என் மலர்
நீங்கள் தேடியது "Tiruvannamalai accident"
- இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் பயணம் செய்த சக்திவேல், காமாட்சி இளையராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள பெரியகல்லப்பாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). அதே பகுதியை சேர்ந்த துரை மனைவி சித்ரா (24), விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி இந்திரா (44) ஆகியோர் இவரது உறவினர்களாவர்.
பெரியகல்லப்பாடியில் உள்ள இவர்களது உறவினர் இறந்ததையொட்டி துக்கம் விசாரிக்க இந்திரா வந்திருந்தார். அவரையும் சித்ராவையும் தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெரிய கல்லப்பாடிக்கு விக்னேஷ் புறப்பட்டார்.
வெறையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது வேலூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற அரசு விரைவு பஸ் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சித்ரா, விக்னேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர். இது குறித்து வெறையூர் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 40). இரவது மகன் சக்திவேல் (15). சக்திவேலுக்கு உடல்நிலை சரியில்லாததால் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். காரில் சக்திவேல், காமாட்சி, செல்வம் (42), சஞ்சய் (13) ஆகியோர் சென்றனர்.
காரை இளையராஜா (28) ஓட்டி சென்றார். கோளாப்பாடி அருகே கார் சென்ற போது கோயம்புத்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரியும்-காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் பயணம் செய்த சக்திவேல், காமாட்சி இளையராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
செல்வம், சஞ்சய் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வந்தவாசி,பிப்.2-
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த கீழ்நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பஸ் மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர்.
பஸ்சை டிரைவர் தினேஷ் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வந்தவாசி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக 4 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் நடந்து குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் ஆரணி, வேலூர், புறவழி சாலையில், சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பதால் பொதுமக்கள் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.* * *பஸ் கவிழ்ந்து கிடந்த காட்சி.
- ஆத்துவாம்பாடியிலிருந்து களம்பூர் நோக்கி வந்த டிராக்டர் அண்ணாமலை பைக் மீது மோதியது.
- அண்ணாமலை பலத்த காயத்துடன் மயங்கிக்கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முக்குரும்பை ஊராட்சி மன்ற தலைவராக அண்ணாமலை (வயது 52) என்பவர் பதவி வகித்து வந்தார்.
தி.மு.க. பிரமுகரான இவர் இன்று அதிகாலை களம்பூர் பகுதியிலிருந்து தனது வீட்டிற்கு முக்குரும்பை கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆத்துவாம்பாடியிலிருந்து களம்பூர் நோக்கி வந்த டிராக்டர் அண்ணாமலை பைக் மீது மோதியது.
இதில் அண்ணாமலை பலத்த காயத்துடன் மயங்கிக்கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அண்ணாமலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக அவரின் உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்தனூர் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் 3பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
- குழந்தை துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தானகவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 30).
இவரது மனைவி மணிமேகலை (25) தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
தம்பதிக்கு 1½ வயதில் துரைமணி என்ற குழந்தை இருந்தது. இன்று ராஜதுரை, மணிமேகலை குழந்தை துரைமணி ஆகிய 3 பேரும் பைக்கில் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தனர்.
முத்தனூர் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் 3பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். குழந்தை துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய மணிமேகலையை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கலஸ்தம்பாடியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 21), ராணவ வீரர். இவர் நேற்று வீட்டில் இருந்து மங்கலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
நூக்கம்பாடி என்ற இடத்தில் சென்ற போது ஈரோட்டில் இருந்து எதிரே வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. இதில் மணிவண்ணன் படுகாயமடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.