search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட பகுதியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
    X

    ஊட்டச்சத்து பெட்டகத்தை கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய போது எடுத்தபடம். அருகில் எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் பலர் உள்ளனர்.


    உடன்குடி யூனியனுக்குட்பட்ட பகுதியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
    • நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    உடன்குடி:

    தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் உடன்குடி ஊராட்சி ஓன்றியத்துக் குட்பட்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி ஊராட்சி ஒன்றிய அரங்கில் நடைபெற்றது.

    தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசியதாவது,

    தமிழக அரசு சார்பில் பெண்கள் முன்னேற்றம், பொருளாதார தன்னிறைவு, கிராமப்புற மகளிர் மேம்பாடு ஆகியவற்றை முறையாக செயல்படுத்தப்படுகிறது.

    அனத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்துகிறார். அனைத்து தரப்பு மக்களும், ஜாதி மத மோதல்கள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பத்மா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப், துணைத்தலைவர் மால்ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சி ராணி, வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வட்டார சமுதாய நல செவிலியர் பாக்கியவதி, சுகாதார மேற்பா ர்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர் சேதுபதி, முக்காணி தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், தி.மு.க. மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராம ஜெயம், மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜூதீன், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ், பிரதீப், முகமது ஆபித், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×