என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மின்சாரத்தை துண்டித்து டிரான்ஸ் பார்மரை திருடிய கும்பல்
    X

    மின்சாரத்தை துண்டித்து 'டிரான்ஸ் பார்மரை' திருடிய கும்பல்

    • மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மர் மாயமான மினகம்பத்தை பார்வையிட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்ரை திருடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த குன்னவளம் கிராமத்தில் உள்ள வயல்வெளி அருகே மின்கம்பத்தில் டிரான்ஸ் பார்மர் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் மின் இணைப்பு துண்டித்து மின்கம்பத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரை தனியாக கழற்றி திருடி சென்றனர்.

    சிறிது தூரத்தில் டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியை வீசிவிட்டு அதில் இருந்த செம்புகம்பிகள் அனைத்தையும் தூக்கி சென்று விட்டனர்.

    இன்று காலை அப்பகுதி மக்கள் வந்தபோது டிரான்ஸ்பார்மர் திருடு போய் இருந்ததும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மர் மாயமான மினகம்பத்தை பார்வையிட்டனர்.

    அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் டிரான்பார்மர் திருடு சம்பந்தபமாக மின்வாரிய அதிகாரிகள் திருவள்ளூர் தாலுக்காபோலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்ரை திருடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×