என் மலர்

  நீங்கள் தேடியது "pregnant women"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதபுரம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் பணிகள் நிறைவடைந்துள்ளது.
  • பயன்பாட்டுக்கு வராததால் கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

  கீழக்கரை

  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த துணை ஆரம்ப சுகாதார நிலையம் சேதம் அடைந்ததால் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

  புதிய கட்டிடத்திற்கான பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

  இதனால் இந்த பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கீழக்கரை அல்லது ராமநாதபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேர விரையமும், மன உளைச்சலும் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

  இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாததால் பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிகள் சென்று வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் பணத்தை செலவழிக்க வேண்டிய உள்ளதால் வேதனை அடைந்து வருகின்றனர்.

  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • விழாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

  ராஜபாளையம்,

  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

  கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டின் முன்னிலை வகித்தார்.

  விழாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சேலை, ஊட்டச்சத்து பொருட்கள், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை 1000 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசிதாவது:-

  வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.

  சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்பெறுவார்கள். பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணி தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப்படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணிதாய்மார்களும், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சிங்கராஜா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, ராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கர்ப்பிணிகளுக்கு ஜிடிடி எனப்படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செய்யப்படுகிறது.
  • 4 மாதம் முடிந்து 5-வது மாத கருவைச் சுமந்து வரும் கர்ப்பிணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  திருப்பூர் :

  திருப்பூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனைக்கு செல்லும், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க வேண்டிய குளுகோஸ் இல்லை என பல வாரங்களாக திருப்பி அனுப்பப்படுவதால், கர்ப்பிணிகள் அவதி அடைந்துள்ளனர்.

  திருப்பூர் கோவில்வழியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கு ஜிடிடி எனப்படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செய்யப்படுகிறது. இந்த சோதனைக்கு வரக்கூடிய கர்ப்பிணிகளுக்கு குளுகோஸ் சாப்பிடுவதற்கு கொடுக்கப்படும். அதை சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு கணக்கிடப்படும். இந்த சோதனையை செய்வதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை துல்லியமாக கண்டறிவதுடன், அதற்குரிய மருந்துகளும் வழங்கப்படும். இந்த சோதனையை மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் கருக் கலைப்பு ஆவதை தடுக்க முடியும், வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஏற்படக்கூடிய இதர பாதிப்புகளையும் முன்கூட்டியே தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

  இந்நிலையில் கோவில்வழியைச் சேர்ந்த 22 வயது, கர்ப்பிணி குளுகோஸ் ரத்த பரிசோதனை செய்வதற்காக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அங்குள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு குளுகோஸ் இருப்பு இல்லை, புதிதாக வந்தால்தான் கொடுக்க முடியும் என்று கூறி ரத்தபரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டனர். அவருடன் அவரைப் போலவே பலரையும் திருப்பி அனுப்பினர். அதன் பிறகு ஒரு வார காலம் கழித்து மீண்டும் அங்கு போயிருக்கிறார். அப்போதும் குளுகோஸ் வரவில்லை என்று அங்கிருந்த செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். எப்போது குளுகோஸ் வரும், எப்போது ரத்த பரிசோதனை செய்ய வர வேண்டும் என கர்ப்பிணிகள் கேட்டபோது அவர்களிடம் உரிய பதில் இல்லை. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி, கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 22 வயது கர்ப்பிணி உட்பட சிலர் சென்றனர். அப்போதும் குளூகோஸ் இல்லை என தெரிவித்து திருப்பி அனுப்பிவிட்டனர்.

  இது தொடர்பாக கர்ப்பிணிகளின் கணவன்மார்கள் கூறும்போது, " தற்போது 4 மாதம் முடிந்து 5-வது மாத கருவைச் சுமந்து வரும் கர்ப்பிணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சர்க்கரை அளவை கணிக்கும் குளுகோஸ் ரத்தப் பரி சோதனை செய்வார்கள் எனத் தெரியவில்லை. திருப்பூர் மாநகர் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. அரசு மருத்துவமனையின் சின்னச்சின்ன விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினாலே பொதுமக்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும்" என்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
  • ரூ.50 லட்சத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்

  கரூர்:

  கரூர் கஸ்தூரிபாய் தாய்சேய் நல மையத்தில் கர்ப்பிணிகளுக்கு பொக்கிஷம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கர்ப்பிணிகளுக்கு பொக்கிஷம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

  கரூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக எடை குறைவான குழந்தைகள் பிறப்பு, மகப்பேறு மரணம் நிகழ்வதை குறைக்கும் நோக்கோடு வருங்காலங்களில் 4 மாதங்கள் நிறைவுற்ற கர்ப்பிணிகளுக்கு ஆண்டுக்கு 5,000 கர்ப்பிணிகளுக்கு பொக்கிஷம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது.

  முதல் முறை கருவுற்ற தாய்மார்கள், சிக்கலான பிரசவம் உள்ளவர்கள், அரசு மருத்து வமனையில் பிரசவத்திற்கு ஒப்புதல் தெரிவித்தவர்கள், முதல் பிரசவம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று 2வது முறை கருவுற்றவர்கள் என வாரத்திற்கு 100 கர்ப்பிணிகள் வீதம் ஆண்டுக்கு 5,000 கர்ப்பிணிகளுக்கு பொக்கிஷம் சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.

  5,000 கர்ப்பிணிகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.50 லட்சத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதில் பாசிப்பருப்பு, சிவப்பரிசி, கருப்பு உளுந்து, கம்பு லட்டுகள், முருங்கை பொடி, கடலை மிட்டாய், ராகி முறுக்கு, பாதாம் மிக்ஸ், நெய், பேரிச்சை அடங்கி உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினரை கொண்டு ஊட்டச்சத்து பெட்டகம் தயாரிக்கப்படுகிறது என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு ஆஸ்பத்திரியில் கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் 15 கர்ப்பிணிகள் மரணமடைந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. #PregnantWomen
  சென்னை:

  தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள ரத்த வங்கிகளில் மூத்த அரசு டாக்டர்கள் மற்றும் சில அதிகாரிகள், அடிப்படை சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, தகுதியற்றதும், கெட்டு சிதைந்து போன ரத்தத்தை ஏற்றியதால், கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாயார்களும் இறந்துபோன விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  தகுதியற்ற ரத்தத்தை செலுத்தியதன் மூலம் தமிழகத்தில் கடந்த ஜனவரி வரை 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் உயிர் இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் இன்னும் அதிரவைக்கும் தகவல் என்னவென்றால், முறையான சீதோஷ்ணத்தில் பராமரிக்கப்படாததால் பழையதாகிப்போன ரத்தத்துக்கு, அது பாதுகாப்பானது என்று டாக்டர்கள் சான்று வழங்கியதுதான். இது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், “தகுதியற்ற ரத்தத்தை ஏற்றியதும் பெண்களுக்கு உடனடியாக பல்வேறு பிரச்சினைகள் உடலளவில் எழும். சில நிமிடங்களில் வலிப்பு வந்ததுபோல் உடல் வெட்டி வெட்டி இழுக்கும். சிலருக்கு 50 மில்லிக்கும் குறைவான அளவில் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

  இந்த சம்பவங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைக்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் எம்.சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையக அரசு ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர் நாராயணசாமி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர் சுகந்தா ஆகிய 3 ரத்த வங்கி அதிகாரிகள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் என்.ருக்மணி ஆகியோருக்கு பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடமை தவறிய குற்றத்துக்காக தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அப்பீல் விதிகளின் கீழ் அவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

  அவர்கள் தவிர, 12-க்கும் மேற்பட்ட அரசு நர்சுகள் மற்றும் சோதனைக்கூட தொழில்நுட்ப வல்லுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

  ரத்த வங்கி சோதனைகள் குறித்து விவரித்த சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “புதிய ரத்தத்துக்கும், பழையதாகி தகுதியிழப்பு ஏற்பட்டுள்ள ரத்தத்துக்கும் உள்ள வித்தியாசத்தை, மருத்துவ தொழிலில் இல்லாத சாதாரணமான ஒருவரே பார்த்த அளவில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் கெட்டுப்போன ரத்தத்துக்கு பாதுகாப்பானது என்று மருத்துவர்களே நற்சான்று கொடுத்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை” என்றார்.

  ஆஸ்பத்திரிகளில் ரத்த சேமிப்பு வங்கியில் இருக்கும் பிரத்யேகமான குளிர்சாதனப் பெட்டியில் (ரெப்ரிஜிரேட்டர்) 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர் பராமரிக்கப்பட வேண்டும்.

  தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மின்தடை ஏற்பட்டால், உடனே இயங்கக்கூடிய ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு அதே குளிர் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். இதில் சிறிய தவறு ஏற்பட்டாலும் சேமிக்கப்படும் ரத்தத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

  ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்துபோவதோடு, அவை அப்படியே கரைந்து போய்விடக்கூடிய அபாயமும் ஏற்பட்டுவிடும். அப்படி மாற்றங்கள் ஏற்படும்போது அந்த ரத்தம் தனியாகத் தெரிந்துவிடும்.

  சேமிக்கப்படும் ரத்தத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தால் அதை டாக்டர்கள் உடனடியாகக் கண்டுபிடித்து விடுவார்கள். அதிகபட்சமாக ரத்தத்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாத வகையில் 42 நாட்கள் பாதுகாக்க முடியும். #PregnantWomen

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்ப்பிணிகளுக்கு வரும் எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும்.
  கர்ப்பிணிக்கு ஏற்படும் கட்டிகளில் பயப்பட வேண்டிய கட்டிகளும் இருக்கின்றன; பயப்படத் தேவையில்லாத கட்டிகளும் இருக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிக்கு மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1.கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும்  ‘நார்த்திசுக் கட்டி’பெண்களுக்கு ரொம்பவும் சகஜம்.

  நார்த்திசுக் கட்டி என்பது என்ன?

  கருப்பையின் உட்புறத் தசைகளில் உருவாகும் ஒருவகை கட்டி இது. இயற்கையாகவே பல பெண்களிடம் இது காணப்படுவதுண்டு. சாதாரண கட்டிதான் இது; புற்றுநோயைச் சேர்ந்தது இல்லை. எனவே, இதற்குப் பயப்படத் தேவையில்லை.

  இத்தகைய கட்டிகள் இருக்கும்போது ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பது சற்று சவாலுக்குரியதுதான். என்றாலும், இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளால், கருப்பையில் கட்டி உள்ள பெண்களும் கர்ப்பம் தரித்து, கர்ப்பகாலத்தில் எவ்விதத் தொல்லையும் ஏற்படாமல், சுகப்பிரசவம் ஆவது சாத்தியமாகியுள்ளது.

  முன்பெல்லாம் 100 கர்ப்பிணிகளில் ஒருவர் அல்லது இருவருக்கு இந்தக் கட்டி தோன்றியது. இப்போதைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் பேருக்கு இந்தக் கட்டி தோன்றுகிறது எனத் தெரிய வருகிறது.

  அதிலும் ‘அல்ட்ரா சவுண்ட்’ எனும் பரிசோதனைக் கருவியின் கண்டுபிடிப்புக்குப் பின், இந்தக் கட்டி உள்ளதை உடனடியாகப் பார்க்க முடிவதால், இதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெளிவாகக் கவனித்து சிகிச்சை கொடுக்க முடிகிறது.

  மேலும், இந்தப் பிரச்னை கால் நூற்றாண்டுக்கு முன்புவரை 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குத்தான் ஏற்பட்டது. ஆனால் தற்போது இளம் வயதிலேயே இக்கட்டி தோன்றுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக, உடற்பருமன் உள்ள பெண்களுக்கு இது வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.  பரம்பரையாகவும் இது வரக்கூடும்.பெரும்பாலான சமயங்களில் இந்தக் கட்டி இருப்பது வெளியில் தெரியாது. எந்தவித அறிகுறியும் காண்பிக்காமல் ‘அமைதியாக’ இருக்கும். தற்செயலாக வேறு காரணங்களுக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது பலருக்கும் இது இருப்பது தெரியவரும்.

  இது பெரும்பாலும் ஓர் ஆப்பிள் விதை அளவுக்குத்தான் இருக்கும். சிலருக்கு மட்டும் ஒரு திராட்சைப் பழம் அளவுக்கு இது வளரலாம். ஒருவருக்கு மூன்று கட்டிகள்வரை தோன்றலாம். இவை மெதுவாக வளரும் தன்மையுள்ளவை. மாதவிலக்குக்குப் பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே இவை சுருங்கிவிடும்.

  கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை, கருப்பையை அகற்றும் சிகிச்சை போன்றவற்றை வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

  எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும். சமயத்தில் அது பெரிய கட்டியாகவே இருந்தாலும் கருப்பையின் உள்ளே மேல்புறத்தில் இருந்தால், கருவைப் பாதிக்காது; சுகப்பிரசவம்கூட ஆகலாம்.

  சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் நார்த்திசுக் கட்டி வளர ஆரம்பித்து, கருவை அழுத்த ஆரம்பித்தால், கருச்சிதைவு ஆவது உண்டு. சிலருக்கு கட்டிகள் உடைய ஆரம்பித்து ரத்தக்கசிவும் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். அப்போது கர்ப்பிணி நல்ல ஓய்வில் இருந்துகொண்டு, அந்தப் புண் ஆறுவதற்கு மருந்துகளை சாப்பிட்டாலே போதும்.

  கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றினால் மட்டும் பிரசவத்தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்துவிடலாம். குறைப்பிரசவம் ஆகலாம். கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளரும் கட்டிகள் ஒரு சிலருக்குத் திருகிக் கொள்ளும் (Torsion of fibroid).

  அப்போது அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற வேண்டியது வரும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போது சிசுவின் உடலமைப்பில் சில மாறுதல்கள் உண்டாகலாம். இவை எல்லாம் மிகச் சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியவை.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் அருகே கர்ப்பிணி பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  வேப்பந்தட்டை:

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் ராயப்பா நகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது 30). இவருக்கும் இவரது உறவினர் பெண் ஜானகிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜானகி பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

  இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜானகியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில் ஜானகி 2 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #zikaVirus
  வாஷிங்டன் :

  இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கண்ட மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் இந்த வைரஸ் தாக்கினால், கடுமையான குறைபாடுடன் கூடிய குழந்தை பிறக்கும். எனவே கர்ப்பிணிகள் அங்கு செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது. #zikaVirus
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
  கரூர்:

  கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகேயுள்ள ஒரு மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறை சார்பில் 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இதையொட்டி கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக வழங்கும் புடவை, வளையல், மஞ்சள்- குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் தாம்பூலத்தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட் டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கி வாழ்த்து கூறினார். பின்னர் வழக்கமாக வளைகாப்பு விழாக்களில் நடத்தப்படும் சம்பிரதாய சடங்குகள் அந்த கர்ப்பிணிகளுக்கு செய்யப்பட்டு, குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் பேசியதாவது:-

  கர்ப்ப காலத்தில் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுதல், இனிமையான இசைகளை கேட்பது, நல்ல புத்தகங்களை படிப்பது போன்றவைகளை செய்வதன் வாயிலாக நம் மனம் அமைதிபடுவதோடு அதன் பிரதிபலன் குழந்தைகளுக்கும் கிடைக்கும். எந்த ஒரு தாய்க்கும் தன் குழந்தை பேர் சொல்லும் பிள்ளையாக சமூகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே ஆசை. எனவே அதற்கேற்ற வகையில் குழந்தைகளுக்கு அறிவார்ந்த கதைகளை எடுத்துக்கூறி சமூக அக்கறையுடையவராக வளர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் மன அமைதி கொண்டு கோபப்படாமல் இருக்க வேண்டும். கோபப்படுவதன் மூலம் வயிற்றில் வளரும் சிசுவிற்கும் அந்த உணர்வு பாதிக்கும். நீங்கள் உங்களுக்காக சேர்த்து வைக்கும் ஒரே சொத்து நீங்கள் பெற்றெக்கக்கூடிய பிள்ளை. அந்த சொத்தை உருவாக்கக்கூடிய சிற்பி நீங்கள். நீங்கள் கொடுக்கக்கூடிய உணவு, மன அமைதி, கேட்கக்கூடிய சொல், செயல் இவை அத்தனையும் சார்ந்ததுதான் உங்கள் குழந்தையின் வளர்ச்சி. உங்கள் குழந்தையை சிறந்த குழந்தையாக வளர்க்க வேண்டுமென்றால் மனம் மற்றும் உடல் இரண்டையும் வலிமையாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

  இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பரிமளாதேவி, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், வட்டாட்சியர் ஈஸ்வரன், குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி சபிதா மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் சிவசாமி, சாகுல்ஹமீது, மார்க்கண்டேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாநிலத்தில் மலை கிராமத்தில் சிக்கிய கர்ப்பிணிகளை ஹெலிகாப்டரில் சென்று விமானப்படையினர் மீட்டனர்.
  பாலக்காடு:

  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே உள்ளது நெல்லியாம்பதி மலை கிராமம். கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நெல்லியாம்பதி செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது.

  அங்கு வசிக்கும் 3,500 பேர் பாதிக்கப்பட்டனர். 6 நாட்களுக்கும் மேல் அவர்கள் தவித்து வந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் ராணுவத்தினரும், மருத்துவ குழுவினரும் 26 கி.மீ. மலைப் பாதையில் நடந்து சென்று கிராமத்தினருக்கு உதவி வந்தனர்.

  அங்கு வசித்து வருபவர்களில் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நெல்லியாம்பதிக்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்க விமானப்படையினர் முயற்சி செய்தனர். ஆனால் மோசமான கால நிலை காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

  நேற்று மழை குறைந்ததை தொடர்ந்து நெல்லியாம்பதி மலை கிராமத்துக்கு 4 ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டன. அங்கு சென்ற விமானப்படையினர், மருத்துவ குழுவினர் உதவி தேவைப்பட்ட 12 பேரை மீட்டு வந்து பாலக்காடு, நெம்மாரா மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

  இவர்களில் 4 பேர் கர்ப்பிணிகள் ஆவார்கள். நெல்லியாம்பதியில் 3,500-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை விரகனூர் அருகே கர்ப்பமாக இருப்பதாக கூறி பெண்ணுக்கு 8 மாதம் சிகிச்சை அளித்த அரசு ஆஸ்பத்திரி மீது வாலிபர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

  மதுரை:

  மதுரை விரகனூர் அருகே உள்ள கோழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் இன்று மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு கையில் மனுவுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

  அவர் கூறுகையில், எனது மனைவி யாஸ்மின் கர்ப்பமாக இருப்பதாக கோழிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் தெரிவித்தனர். 3 மாதம் சிகிச்சை அளித்த அவர்கள் அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  அதன் பிறகு கடந்த 8 மாதங்களாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது குழந்தை இருப்பதற்கான அறிகுறி இல்லை. வயிற்றில் கட்டி இருப்பதுபோல் தெரிகிறது என அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகின்றனர்.

  ஆனால் கட்டியும் இருப்பதாக தெரியவில்லை. இந்த வி‌ஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.

  இந்த சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியனிடம் கேட்டபோது, யாஸ்மின் சிகிச்சை அறிக்கைகள் எனக்கு தற்போது தெரியவில்லை. மருத்துவச்சான்று குறிப்புகளை பார்த்தபிறகு தவறு நடந்து இருப்பது தெரியவந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  ×