நிர்வாண வீடியோ: பணிப்பெண் கொடுத்த பகீர் புகார் - நடிகை டிம்பிள் ஹயாத்தி மீது வழக்குப்பதிவு

டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் மீது வீட்டுப் பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிர்வாண வீடியோ: பணிப்பெண் கொடுத்த பகீர் புகார் - நடிகை டிம்பிள் ஹயாத்தி மீது வழக்குப்பதிவு
Published on

பிரபல நடிகையான டிம்பிள் ஹயாதி 'தேவி 2', 'வீரமே வாகை சூடும்', அட்ரங்கிரே, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பல தெலுங்கு படங்களில் நடித்து அவர் புகழ்பெற்றார்.

இந்நிலையில், டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் மீது அவரது வீட்டுப் பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ஹயாதி மற்றும் அவரது கணவர் தன்னை துன்புறுத்தியதாகவும், நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும், சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை டிம்பிள் ஹயாதி, 2023-ல் ஐபிஎஸ் அதிகாரியின் கார் மீது செருப்பு வீசிய சர்ச்சையிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com