டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

சண்முகம் என்பவரின் வயலில் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டியபோது, சேற்றில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது. திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
Published on

திருக்கழுக்குன்றம்:

திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது58) டிராக்டர் டிரைவர். அதே பகுதியில் சண்முகம் என்பவரின் வயலில் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டியபோது, சேற்றில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.

இதில் சகதியில் சிக்கி மூச்சு திணறி ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com