என் மலர்
நீங்கள் தேடியது "lorry accident"
- சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளது.
- இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து சிமெண்ட் கலவையை டேங்கர் லாரி மூலம் எடுத்துக்கொண்டு ஓட்டுநர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த பாபு என்பவர் வந்துள்ளார்.
சென்னையில் சிமெண்ட் கலவையை இறக்கிவிட்டு மீண்டும் திருவள்ளூர் வழியாக டேங்கர் லாரியை ஓட்டி வந்துள்ளார். சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளது.
இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று அமாவாசை தினம் என்பதால் வீரராகவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இந்தப் போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
சோழவரத்தை அடுத்த நெற்குன்றம் பள்ள சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு காரனோடை பஜாரில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அந்த சாலையில் வந்த கனரக வாகனமான கண்டெய்னர் லாரி அதி வேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஏழுமலை பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த விபத்து கனரக வாகனம் நகருக்குள் வந்ததால் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய லாரி நகருக்குள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கனரக வாகனங்களை இனி அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 65). இவரது நண்பர் மொக்கையன் (55). இருவரும் நேற்று திருப்பூர் சந்தைபேட்டைக்கு வந்தனர். அங்கு வேலை முடிந்து இரவு 10.30 மணிக்கு மேல் பூம்புகார் நகருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
திருப்பூர்- பல்லடம் சாலையில் சென்றபோது முன்னால் லாரி சென்றது. லாரியை பின் தொடர்ந்தே சவுந்திரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். ஒரு இடத்தில் லாரி திடீரென வேகம் குறைந்தது. இதனை எதிர்பார்க்காத சவுந்திரபாண்டியன் லாரியின் பின்பக்கம் மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினர். லாரி சக்கரம் இருவரது உடல்கள் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சவுந்திரபாண்டியனும், அவரது நண்பர் மொக்கையனும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கநாதன் (33) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை ராமாபுரம் மியாட் ஆஸ்பத்திரி அருகில் நேற்று இரவு லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
அப்போது அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் 3 பேர் வெளியூர் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர். தறிகெட்டு ஓடிய லாரி 3 பேர் மீதும் மோதியது.
இந்த விபத்தில் 3 பேரும் லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த மூர்த்தி, முரளி, சிவகுமார் என்பதும் சொந்த ஊருக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்த போது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.
விபத்து நடந்ததும் லாரியை டிரைவர் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது.
இங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ், தனது மனைவி மற்றும் 7 மாத ஆண் குழந்தை வசந்த குமாருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம் குழந்தை வசந்தகுமாரை தங்குவதற்காக அமைக்கப்பட்ட குடிசை வீட்டு முன்பு படுக்க வைத்தவிட்டு காமராஜும், அவரது மனைவியும் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்தனர். அந்த நேத்தில் செங்கல் சூளையில் நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரியை டிரைவர் மணிமாறன் ஒட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டார்.
அப்போது வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வசந்தகுமாரின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.
இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் மணிமாறனை தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு பகுதியை சேர்ந்த கருணாகரன்(வயது 40) சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இதேகடையில் உதவியாளராக உளுந்தூர் பேட்டை அன்னை சத்யா தெருபகுதியை சேர்ந்த சுரேஷ்(30) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு 2 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர்.
பின்னர் அவர்கள் சாப்பிடுவதற்காக உளுந்தூர்பேட்டை பகுதியில் எம்.எஸ்.தக்கா என்ற இடத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். அந்த பகுதியில் உள்ள சாலையை மோட்டார்சைக்கிளில் கடக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோட்டார்சைக்கிளில் இருந்து கருணாகரன், சுரேஷ் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுரேஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த சுரேசை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் இருந்து சவுக்கு மரம் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று பெங்களூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விழுப்புரம் மாவட்டம், தேனிப்பட்டியை சேர்ந்த தமிழ் வாணன் (வயது34) என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள ஆண்டியூர் பகுதியில் சென்ற போது லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்வாணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான தமிழ்வாணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மூலனூர் ரோட்டை சேர்ந்தவர் திருமூர்த்தி கட்டிடத்தொழிலாளி. இவர் குடும்பத்துடன் அங்குள்ள செங்கல்சூளை குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இவரது மகள் முத்துலட்சுமி (வயது 20). இவர் அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். முத்துலட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந்தநிலையில் இன்று காலை முத்துலட்சுமி மூலனூர் சாலையில் சைக்கிளில் சென்றார். அப்போது பரமகுடியில் இருந்து ஈரோடு சர்க்கரை ஆலைக்கு மரத்தூள் ஏற்றிய லாரி வந்தது.
எதிர்பாராதவிதமாக லாரி முத்துலட்சுமி ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அதே லாரி முத்துலட்சுமி தலையில் ஏறி இறங்கியது. இதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பகுதிமக்கள் அவரை மடக்கிப்பிடித்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த வல்லம் ஸ்ரீஅம்மன் நகரை சேர்ந்தவர் சமுத்திரராஜன் (வயது55 ). இவர் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் எதிரே வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சமுத்திரராஜன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மகன் வினோத்குமார் வல்லம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.