

தூத்துக்குடி:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் கல்குளத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 32). லாரி டிரைவர். இவர் குமரி மாவட்டத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு தூத்துக்குடிக்கு வந்தார். ஸ்பிக்நகரில் லாரியை நிறுத்திவிட்டு மடத்தூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்ததும் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சென்று விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.