search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கர்ப்பிணி பெண்ணை அலை கழிப்பு  போக்குவரத்து போலீசார்
    X

    அலைகழிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணையும் அவரது கணவரையும் படத்தில் காணலாம்.

    கர்ப்பிணி பெண்ணை அலை கழிப்பு போக்குவரத்து போலீசார்

    • கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி. இவரது மனைவி இலக்கியா (வயது 19).நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவவலி ஏற்பட்டது.
    • ஜிப்மர் அருகே வந்த போது அவர்களை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதாக கூறி போக்குவரத்து போலீசார் ரூ. 1000 அபராதம் விதித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி. இவரது மனைவி இலக்கியா (வயது 19).நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவவலி ஏற்பட்டது.

    இதனால் உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர்கள் பிரசவ நாள் என்பதால் ஏற்கனவே சிகிச்சை பெறும் ஜிப்மருக்கு செல்ல அறிவுருத்தினர்.

    அப்போது வாகனம் கிடைக்காததால் மோட்டார் சைக்கிளில் முரசொலி, இலக்கியா, உறவினர் கலையரசி ஆகியோர் ஜிப்மருக்கு வந்துகொண்டிருந்தனர்.

    ஜிப்மர் அருகே வந்த போது அவர்களை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதாக கூறி போக்குவரத்து போலீசார் ரூ. 1000 அபராதம் விதித்துள்ளனர்.

    அவர்களிடம் பணம் இல்லாததால் கட்ட முடியவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளின் சாவியை அங்கிருந்த போக்குவரத்து சப் -இன்ஸ்பெக்டர் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரும் எவ்வளவோ கெஞ்சியும் சாவியை தர சப்- இன்ஸ்பெக்டர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இதனால், சுமார் 2 மணி நேரம் வரையில் அங்கு கர்ப்பிணி பெண் தவித்தப்படி நின்றிருந்தார். அங்கிருந்தோர் அதை பார்த்து பாதுகாப்பு பணிக்கு வந்த உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் எடுத்து வைத்திருந்த வாகன சாவியை அளித்தார். இதன் பிறகு முரசொலி மனைவியை மருத்துவமனையில் சேர்க்க ஜிப்மருக்கு அழைத்து சென்றார்.

    Next Story
    ×