search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "டிரான்ஸ்பார்மர்"

  • ராய்ப்பூரில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
  • பற்றி எரியும் தீயால் அந்த பகுதியே புகைமூட்டமாக மாறியது.

  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின்பகிர்மான நிலையம் அமைந்துள்ளது.

  இந்நிலையில், அந்த மின் பகிர்மான நிலையத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பற்றி எரியும் தீயால் அப்பகுதி புகை மூட்டமாக மாறியது. பற்றி எரிந்த தீயில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளது.

  கோடா பகுதியில் உள்ள பாரத் மாதா சவுக் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்துச் சிதறின.

  தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
  • ஆத்திரத்தில் வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார்.

  உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷில்பா (வயது 34). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

  ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஷில்பாவும் அந்த இளைஞரும் கடந்த ஏழு ஆண்டுகளாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவரம் அறிந்த கணவன் ராம் கோவிந்த் இது குறித்து தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் நேற்று ஷில்பா கடும் மன வேதனை அடைந்தார். மேலும் ஆத்திரத்தில் தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார்.

  இதுபற்றி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

  மேலும், போலீஸ் விசாரணையில் மனைவி ஷில்பா தான் கள்ளத் தொடர்பு வைத்துள்ள நபரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபரீத கோரிக்கைக்கு கணவன் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  • நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • நல்ல வேளையாக அவ்வழியாக யாரும் அப்போது செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

  குழித்துறை :

  கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

  இந்நிலையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த காற்றுடன் சூறைக் காற்றும் வீசியது. இதையடுத்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திலிருந்து பொதுப் பணித்துறை சுற்றுலா மாளிகை சாலையின் அருகில் நின்ற புளிய மரத்தின் கிளை முறிந்து மின்சார டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதனால் அந்த டிரான்ஸ்பார்மர் உடைந்து பயங்கர சத்தத்துடன் விழுந்தது. நல்ல வேளையாக அவ்வழியாக யாரும் அப்போது செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
  • பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது

  கன்னியாகுமரி :

  கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூர் சந்திப்பு பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில் கசிந்து கீழே கொட்டிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் அந்த மின்சார டிரான்ஸ்பார்ம ரின் அடிப்பகுதியில் திடீரென தீ பிடித்தது.அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியது.இதனால் தீ மளமளவென்று பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

  இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  இதனால் அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. தீயணைக்கும் படை வீரர்கள் தீயை உடனே அணைத்ததால் அந்த பகுதியில் இருந்த ஓட்டல் கடைகள் மற்றும் வீடுகள் தீவிபத்தில் இருந்து தப்பின.

  • மலைக் கிராமங்களுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை.
  • கடந்த 2016-ம் ஆண்டு போதமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டது.

  ராசிபுரம்:

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை என 3 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை.

  அங்குள்ள மலைவாழ் மக்கள் ராசிபுரம் போன்ற ஊர்களுக்கு கரடு முரடான பாதை வழியாகத்தான் வந்து செல்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு போதமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டது.

  இந்நிலையில் தரை மட்டத்திலிருந்து 6 கி.மீ. உயரத்தில் உள்ள கீழூரில் இயங்கி வந்த டிரான்ஸ்பார்மர் கடந்த 20 நாட் களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

  பழுதடைந்த டிரான்ஸ் பார்மரை மலைவாழ் மக்களே கீழே கொண்டு வந்து மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மின்வாரிய அதிகாரிகள் புதிய ட்ரான்ஸ்பார்மரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு கீழூருக்கு கொண்டு செல்வதற்காக போதமலை அடிவாரத்தில் வைத்திருந்தனர். மலைப்பகுதியில் உள்ள கீழூருக்கு கரடு முரடான பாதையில் கொண்டு செல்வதற்கு போதிய ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.

  இந்நிலையில் நேற்று போதமலை அடிவாரத்தில் இருந்து கீழூருக்கு 750 கிலோ எடையுள்ள புதிய டிரான்ஸ்பர்மரை 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தோளில் சுமந்து சென்றனர்.

  வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆர்.எம். துரைசாமி, ராசிபுரம் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர்கள் நாமகிரிப்பேட்டை ரவி, புதுப்பட்டி விக்னேஷ்வரன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகரன், வனிதா உள்பட அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை அனுப்பி வைத்தனர்.

  இன்னும் 3 அல்லது 4 நாட்களில் புதிய டிரான்ஸ்பார்மர் கீழூர் பகுதியில் வைக்கப்பட்டு மின் விநியோகம் நடைபெறும் என்று மின்வாரியத் துறையினர் தெரிவித்தனர். இதனால் 20 நாட்களாக மின் வசதி இல்லாமல் இருந்த கீழூர் பகுதி மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

  • பெண் மயில் ஒன்று டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு இறந்து விட்டது.
  • வெள்ளகோவில் கால்நடை மருத்துவ அலுவலர் மயிலை பிரேதப் பரிசோதனை செய்த அடக்கம் செய்தனர்.

  வெள்ளகோவில் :

  வெள்ளகோவில் கச்சேரி வலசு பகுதியில் நேற்று பெண் மயில் ஒன்று டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு இறந்து விட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகராஜ் ,வனத்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், நில வருவாய் அலுவலர்களுக்கு தகவல் பகொடுத்தார். பிறகு வெள்ளகோவில் கால்நடை மருத்துவ அலுவலர் பகலவன் மயிலை பிரேதப் பரிசோதனை செய்த பிறகு கச்சேரி வலசு பகுதியிலேயே மயிலை அடக்கம் செய்தனர். 

  திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
  சிவகங்கை

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர், நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் தெற்கு ரத வீதியில் மின்வாரியத்தின் சார்பாக சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 

  இதை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ரிப்பன் வெட்டி இயக்கி வைத்தார். அமைச்சரை பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், 12-வது வார்டு கவுன்சிலர் பிளாசா ராஜேஸ்வரி சேகர் ஆகியாேர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். 

  மின்வாரிய செயற்பொ றியாளர் செல்லத்துரை புதிய மின்மாற்றி பற்றி விளக்கினார்.இந்நிகழ்ச்சி யில் உதவி செயற்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் முத்தரசி மற்றும் திருப்பத்தூர் மின்சார வாரிய அனைத்து பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  ×