என் மலர்
நீங்கள் தேடியது "Driver Dead"
- மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.
- மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.
மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தாழ்வாக சென்ற மின் கம்பி மீது லாரி உரசியது. இதில் லாரியில் மின்சாரம் பாய்ந்தது.
- தசரதன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது48). லாரி டிரைவர். இவர் வேலூரில் உள்ள குவாரியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு நாராயணபுரம் வந்தார்.
பின்னர் மணலை கொட்ட முயன்று டிப்பர் லாரியை இயக்கினார். அப்போது அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி மீது லாரி உரசியது. இதில் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. தசரதன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே டிரைவர் தசரதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து நடந்த அப்பகுதியில் பல இடங்களில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதாக தெரிகிறது. அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு ரோடு வீரசிக்கம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.
- பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சுக்குள் லாரி புகுந்தது. இதில் பஸ்சில பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
செம்பட்டி:
சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ், சுமார் 40 பயணிகளுடன் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை கம்பம் அனுமந்தபட்டியைச் சேர்ந்த டிரைவர் மணி என்பவர் ஓட்டி வந்தார். அதேபோல், வத்தலகுண்டுவில் இருந்து லாரியில் செங்கல்களை ஏற்றி கொண்டு, தென்காசி அருகே இடைகால் பகுதியை சேர்ந்த டிரைவர் மாடசாமி (47) என்பவர் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு ரோடு வீரசிக்கம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சுக்குள் லாரி புகுந்தது. இதில் பஸ்சில பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி லாரி டிரைவர் மாடசாமி படுகாயமடைந்தார். சுமார் 1 மணநேரத்திற்கும் மேலாக போராடி அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பஸ்சில் பயணம் செய்த தேனி, பெரியகுளம், கம்பம் பகுதிகளை சேர்ந்த டிரைவர்கள் மணி, சிவக்குமார், ரபீக், கிறிஸ்டோபர், சண்முகவள்ளி, சுரேந்திரன், பரமசிவன், முத்துமணி உள்பட 10 பேர் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சொக்கலிங்கபுரம், சித்தையன்கோட்டை வழியாக மாற்றுவழியில் வாகனங்களை திருப்பி விட்டனர்.
- மின் கம்பி ஒன்று உரசியதால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் ராமர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தார்.
- பஸ்சில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதன்பிறகு இந்த சம்பவம் சின்னசேலம் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 36). இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவரகா பணியாற்றி வந்தார்.
நேற்று மாலையில் ராமர் பஸ்சில் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து கல்லாநத்தம் கிராமத்தில் இறக்கி விட்டார். பின்னர் அந்த பஸ்சை டிரைவர் ராமர் ஒரு மேடான பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தலாம் என நினைத்து ஓட்டி சென்றார்.
அப்போது பஸ் மீது அந்த வழியாக சென்ற மின் கம்பி ஒன்று உரசியது. இதனால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் ராமர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தார்.
பஸ்சில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதன்பிறகு இந்த சம்பவம் சின்னசேலம் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ராமரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- வடமதுரை அருகே விருந்துக்கு சென்ற டிரைவர் திடீரென உயிரிழந்தார்.
- இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுைர அருகே மொட்டனம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (48). இவர் நெடுஞ்சாலைத்துறையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு வீரமணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று அய்யலூர் வண்டிகருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற கிடாவெட்டு விருந்துக்கு சென்றார். சாப்பிட்டுக்கொண்டிரு ந்தபோது திடீரென மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
- விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
பெங்களூரில் இருந்து சென்னைக்கு மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று காலை வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதியது.
அந்த நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ் விபத்தில் சிக்கியிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை உடையந்த அள்ளி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் (வயது 53). மற்றும் பயணிகள் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் மாதப்பன் பரிதாபமாக இறந்தார்.
காயமடைந்த பயணிகள் 9 பேர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் 8 பேர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது. விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பஸ் ஒன்று அஸின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ரோட்டோரத்தில் இருந்த சுவர் மீது மோதி நின்றது.
- இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸினை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இரணியல்:
திருவட்டார் அருகே வியன்னூர் குன்றுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஸின் (வயது 28).
இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தினமும் காலை, மாலை நேரங்களில் பள்ளியிலிருந்து மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதுடன் மாலையில் வீட்டிற்கு அழைத்து சென்று வந்தார்.
நேற்று முன்தினம் மாலையில் மாணவிகளை வீட்டில் இறக்கி விட்டு பஸ்சை வில்லுக்குறி பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலையில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்வதற்காக வில்லுக்குறியில் நிறுத்தி இருந்த பஸ்சை எடுப்பதற்காக வீட்டிலிருந்து வில்லுக்குறிக்கு வந்தார்.
பஸ்சை விட்டு இறங்கி வில்லுக்குறி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அஸின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ரோட்டோரத்தில் இருந்த சுவர் மீது மோதி நின்றது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸினை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அஸின் பலியானது குறித்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
விபத்து குறித்து இரணியல் போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- வேடசந்தூரில் ரத்த காயத்துடன் டிரைவர் இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
- அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர் :
திண்டுக்கல்மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு அருகே ராஜகோபால புரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). தாய் தந்தை இல்லாத இவருடைய உறவினர்கள் அனைவரும் வெளியூரில் உள்ளனர். இங்கு டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று காலை காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் தனது வீட்டின் முன்பாக பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலில் பலத்த காயங்கள் இருப்பதால் ராஜேசை யாரும் கொலை செய்து உடலை வீசிச் சென்றனரா? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புழுகாண்டி மகன் மகேஸ்வரன் (வயது 27). வேன் டிரைவர்.
இவர் இன்று அந்த பகுதியில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் கண்மாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. இதனை அறியாமல் கண்மாய்க்குள் இறங்கிய மகேஸ்வரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கி உள்ளார்.
இதனை கண்டவர்கள் கண்மாய்க்குள் இறங்கி மகேஸ்வரனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கண்மாயில் இறங்கி தேடி மகேஸ்வரன் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான மகேஸ்வரனுக்கு மாரீஸ்வரி (24) என்ற மனைவியும், மகாலட்சுமி (5), திவ்யா (2) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயல்பட்டினத்தை சேர்ந்த லாரி டிரைவர் அகமது என்பவரை கைது செய்தனர்.