங்கோ நதி மற்றும் அதன் துணை நதிகளின் வழியே படகு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
- தீ மளமளவென பரவியதால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் போதுமான சாலை உள்கட்டமைப்பு இல்லாததால் பலர் காங்கோ நதி மற்றும் அதன் துணை நதிகளின் வழியே படகு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். மோசமான பராமரிப்புள்ள படகுகளால் அவ்வப்போது விபத்துகளும் நேர்கிறது.
இந்நிலையில் காங்கோவின் ஈக்வடூர் மாகாணத்தில் இருந்து அருகே உள்ள மாகாணத்திற்கு 150க்கும் மேற்பட்டோரை ஏற்றுக்கொண்டு மரப்படகு ஒன்று ருகி ஆற்றில் சென்றுகொண்டிருந்தது. படகில் எரிபொருட்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.
பண்டமா என்ற பகுதியில் சென்றபோது படகில் சமையல் செய்துகொண்டிருந்தபோது தீயானது எரிபொருட்கள் மீது பற்றியது. தீ மளமளவென பரவியதால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தில் படகில் பயணித்த 143 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆற்றில் குதித்த மாயமாகினர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.
போதிய தகவல் தொடர்பு வசதி இல்லாததால் இந்த விபத்து குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஆற்றில் குதித்து மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட உடல்கள் முற்றிலும் எறிந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
- நிகழ்ச்சியில் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விண்ட்ஹோயிக்:
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தென்மேற்கு ஆப்பிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சி 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இந்தநிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது முன்னாள் அதிபர் நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆப்பிரிக்காவின் 2-வது பெண் அதிபர் என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார்.
- 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
- இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு சொந்தமான போயிங் 737-300 விமானம் மாலி நாட்டுக்கு புறப்படும் பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
- அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது. அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இன்னும் சுமார் 100 பேர் கடலில் தொலைந்தனர் என்று அம்மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டையும் நாட்டையும் இழந்து நிர்கதியில் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் சாரை சாரையாக கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

- டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார்.
- இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்று அவரது தந்தை தெரிவித்தார்.
தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ஆகும்.
ஆசியாவிலேயே குறைந்த வயதில் இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்டவர் என்ற சாதனையை பஞ்சாபை சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார்.
ஆகஸ்ட் 18 அன்று கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற துவங்கிய டெக்பீர் சிங், ஆகஸ்ட் 23 அன்று, அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்தார்.
டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார். தனது மகனின் இந்த சாதனை குறித்து பேசிய அவரது தந்தை, "டெக்பீர் சிங் இதற்காக கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.






