search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா"

    • காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.
    • மாநிலத்தில் கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவர் ஹரிஷ் ராவ் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. பதவியேற்றதும் முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடிக்காக தான் இருக்கும் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி உறுதி அளித்தார்.

    ஆனால் அவர் அதன்படி செயல்படவில்லை. மாநிலத்தில் கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 22 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

    தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் விவசாயிகள் கடன் தள்ளுபடி அமல்படுத்தாவிட்டால் காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வீட்டு முன்பு பி.ஆர்.எஸ். கட்சி போராட்டம் நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தை போலீஸ் அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்தனர்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தை போலீஸ் அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்தனர்.

    கட்டிடம் இடிந்து விழும்போது அங்கிருந்து பறந்து வந்த கல் ஒன்று போலீஸ் அதிகாரியின் தலையில் மோதியதில் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவர் உயிர் பிழைத்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கவிதா ஐதராபாத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • இன்று இரவுக்குள் வீடு திரும்ப வாய்ப்பு.

    ஐதராபாத்:

    தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவருமான கவிதா டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால் மார்ச் 15-ந் தேதி கைது செய்ய்பபட்டார்.

    5 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.

    திகார் ஜெயிலில் இருந்த போது கவிதாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் மகப்பேறு பிரச்சனை ஏற்பட்டன. இதற்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.

    இந்த நிலையில் கவிதா ஐதராபாத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் கவிதாவின் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் புக்கிராம் மண்டலத்தில் உள்ள சின்னப்பூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.வி.மல்லிக் தேஜா என்கிற சிங்கார புமல்லேஷ். இவர் சோமன்பள்ளியை சேர்ந்த இளம்பெண்ணுடன் இணைந்து யூடியூப் சேனலைத் தொடங்கினார்.

    இருவரும் 6 ஆண்டுகள் ஒன்றாக வேலை செய்தனர். அந்தப் பெண் சேனலுக்கு பாடல்கள் எழுதிப் பாடினார். இதனால் இருவரும் சமூகவலை தளத்தில் பிரபலமானார்கள். இந்த நிலையில் பெண் நாட்டுபுற பாடகி யூடியூப்பர் மல்லிகா தேஜா மீது போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் மல்லிகா தேஜா உடன் இணைந்து யூடியூப் சேனலில் பாடல்களை பாடி வந்தேன். அவர் எனக்கு ஒரு சிறிய தொகையை பங்காகக் கொடுத்து வந்தார். மல்லிக் தேஜா, என்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

    என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். கடந்த 2 வருடங்களாக என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினேன்.

    அவர் என்னை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் மியூசிக் ஸ்டுடியோவில் வைத்து தனது ஆசையை நிறைவேற்றும்படி வற்புறுத்தினார். நான் அவரிடம் இருந்து தப்பி வந்தேன்.

    அவர் சின்னப்பூரில் உள்ள எனது தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்து, என்னையும் பெற்றோரையும் அவதூறாக பேசி மிரட்டினார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா துணை முதல் மந்திரி விக்கிரமார்கா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா துணை முதல் மந்திரி மல்லு பாட்டி விக்கிரமார்கா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார்.

    அப்போது பஞ்சாரா ஹில்ஸ்சில் உள்ள அவரது வீட்டில் ரூ.22 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்க நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் இதர பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது சம்பந்தமாக பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்த நிலையில் மேற்கு வங்க போலீசார் அங்குள்ள ரெயில் நிலையத்தில் கட்டு கட்டாக பணத்துடன் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பீகாரை சேர்ந்த ரோஷன் குமார் மற்றும் உதயகுமார் என தெரியவந்தது.

    அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா துணை முதல் மந்திரி விக்கிரமார்கா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். 2 பேரையும் மேற்குவங்க போலீசார், ஆந்திரா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நடிகை புகார்.
    • இவரது யூடியூப் சேனலை 1 கோடிக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.

    தெலுங்கானாவின் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், நிர்வாண படங்கள், வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் நடிகை ஒருவர் ஹர்ஷா சாய் மீது புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தன் மீது பொய் புகார்களை சுமத்துவதாகவும், அதை சட்ட ரீதியில் சந்திக்கப்போவதாக ஹர்ஷா சாய் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஏழை மக்களுக்கு பணம், பொருட்கள் உதவி செய்வதை வீடியோவாக எடுத்து யூடியூப் மற்றும் தனது சமூக வலைதள பக்கங்களில் யூடியூபர் ஹர்ஷா சாய் பதிவிட்டு வருகிறார். இவரது யூடியூப் சேனலை 1 கோடிக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மகேஷ் பாபு வழங்கினார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் ரூ.50 லட்சம் ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக நடிகர் மகேஷ்பாபு வழங்கினார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.

    மேலும், AMB சினிமாஸ் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கப்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வீடுகளை காலி செய்ய மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றி வீடுகளை இடித்தனர்.
    • சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை முடிவு செய்தது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு, சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை முடிவு செய்தது.

    அதன்படி நேற்று மல்காஜ்கிரி மாவட்டம் குக்கட் பள்ளி, சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர், நல்ல செலவு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மற்றும் கிரேன்கள் கொண்டுவரப்பட்டன.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வீடுகளை காலி செய்ய மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றி வீடுகளை இடித்தனர்.

    பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்க முடியாத 7 மாடி கட்டிடத்திற்கு குண்டு வைத்து தகர்த்தனர். கட்டிடம் சரிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

    • திருடனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.
    • சாப்பாடு தாருங்கள் என அலறினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் எல்லா ரெட்டி கூடம் கிராமத்தில் நேற்று வாலிபர் ஒருவர் வீடுகள் மற்றும் அங்குள்ள ஒரு கோவிலை நோட்ட மிட்டபடி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார்.

    அதைப் பார்த்த அந்த ஊர் பொதுமக்கள் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபர் திருட வந்துள்ளார் என்பதை ஊர்ஜிதம் செய்தனர். இதைத் தொடர்ந்து வாலிபரை பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். அவரை சிலர் அடித்து உதைத்தனர்.


    அப்போது வாலிபர் கதறி அழுதார். எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்கள். ஆனால் என்னால் பசி தாங்க முடியவில்லை. சாப்பாடு தாருங்கள் என அலறினார். இதை தொடர்ந்து பொதுமக்கள் தாக்குதலை நிறுத்தினர்.

    ஒரு வீட்டில் இருந்து புளியோதரை கொண்டு வந்தனர். கட்டி வைத்திருந்த திருடனை விடுவிக்காமல் அவர்களே ஊட்டி விட்டனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 21) என்பதும், வீடுகளில் திருட வந்ததும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை கைது செய்தனர்.

    திருட வந்த வாலிபரை கட்டி வைத்து உணவு ஊட்டி விட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன.
    • லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ஏராளமான விநாயகர் சிலைகள் பரிதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

    33-வது வார்டு காந்திநகர் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன. இந்த லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த ஏலத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஷேக் லத்தீப் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விநாயகர் லட்டுக்களை அவர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    கடைசியில் 2 லட்டுகளையும் ரூ.20,016 மற்றும் 11,016-க்கு லத்தீப் குடும்பத்தினர் ஏலம் எடுத்தனர். லட்டு கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாகமடைந்தனர்.

    விநாயகர் சிலை வைத்த விழா குழுவினர் லத்தீப் குடும்பத்தினரிடம் லட்டுக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த விநாயகர் லட்டு ஏலம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கண்டெய்னர் விடுதி உருவாகி வரும் நிலையில், தெலுங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடம் உருவாகியுள்ளது.
    • மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து அதே இடத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கண்டெய்னர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

    தற்போது பல இடங்களிலும் தற்காலிக கண்டெய்னர் கட்டிடங்கள் பெருகி வருகிறது. விலை குறைவாகவும் எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடதிக்ரு கொண்டு செல்ல கூடியதாகவும் இருப்பதால் பலர் இந்த கண்டெய்னர் கட்டிடங்களை உருவாக்கி வருகின்றனர்.

    கண்டெய்னர் விடுதி, உணவகங்கள் உருவாகி வரும் நிலையில், தெலுங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடம் உருவாகியுள்ளது.

    முலுகு மாவட்டத்தில் உள்ள கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பள்ளிக் கட்டடம் கட்ட வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து அதே இடத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கண்டெய்னர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடிசை பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். அப்பகுதியில் மழை பெய்தால் குழந்தைகள் படிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் அப்பகுதியில் புதிய பள்ளி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட வனத்துறையினர் அனுமதி கிடைக்காததால் புதுமையாக யோசித்து கண்டெய்னர் பள்ளிக்கூடத்தை மாவட்ட ஆட்சியர் உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே முலுகு மாவட்டத்தில் போச்சாபூர் கிராமத்தில் மருத்துவமனை வேண்டும் என்ற பழங்குடி மக்களின் கோரிக்கைக்கு இணங்க கண்டெய்னர் மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பழங்குடி மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • பிஆர்எஸ் எம்.எல்.ஏ.-க்கள் 10 பேர் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர்.
    • அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பிஆர்எஸ் தொடர்ந்து வலியுறுத்தல்.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததில் இருந்து சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியில இருந்து தொடர்ந்த எம்.எல்.ஏ.-க்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

    இதுவரை 10 எம்.எல்.-க்கள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இந்த நிலையில் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ. கவுசிக் ரெட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சேலை மற்றும் வளையல்களை கையில் காட்டியவாறு, பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.-க்கள் இவைகளை அணிய வேண்டும். எம்.எல்.ஏ.-க்கள் பெயர்களை குறிப்பிட்டு நீங்கள் ஆண்கள் அல்ல. ஆகவே இதை அணியுங்கள்" என்றார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் பந்த்ரு சோபா ராணி, மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கும் போது ஷூவை காண்பித்தார். மேலும், கவுசிக் ரெட்டி பெண்களை இழிவுப் படுத்தியதாகவும் தெரிவித்தார். அத்துடன் நீங்கள் வளையல், சேலையை காட்டுனீர்கள். நாங்கள் உங்களுக்கு செருப்பை காண்பிக்கிறேன். நீங்கள் பெண்களை இழிவுப்படுத்தினால் நாங்கள் உங்களை செருப்பால் அடிப்போம்" என்றார்.

    மாநில மகளிர் கூட்டுறவு வளர்ச்சிக் கழகத் தலைவி மற்றும் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஆவார்.

    தேர்தலுக்கு பின் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகிய 10 எம்.எல்.ஏ.-க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பிஆர்எஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    ×