என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின்கம்பியில் லாரி உரசியதால் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி
  X

  மின்கம்பியில் லாரி உரசியதால் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாழ்வாக சென்ற மின் கம்பி மீது லாரி உரசியது. இதில் லாரியில் மின்சாரம் பாய்ந்தது.
  • தசரதன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது48). லாரி டிரைவர். இவர் வேலூரில் உள்ள குவாரியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு நாராயணபுரம் வந்தார்.

  பின்னர் மணலை கொட்ட முயன்று டிப்பர் லாரியை இயக்கினார். அப்போது அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி மீது லாரி உரசியது. இதில் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. தசரதன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே டிரைவர் தசரதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து நடந்த அப்பகுதியில் பல இடங்களில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதாக தெரிகிறது. அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

  இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

  Next Story
  ×