என் மலர்
மயிலாடுதுறை
- சீர்காழி நகராட்சி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் நகர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தூய்மை பணியை தொடங்கினர்.
- என். எஸ் மாணவர்கள் ஆசிரியர் பரணி தலைமையில் தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி 22 வது வார்டில் சீர்காழி ரோட்டரி சங்கம் சீர்காழி நகராட்சி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் நகர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தூய்மை சேவை பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.
நகரமன்ற உறுப்பினர் வேல்முருகன், இன்ஜினியர் சுப்பிரமணியன் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி ஆணையர் ஹேமலதா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
என். எஸ். எஸ் மாணவர்கள் ஆசிரியர் பரணி தலைமையில் தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நகர் நல சங்கத் தலைவர் சீனிவாசன், வீரசேனன், சங்கர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நகர் நல சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி பொருளாளர் கண்ணன் , பெஸ்ட் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நகர் முழுவதும் தூய்மைப் பணியை என் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் செய்து முடித்தார்கள். முடிவில் செயலாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.
- காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
- ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட திருவெண்காடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், உமாமகேஸ்வரி சங்கர் முன்னிலை வகிக்க, திருவெண்காடு ஊராட்சிமன்ற தலைவர்.சுகந்தி நடராஜன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தினை செயல்படுத்தி எல்லா சாலைகளையும் மேம்படுத்தி வருகிறார்.
அந்த அடிப்படையில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வனபாதி தாமரைகுளம் ரோடு ரூ.49 லட்சம் மதிப்பிலும், தென்பாதி சாலை ரூ.32 லட்சம் மதிப்பிலும், திருவெண்காடு பாத்தம்பள்ளி சாலை ரூ.40 இலட்சம் மதிப்பிலும், பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட கலெக்டர் மூலமாக தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றி தரப்படும்.
இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நூறு நாள் வேலை நாட்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.
அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு என்ற பெரிய கொடிய நோய் இன்று எங்கும் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது.
இது பரவாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். வருவதற்கு முன் இதை நாம் தடுக்க வேண்டும். ஆகவே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இந்த கிராம சபை கூட்டத்திலே பிளாஸ்டிக் பயன்படு த்துவ தை தவிர்க்க வேண்டும்.
அண்ணா பிறந்த நாள் அன்று யாரும் செயல்படுத்த முடியாத 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தி காட்டியவர் நம் முதல்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மயிலாடு துறை மாவட்ட கூட்டுறவு தலைவர் ஞானவேலன், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர்.கமலஜோதி தேவேந்திரன், ஒன்றியக்குழு துணைத்த லைவர் உஷா நந்தினி பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பி னர்கள் ஆனந்தன், தியாக விஜேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பஞ்சுகுமார், ஜான்சி ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
- நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நடை பெற்றது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகரில் ஒட்டுமொத்தமாக தூய்மை பணி நடைபெற்றது. 18-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிய பஸ் நிலையம், அம்பேத்கார் சிலை, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மற்றும்
எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணை தலைவர் சுப்பராயன் ஆகியோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர் இதே போல் 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தூய்மை சேவா இயக்கத்தின் படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள் பலர் பங்கேற்றனர். 14-வது வார்டு பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பைகளை அகற்றினர்.
- மருத்துவ முகாம் வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்றது.
- தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் செல்வராஜ் ஆலோசனை யின் படி ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் சிறப்பு மருத்துவ முகாம் வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்கு நகர் நல அலுவலர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் சுரேஷ், துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட் டேவிட் பால், பழனிச்சாமி ஆகியோர் முன்னில வைக்கத்தனர். 250 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களது உடல்களில் உள்ள நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றனர். மருத்துவர் ரவிக்குமார் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.
- போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- ஒருவழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி போக்குவரத்து காவல்துறை சார்பில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வா ளர்கள் பிறைச்சந்திரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் ஆய்வாளர் சிவக்குமார் பேசுகையில், ஆட்டோ ஓட்டுனர்கள் பணியின்போது சீருடை அணிந்து வாகனங்களை இயக்கிடவேண்டும், மதுஅருந்திவிட்டோ, செல் போன் பேசிக்கொண்டோ, வாகனங்களை இயக்ககூடாது.அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் நகரில் ஒருவழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி,போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்கவேண்டும் என்றார். அப்போது போக்குவரத்து முதல்நிலை காவலர்கள் தேவேந்திரன், பூபாலன், அண்ணாமலை மற்றும் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர். முடிவில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- 63 கிலோ வாட் திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது.
- நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டம் திருவெண்காடு பிரிவுக்கு உட்பட்ட திருநகரி மற்றும் திருவாலி கிராமங்களில் கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 63 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அதனை இயக்கி வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதன் மூலம் அப்பகுதியில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்விற்கு சீர்காழி மின்வாரிய கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் விஜய பாரதி, விஸ்வநாதன், திருவெண்காடு உதவி மின் பொறியாளர் ரமேஷ்குமார், சீர்காழி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தர்ராஜன், தாமரை செல்வி திருமாறன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
- மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகரமன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ஹேமலதா, துணைத்தலைவர் சுப்பராயன், பொறியாளர் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில்,
ரமாமணி (அ.தி.மு.க): சீர்காழி எரிவாயு தகணமேடை முன்பு நிர்வகித்த வந்த பாபு என்பவருக்கு வழங்கிடவேண்டும்.
ஏ.பி.எஸ். பாஸ்கரன் (தி.மு.க): சீர்காழி நகராட்சி சார்பில் 16 பேட்டரி வண்டிகள் மற்றும் டாட்டா ஏசி வாகனங்கள் குப்பை அல்ல வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளதா? குப்பைகள் சேகரிக்கப்பட்டு எடை போடுவதை யார் கண்காணிக்கின்றனர்.
ராஜசேகரன் (தே.மு.தி.க): உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் தமிழக முதல்வரை அவமதிப்பு செய்யும் கர்நாடகா அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சாமிநாதன் (தி.மு.க): எனது வார்டு பகுதியில் மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் (பா.ம.க): சீர்காழி நகராட்சி கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலையில் உள்ளது. நகராட்சி தரம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவதாஸ் (தி.மு.க): எனது பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். கஸ்தூரிபாய் (தி.மு.க): எனது பகுதியில் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
தலைவர் துர்கா ராஜசேகரன்: எரிவாயு தகணமேடை அறக்கட்டளை மூலம் நிர்வகித்திட அறிவிப்பு வெளியிடப்படும். தகுதியுடைய அறக்கட்டளையினர் விண்ணப்பம் செய்து ஒப்புதல் பெற்று நிர்வகிக்கலாம். தனிநபர் மேற்கொள்ளமுடியாது. அயோத்திதாஸ் திட்டத்தின் தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடி நதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எஸ்.சி, எஸ். டி பகுதி மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் பணிகளை தேர்வு செய்து எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக சீர்காழி நகர மன்ற கூட்ட அரங்கில் சி.சி.டி.வி கேமரா வைப்பதற்கு நகர மன்ற உறுப்பினரிடம் நகர சபை தலைவர் முன் அனுமதி பெறவில்லை. பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் விலை மதிப்பு கூடுதலாக உள்ளது. இந்தப் பணிகள் தரம் இல்லைஎனக்கூறியும், செய்யாத பணிகளை மன்ற பொருளில் வைத்து மக்கள் வரிபணத்தை வீணடிப்பதாகவும் குற்றம் சாட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வை சேர்ந்த ரம்யா, வள்ளி , ரேணுகாதேவி, அ.தி.மு.க.வை சேர்ந்த ரமாமணி, முழுமதி, பாலமுருகன், நித்யா தேவி, சூரிய பிரபா, கலைச்செல்வி, ராஜேஷ் ஆகிய 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்ய வேண்டுமா? என விவாதித்தனர்.
- கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி தொடக்கப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி கட்டடங்கள், சமையல் கூடம் கட்டடம் ஆகியவற்றினை நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், ஆணையர் ஹேமலதா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பருவமழை தொடங்க வுள்ளதால் கட்டடங்களில் உறுதித்தன்மை எவ்வாறு உள்ளது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்ய வேண்டுமா ? என்பது குறித்து விவாதித்தனர். தொடர்ந்து சீர்காழி பழையபேருந்து நிலையம் பகுதியில் ரூ.4 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்ட நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், போக்குவரத்திற்கு ஏதுவாக பணிகளை தரமாக விரைந்து முடித்திட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
- இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வைத்தும், கோசாலை அமைத்தும் பராமரிக்கப்படுகிறது.
- உலக நன்மை வேண்டி ஆறுபடை வீடு முருகப்பெருமானின் மகாயாகம் நடைபெற உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா காரைமேடு சித்தர் புரத்தில் ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்கள் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர்..மேலும் இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வைத்தும் , கோசாலை அமைத்தும் பராமரிக்கப்படுகிறது .
ஒளிலாயத்தை நிர்மானித்த மறைந்த ராஜேந்திரா சுவாமிகளின் 6-வது ஆண்டு குருபூஜை விழா மற்றும் உலக நன்மை வேண்டி ஆறுபடை வீடு முருகப்பெருமானின் மகாயாகம் ஆகியவை நாளை ( ஞாயிற்றுக்கிழமை )காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி,
மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடக்கி வைக்கின்றனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இதில் பக்தர்கள் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று இறையருள பெற சத்குரு ஒளிலாய பீடம் நாடி. செல்வமுத்துக்குமரன், நாடி .செந்தமிழ் செல்வன், நாடி.மாமல்லன், நாடி.பரதன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
- பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது.
- பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகரில் கொள்ளிட முக்கூட்டு, பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி ,கடைவீதி கரிக்குளம் முக்கூட்டு, காமராஜர் வீதி , உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூராக நின்ற வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும் பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. இதே போல் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரை கனரக வாகனங்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைவீதியில் ஒரு வழி பாதையாக இருப்பதை முழுமையாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வலியுறுத்த ப்பட்டுள்ளது. இதுபோல் பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.