ஆண்டிபட்டி அருகே அரசு பஸ்சில் இருந்து குதித்த டிரைவர் மரணம்

பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக செல்லவே கண்டக்டர் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர். திடீரென விழித்த போது பஸ் பள்ளத்தில் கவிழ்வது போல் செல்லவே உடனடியாக பஸ்சில் இருந்து தங்கபாண்டியன் கீழே குதித்தார்.
ஆண்டிபட்டி அருகே அரசு பஸ்சில் இருந்து குதித்த டிரைவர் மரணம்
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள நாயக்கர் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (43). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரையில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக பழனி செட்டிபட்டியை சேர்ந்த வினோத்குமார் (30) என்பவர் இருந்தார். பஸ் கொண்டமநாயக்கன்பட்டி 8கண் பாலத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது தங்க பாண்டியன் கண் அயர்ந்து விட்டார்.

அப்போது பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக செல்லவே கண்டக்டர் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர். திடீரென விழித்த போது பஸ் பள்ளத்தில் கவிழ்வது போல் செல்லவே உடனடியாக பஸ்சில் இருந்து தங்கபாண்டியன் கீழே குதித்தார். கட்டுப்பாட்டை இழந்து சென்ற பஸ் அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.

இதனால் தங்கபாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்டக்டர் வினோத்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பஸ் பலத்த சேதமடைந்த நிலையிலும், அதில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்சா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com