என் மலர்
நீங்கள் தேடியது "tractor accident"
- பெண்கள் உட்பட 15 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த கடலாடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 28) இவர் டிராக்டரில் டிப்பர் இணைக்கப்பட்டு அதன் மூலம் 15 பெண்களை ஏற்றிக்கொண்டு போளூர் அருகே உள்ள முருகாபாடி அடுத்த ஒகூர் பகுதியில் மஞ்சம் புல் அறுப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.
அப்போது கடலாடியில் இருந்து போளூர் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள வ.பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டரின் பின்புறம் இருந்த டிப்பர் திடீரென நிலை தடுமாறி தலைகீழாக சாலை ஓரம் கவிழ்ந்தது.இதில் அமர்ந்து வந்த 15 பெண்களும் சிக்கிக் கொண்டனர்.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் பரமேஸ்வரி (50) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேலும் டிரைவர் சூர்யா உட்பட 15 பெண்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சங்கராபுரம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
- டிராக்டரின் சக்கரம் அரிகிருஷ்ணன் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு போலீஸ்சரகம் ரங்கப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். அவரது மகன் அரிகிருஷ்ணன் (வயது 27). இவர் இன்று காலை சீர்பனந்தல் கிராமத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திருவரங்கம் சாலை வளைவில் திரும்பியபோது எதிரே கரும்புலோடு ஏற்றிய டிராக்டர் வந்தது. இதன் மீது மோதாமல் இருக்க அரிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்தார். அந்த நேரம் டிராக்டரின் சக்கரம் அரிகிருஷ்ணன் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இதுகுறித்து பகண்டை கூட்டு ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அரிகி ருஷ்ணன் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரணி:
ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தையொட்டி உள்ள செய்யாற்றில் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டுவண்டுகளில் மணல் கொள்ளை சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தச்சூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 21). இவர் இன்று காலை தச்சூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது மணல் கடத்தி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிராக்டரை சிறைபிடித்து ஆரணி தேவிகாபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. செந்தில், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் தச்சூர் பாலாற்றில் தொடர் மணல் கொள்ளை சம்பவம் அதிகம் நடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மணல் திருட்டை தடுத்து விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த ஓ.கீரனூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 40). இவர் வெளி நாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி பராசக்தி (36). இவர் நேற்று ஓ.கீரனூரில் இருந்து பெண்ணாடத்துக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஊருக்கு செல்வதுக்கு பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது பராசக்தியின் உறவினர் மணிமாறன் மற்றும் அவரது மனைவி கலைசெல்வி ஆகிய 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர்.
பராசக்தியை பார்த்தவுடன் மணிமாறன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அவர்கள் பராசக்தியிடம் உங்கள் ஊருக்கு தான் செல்கிறோம் என்று கூறினர்.
பின்னர் அவர்கள் பராசக்தியையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டனர். 3 பேரும் ஓ.கீரனூர் நோக்கி புறப்பட்டனர்.
ஓ. கீரனூர் சாலை பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையோரம் டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அந்த டிராக்டரின் அருகில் மணிமாறன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதை கவனிக்காத டிரைவர் திடீரென டிராக்டரை இயக்கினார்.
அப்போது எதிர்பாராத விதமாக மணிமாறனின் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் பராசக்தி டிராக்டரின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மணிமாறன், கலைசெல்வி ஆகியோரும் காயம் அடைந்தனர்.
விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தா சலம் அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு படுகாயம் அடைந்த பராசக்திக்கு முதலுதவி சிகிச்சையளிக்கபட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் பராசக்தி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யபட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் குட்டி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சாந்தா (வயது 57), ருக்கு (40), கலா (47) ஆகிய பெண்கள் கூலிக்கு வேலை செய்கின்றனர்.
இன்று காலை ஆரணி- செங்கல் சூளையில் இருந்து டிராக்டரில் 3 பெண்களும் கட்டுமான பணிக்காக செங்கற்களை ஏற்றினர். பின்னர் டிராக்டரில் செங்கற்கள் மேல் பரப்பில் அமர்ந்தபடி சென்றனர்.
சேத்துப்பட்டு ரோட்டில் உள்ள லட்சுமி நகர் என்ற இடத்தில் சென்ற போது, டிராக்டர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த 3 பெண்கள் மீதும் செங்கல் சரிந்தது. இதில் அவர்கள் 3 பேரும் பலத்தகாயமடைந்தனர். சிகிச்சைக்காக மீட்கப்பட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ருக்கு நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச் சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த வீரங்கிவேடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் கோகுல் (வயது 3½).
இன்று அதிகாலை பாபுவின் தம்பி சண்முகம் தனது மோட்டார் சைக்கிளில் சிறுவன் கோகுலை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றார்.
அப்போது எதிரே மணல் கடத்தி வந்த டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் கோகுல் பரிதாபமாக இறந்தான். சண்முகத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து நடந்ததும் டிராக்டரை நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பேடு ஏரியில் மர்ம நபர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் முருகன் (34). அதே பகுதியில் கிழக்கு கடற்கரையை கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கி வந்த கார் முருகன் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.