search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி அருகே ஆம்னி பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர் பலி
    X

    விபத்தில் சிக்கியவர்களை போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்.


    செம்பட்டி அருகே ஆம்னி பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர் பலி

    • செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு ரோடு வீரசிக்கம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.
    • பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சுக்குள் லாரி புகுந்தது. இதில் பஸ்சில பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

    செம்பட்டி:

    சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ், சுமார் 40 பயணிகளுடன் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை கம்பம் அனுமந்தபட்டியைச் சேர்ந்த டிரைவர் மணி என்பவர் ஓட்டி வந்தார். அதேபோல், வத்தலகுண்டுவில் இருந்து லாரியில் செங்கல்களை ஏற்றி கொண்டு, தென்காசி அருகே இடைகால் பகுதியை சேர்ந்த டிரைவர் மாடசாமி (47) என்பவர் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு ரோடு வீரசிக்கம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சுக்குள் லாரி புகுந்தது. இதில் பஸ்சில பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி லாரி டிரைவர் மாடசாமி படுகாயமடைந்தார். சுமார் 1 மணநேரத்திற்கும் மேலாக போராடி அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பஸ்சில் பயணம் செய்த தேனி, பெரியகுளம், கம்பம் பகுதிகளை சேர்ந்த டிரைவர்கள் மணி, சிவக்குமார், ரபீக், கிறிஸ்டோபர், சண்முகவள்ளி, சுரேந்திரன், பரமசிவன், முத்துமணி உள்பட 10 பேர் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சொக்கலிங்கபுரம், சித்தையன்கோட்டை வழியாக மாற்றுவழியில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

    Next Story
    ×