என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐதராபாத்"
- இளம்பெண் வாலிபரை கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
- பைக்கில் சென்று காதல் ஜோடியை வீடியோ எடுத்தனர்.
திருப்பதி:
ஐதராபாத்தில் உள்ள பழைய நகரமான பஹாடி ஷரீஃப் என்ற இடத்தில் பரபரப்பான சாலையில் காதல் ஜோடி ஒன்று பைக்கில் சென்றனர்.
இதில் வாலிபர் வினோதமான முறையில் தனது காதலியை மடியில் அமர வைத்துக் கொண்டு பைக்கை ஓட்டிச் சென்றார். அந்த இளம்பெண் வாலிபரை கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
பைக்கில் சென்று கொண்டிருந்தபோதே காதல் லீலைகளில் ஈடுபட்டபடி சென்றனர்.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் அவர்களை பார்த்தனர். சில வாகன ஓட்டிகள் அவர்கள் பின்னால் பைக்கில் சென்று காதல் ஜோடியை வீடியோ எடுத்தனர்.
இந்த வீடியோ தெலுங்கானா மாநிலத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுபோன்ற காதல் ஜோடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் பதிவுகளை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தாமாக முன்வந்து ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சாலையில் பைக் ஓட்டியபடி காதலியை மடியில் அமர வைத்து காதல் லீலைகளில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.
ஐதராபாத் மாநகரப் பகுதியில் பரபரப்பான சாலைகளில் காதல் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் காதல் ஜோடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
- தனித்தனியாக சீருடைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் திருநங்கைகள் பல்வேறு பணிகளில் பணியாமத்தப்படுவார்கள் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்க ப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதற்காக தனி தனியாக சீருடைகளும் வடிவமைக்க பட்டு வருகின்றன. திருநங்கை படையில் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திருநங்கை படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.
அதற்கு பிறகு ஐதராபாத் மாநகர பகுதியில் திருநங்கை படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.
- விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
- ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விஸ்கி ஐஸ்க்ரீம் விற்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் சரத் சந்திரா ரெட்டி என்பவர் நடத்தி வந்த ஐஸ்கிரீம் பார்லரில் ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11.5 கிலோ எடையுடைய 23 விஸ்கி ஐஸ்கிரீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற கடைகள் வேறு எங்கும் செயல்பட்டு வருகிறதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென கால் தவறி தண்ணீரில் விழுந்து அடித்துச்செல்லப்பட்டார்.
- சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
திருப்பதி:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவுக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சென்றனர்.
செல்லும் வழியில் நல்கொண்டா மாவட்டம் வெமுலபள்ளியில் நாகார்ஜூனா சாகர் அணையின் இடது கரை கால்வாயில் காரை நிறுத்தினர்.
அந்த கால்வாயில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் சீற்றத்துடன் செல்கிறது. இதனை கண்ட குடும்பத்தினர் அதனை கண்டு ரசித்தனர். அப்போது குடும்பத்தை சேர்ந்த இளம்பெண், வெமுலப்பள்ளி பாலத்தில் உள்ள இடது கால்வாய் அருகே 'செல்பி' எடுக்க முயன்றார்.
அப்போது குடும்பத்தினர் அனைவரையும் நிற்க வைத்த அவர், செல்பி எடுக்க முயன்றபோது, திடீரென கால் தவறி தண்ணீரில் விழுந்து அடித்துச்செல்லப்பட்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் கால்வாயில் விழுந்த பெண்ணை கயிற்றால் கட்டி சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
தண்ணீரில் விழுந்த பெண்ணுக்கு காயங்கள் ஏதும் இல்லாததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெங்களூருவை முதன்முறையாக பின்னுக்குத்தள்ளி பணக்காரர்களின் எண்ணிக்கையில் ஐதராபாத் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
- பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரம் என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. இதன் மூலம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2024 (Hurun India Rich Listers 2024) அறிக்கையின்படி, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை 'ஆசியாவின் பில்லியனர் தலைநகரம்' ஆக மாறியுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
மும்பையில் 58 கோடீஸ்வரர்கள் அதிகரித்து, பட்டியலில் அதன் மொத்த எண்ணிக்கை 386 ஆக உள்ளது.
முதல் நகரங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. இது 18 புதிய கோடீஸ்வரர்களை சேர்த்துள்ளது. அதன் பணக்கார பட்டியல் எண்ணிக்கை 217 ஆகக் கொண்டுள்ளது.
இதற்கிடையில் ஐதராபாத் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து பெங்களூருவை முதன்முறையாக பின்னுக்குத்தள்ளி பணக்காரர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
17 புதிய கோடீஸ்வரர்களின் வளர்ச்சியால் ஐதராபாத்தில் மொத்த எண்ணிக்கையை 104 ஆகக் கொண்டுள்ளது. பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நகரங்களில் சென்னை (82), கொல்கத்தா (69), அகமதாபாத் (67), புனே (53), சூரத் (28), குருகிராம் (23) ஆகியவை அடங்கும்.
- அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை.
- இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு உரிய நிவாரணம் நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்
ஐதராபாத்தின் மாதப்பூர் நகரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற கட்டிடம் உள்ளது. இதில் பிரபலங்களின் இல்லத் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்பு உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. இந்த கட்டிடம் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதிகாரிகள் தற்போது இடித்துள்ளனர். 10 ஏக்கர் பரப்பளவில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் தும்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கட்டடம் இடிக்கப்பதற்கு கண்டம் தெரிவித்து நாகார்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'எனது கருத்தரங்கு கட்டடத்தை தீர்ப்பு வரும் வரை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ள நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக தற்போது இடித்துள்ளார்கள். இந்த இடம் பட்டாவில் இருக்கிறது. ஒரு இன்ச் கூட ஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை.
தவறான தகவலால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை. நான் சட்டத்தை மதிப்பவன். நீதிமன்றத்தில் என் மீது தவறெனத் தீர்ப்பு வழங்கப்பட்டால் நானே அந்த கட்டடத்தை இடித்திருப்பேன். தற்போது அதிகாரிகளால் தவறாக இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு உரிய நிவாரணம் நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
- ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்துள்ளது
- இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கடந்த 30 வருடங்களில் கல்வி கற்பதற்கான செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறித்த விவாதம் இணையத்தில் நடந்துவருகிறது. இதற்கு காரணம் ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்து விட்டதாக பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் அவிரால் பாட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதே ஆகும்.
தனது பதிவில் அவர், இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 9 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கல்லூரிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர், சோஹோ Zoho நிறுவன சிஇஓ ஸ்ரீதர் வேம்பு அவரது கருத்தை ஆமோதித்துள்ளார்.
LKG fees have gone up from 2.3L to 3.7L in Hyderabad, mirroring nationallyWhile we focus on house prices, the real inflation has happened in educationInflation adjusted, school fees are up 9x and college fees are up 20x in the last 30 yearsEducation is no more affordable
— Aviral Bhatnagar (@aviralbhat) August 14, 2024
இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, இந்தியாவில் நகர்புர ரியல் எஸ்டேட்களின் அதிக விலையினால் கல்வி பயில்வதற்கான கட்டணமும் கட்டுபடியாகாத அளவு உயர்ந்துள்ளது. இந்த ரியல் எஸ்டேட்களில் அரசியல்வாதிகளின் ஊழல் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Education has become increasingly unaffordable. A good part of it due to urban real estate (and even real estate around small towns) becoming extremely expensive; that affects education, health care and of course, housing and retail as well. A lot of corruption money from… https://t.co/UWaCUtjQTo
— Sridhar Vembu (@svembu) August 16, 2024
- கிண்டியில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலஜியில் ஏரோநாட்டிக்ஸ் பயின்றார்.
- அப்துல் கலாம் தனது அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியாவின் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி ராம் நாராயண் அகர்வால் [84] நேற்று [ஆகஸ்ட் 15] காலமானார். ஐதராபத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 1940 ஆம் ஆண்டு பிறந்த பிறந்த ராம் நாராயண், சென்னை, கிண்டியில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலஜியில் ஏரோநாட்டிக்ஸ் பயின்றார். பின்னர் பெங்களூரில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் -இல் தனது டாக்டர் பட்டதைப் பெற்றார்.
1983 ஆம் ஆண்டு இந்தியாவால் தொடங்கப்பட்ட அக்னி ஏவுகணைத் திட்ட இயக்குனராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்க கடும் உழைப்பை செலுத்தினார். எனவே, ஏவுகணை உருவாக்கத்துக்கு அடித்தளமிட்ட ராம் நாராயண், அக்னி ஏவுகணைகளின் தந்தை என்று அழைக்கப்படுத்துகிறார்.
டி.ஆர்.டி.ஓ. [DRDO] எனப்படும் ராணுவம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வக இயக்குநராகவும் ராம் நாராயண் அகர்வால் பணியாற்றியுள்ளார். ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ மற்றும் 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. ராம் நாராயண் மறைவுக்கு டிஆர்டிஓ அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தனது சுயசரிதை புத்தகமான அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை நினைவு கூர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளியில் தன்னுடன் படித்த சிறு வயது நண்பன் அவன்
- வனஸ்தலிபுரத்தில் உள்ள பாருடன் கூடிய ரெஸ்ட்டாரெண்டில் பார்ட்டி நடந்தது
ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தததற்காக நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த 24 வயதுப் பெண் அவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்துள்ள புகாரில், தனக்கு புதிதாக சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்தற்காக தன்னுடன் 2 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்த சிறு வயது நண்பனுக்கும் அவனின் உறவினனுக்கும் நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு வனஸ்தலிபுரத்தில் உள்ள பாருடன் கூடிய ரெஸ்ட்டாரெண்டில் பார்ட்டி வைத்தேன்.
அங்கு மூவரும் மதுவருந்திய நிலையில், தன்னை அருகில் உள்ள ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுத் தப்பியோடினர் என்று தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் அறையில் இருந்து தனது அண்ணனுக்கு அந்த பெண் நடந்தது குறித்து போன் மூலம் தெரிவிக்கவே, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தப்பியோடிய பெண்ணின் நண்பனைத் தேடிப்பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்
- ஆஷிஷ் நகைப்பையை பஸ்சில் வைத்து விட்டு உணவு சாப்பிட சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப் படைகள் அமைத்து நகைகளை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
மும்பையை சேர்ந்தவர் ஆஷிஷ். இவர் அங்குள்ள நகைக்கடை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
அடிக்கடி ஐதராபாத், சங்க ரெட்டி வந்து நகை தயாரிப்பாளர்களிடம் இருந்து நகைகளை வாங்கி செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் ஐதராபாத் வந்த ஆஷிஷ் நகை தயாரிப்பாளர்களிடம் இருந்து 4 கிலோ நகைகளை வாங்கினார்.
பின்னர் ஐதராபாத்தில் இருந்து மும்பை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த பஸ் சிராக் பள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மும்பை ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் உணவு சாப்பிடுவதற்காக தாபாவில் நிறுத்தப்பட்டது.
ஆஷிஷ் நகைப்பையை பஸ்சில் வைத்து விட்டு உணவு சாப்பிட சென்றார். அப்போது 4 கிலோ தங்க நகையை திருடி சென்று விட்டனர். ஆஷிஷ் திரும்பி வந்து பார்த்தபோது நகை பையை காணவில்லை.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சிராக் பள்ளி போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப் படைகள் அமைத்து நகைகளை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.
- தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஜெக்காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 55). இவருடைய மனைவி மாதவி (50) தம்பதியின் மகன் ஹரிகிருஷ்ணா ( 30) நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்கள் வீட்டில் இருந்தனர். அப்போது வெங்கடேஷ் குளிக்கச் சென்றார்.
குளியல் அறையில் சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் தாக்கியது. அவரது சத்தம் கேட்ட அவருடைய மனைவி மற்றும் மகன் இருவரும் ஓடி சென்று அவரை காப்பாற்ற கையை பிடித்து இழுத்தனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 3 பேரும் குளியல் அறையிலேயே துடித்து இறந்தனர்.
அவருடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் பெண் சிறிது நேரம் கழித்து வந்தார். வீட்டுக் கதவு நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 3 பேரும் குளியல் அறையில் இறந்து கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.
- இப்படம் வரும் 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது.
மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது Deadpool & Wolverine என்ற படம் வெளியாக உள்ளது.
ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் வரும் வாரம் வெளியாகவுள்ள டெட்பூல் & வோல்வரின் படத்திற்கான கொண்டாட்டங்களில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாவதை ஒட்டி ஐதராபாத்தில் இப்படத்தின் மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஹக் ஜேக்மேன் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்