என் மலர்
நீங்கள் தேடியது "Minister Anitha Radhakrishnan"
- பருவமழை பெய்து வருவதால் அணைக்கட்டுகளிலிருந்து கடந்த சில வாரங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
- தருவைகுளத்திற்கு வரும் நீர்வழித்தடங்கள் பல இடங்களில் அழிந்த நிலையில் உள்ளது
உடன்குடி:
தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. அணைக்கட்டுகளிலிருந்து கடந்த சில வாரங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் பகுதியிலுள்ள எல்லப்பநாயக்கன்குளம் வேகமாக நிரம்பி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் உபரிநீர் குலசேகரன்பட்டினம் தருவைகுளத்திற்கு வரும். தற்போது தருவைகுளத்திற்கு வரும் நீர்வழித்தடங்கள் பல இடங்களில் அழிந்த நிலையில் உள்ளது. இதனால் இக்குளத்தில் முறையாக தண்ணீர் வருவதற்கு வாய்பு இல்லை, இதனையடுத்து சமூகஆர்வலர்கள், விவசாயிகள் ஆகியோர் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும்கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து, நிலத்தடி நீரில் கடல்நீர் உட்புகுந்து உப்புநீராக மாறியுள்ளது. இதனால் குடிநீர், மற்றும்விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுபாடு வரும் நிலை உருவாகும். ஆண்டுதோறும் குளங்கள் நிரப்பினால், நிலத்தடி நீர் மற்றும் பம்பு செட் விவசாயம் செய்யும் கிணற்று தண்ணீர்தன்மைமாறாமல் இருக்கும் என கூறினர்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து தருவைகுளம் பகுதி வரை சிதிலமடைந்த நீர்வழித்தடங்களை சீரமைத்தும், புதியதாக கால்வாய்கள் அமைத்து உடன்குடி ஊரணிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், மழைக்காலங்களில் வடிகால் பகுதியிலிருந்து தண்ணீரை சேமிக்கும் வகையில் நீர்வழித்தடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை உடன்குடி யூனியன்சேர்மன் பாலசிங் ஆய்வுமேற்கொண்டார். அப்போது சமூகஆர்வலர், ஆசிரியர் சிவலூர் ஜெயராஜ், ஒன்றிய பிரதிநிதி ஆட்டோகணேசன், வக்கீல் செல்வகுமார் உட்பட சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கால்வாய் சீரமைப்பு பணிக்கு சொந்த செலவில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விவசாயிகள் பாராட்டினர்.
- இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கும், பஜாரில் உள்ள வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்தது.
- உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்
உடன்குடி:
உடன்குடி மெயின் பஜார் நான்கு முக்கு சந்திப்பு சாலை மழையால் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கும், பஜாரில் உள்ள வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்தது. மேலும் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குள்ளே தண்ணீர் புகுந்து விடும் சூழ்நிலை பல மாதங்களாக இருந்தது வந்தது.
இது பற்றி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று இரவு அதிரடியாக பணி நடந்தது. மேலும் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உடன்குடிபேரூராட்சி தலைவர் ஹுமைரா செயல் அலுவலர் பாபுல வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது வார்டு கவுன்சிலர்கள் அஸ்ஸாப் அலி, பிரதிப் கண்ணன், முகமது ஆசிப், மற்றும் பலர் உடன் இருந்தனர் தண்ணீர் தேங்காதபடி நிரந்தர நடவடிக்கை எடுத்த அமைச்சர் அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடன்குடி உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பக்தர்கள் எனஅனைவரும் நன்றி தெரிவித்தனர்.
- வாரச்சந்தை அருகே காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 25- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- உடன்குடி - குலசை ரோட்டில் 3 பகுதி மக்களுக்கும் சுடுகாடு வசதி செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சிதலைவர் ஹிமைரா அஸ்ஸாப் கல்லாசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை அருகே வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 25- க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இது போன்று உடன்குடி வில்லி குடியிருப்பு அருகே விநாயகர் காலனியில் 150-க்கு மேற்பட்ட வீடுகளில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர், உடன்குடி சுல்தான் புரத்தில் இந்திய எழுச்சி சபையை சேர்ந்த 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த 3 பகுதி மக்களுக்கும் சுடுகாடு வசதி இல்லை.எனவே தங்களுக்கு சுடுகாடு வசதி செய்து தர வேண்டும் என தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ பேரூராட்சி தலைவரான (நான்) மற்றும் அந்த பகுதி மக்கள் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம் .
இது குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர முயற்சியின் ஏற்பாட்டில் திருச்செந்தூர் தாசில்தார் சாமிநாதன். ஆதியாகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட உடன்குடி - குலசை ரோட்டில் 3 பகுதி மக்களுக்கும் சுடு காடு வசதி செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டு நேற்று காலை 11 மணிக்கு 3 இடங்களையும் பொது மக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இதில் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இது போன்று மழை பெய்யும் போது மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து சரல் மணல் போட்டு மழை நீர் தேங்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடன்குடி பஜார் பகுதி சாலைகளில் மழை நீர் தேங்கும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை ஏ.டி., சுரேஷ்குமார் ஏற்பாட்டில் கருங்கல் போட்டு மேடாக்கி மழை நீர் தேங்காமல் இருக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொசுவை ஒழிக்க 18 வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- குலசேகரன்பட்டினத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாளை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.
- படுக்கப்பத்தில் புதியதாக அமைய உள்ள துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
உடன்குடி:
தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி ஒன்றியம் குலசேகரன்பட்டி னத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து காலை 11 மணிக்கு சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்தில் புதியதாக அமைய உள்ள துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்பு உடன்குடி ஒன்றியம் குதிரை மொழி ஊராட்சி சோலை குடியிருப்பில் காலை 11.30 மணிக்கு புதிய மேல்நிலை நீர் தேக்ககுடிநீர் தொட்டியை திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மற்றும் மாவட்ட வட்டார அரசு அதிகாரிகள் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
உடன்குடி ஒன்றிய பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் உடன்குடி யூனியன் சேர்மனுமான பாலசிங், துணை சேர்மன் மீரா சீராசுதீன், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
- 3 அங்கன்வாடி கட்டிடங்கள் மிகவும் பழுதுஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக மனுவில் கூறியிருந்தனர்.
- இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது, உடன்குடி பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசியின் கோரிக்கை மனுவை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ முன்னிலையில், உடன்குடி கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் 13- வது வார்டு கவுன்சிலர் அஸ்ஸாப் கல்லாசி, மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது வார்டு கவுன்சிலர் முகம்மதுஆபித், 2-வது வார்டு கவுன்சிலர் பாலாஜி, மருதூர்கரை கவுன்சிலர் முத்துராமலிங்கம் மாவட்ட பிரதிநிதி , ஜெயபிரகாஷ், தி.மு.க. 16-வது வார்டு செயலாளர் சுபியான் மற்றும் தமீம் ஆகியோர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட புதுமனை மேலத்தெரு, வைத்திலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 அங்கன்வாடி கட்டிடங்கள் மிகவும் பழுதுஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
விரைவில் 3 கட்டிடங் களையும் புதுப்பித்து கட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் மனுவை அமைச்சரிடம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்தினர்.
மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார்.
- கனிமொழி எம்.பி. தனதுபாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
- அடிக்கல் நாட்டு விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே பெரியதாழை ஆர்.சி தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட ஊர் மக்கள் கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்டனர். அதன்படி அவரது பாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
அதன்படி கட்டிடம் கட்டுப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்து அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
தமிழக மீன்வளம், மீன்வர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அங்குள்ள பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
அப்போது சாத்தான்குளம் வட்ட அங்கன்வாடி மைய பணியாளர்கள், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், தங்களை தரக்குறைவாக பேசுவதுடன், பணி நிமித்தம் தொடர்பாக டார்சர் செய்வதாகவும் அவரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தனர். உடனே அவர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உங்களுக்கு சரியான அதிகாரி நியமிக்கப்படுவார் என உறுதி அளித்தனர்.
இதில் பெரியதாழை பங்குதந்தை சுசீலன், திருச்செந்தூர் தாசில்தார் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, ஒன்றிய ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி, சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி தலைவர் திருக்கல்யாணி, தாமரைமொழி ஊராட்சி தலைவர் சாந்தா, சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் , காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
- கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.
சென்னை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூர், வாடிவாசல், புதுக்கோட்டை, விராலிமலை உள்பட பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதன் மீதான தீர்ப்பு விரைவில் வர உள்ளது.
இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்க கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை மறுநாள் (22-ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
- நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
உடன்குடி:
தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் உடன்குடி ஊராட்சி ஓன்றியத்துக் குட்பட்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி ஊராட்சி ஒன்றிய அரங்கில் நடைபெற்றது.
தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசியதாவது,
தமிழக அரசு சார்பில் பெண்கள் முன்னேற்றம், பொருளாதார தன்னிறைவு, கிராமப்புற மகளிர் மேம்பாடு ஆகியவற்றை முறையாக செயல்படுத்தப்படுகிறது.
அனத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்துகிறார். அனைத்து தரப்பு மக்களும், ஜாதி மத மோதல்கள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பத்மா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப், துணைத்தலைவர் மால்ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சி ராணி, வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார சமுதாய நல செவிலியர் பாக்கியவதி, சுகாதார மேற்பா ர்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர் சேதுபதி, முக்காணி தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், தி.மு.க. மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராம ஜெயம், மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜூதீன், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ், பிரதீப், முகமது ஆபித், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- தண்டுபத்து-சீர்காட்சி சாலையை ரூ 1.67 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்துதல் பணிகளை தமிழக மீன்வளம், மீனவர் நலம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
உடன்குடி:
தூத்க்குடிமாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தின் திருச்செந்தூர் உட்கோட்டம் சார்பில் வேப்பங்காடு- வாகைவிளை சாலையை ரூ 2.20 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்துதல், தண்டுபத்து-சீர்காட்சி சாலையை ரூ 1.67 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்துதல் ஆகிய பணிகளை தமிழக மீன்வளம், மீனவர் நலம்,
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆறுமுகநயினார், உதவிக் கோட்டப் பொறியாளர் விஜயசுரேஷ்குமார், உதவி பொறியாளர் சிபின், முக்காணி கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமரிசங்கர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆதிலிங்கம், கருணாகரன், ஓன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கலட்சுமி, செந்தில், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் அலி பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, ஓன்றிய அவைத்தலைவர் ஷேக் முகம்மது, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராமஜெயம், மகாவிஷ்ணு, ரவிராஜா, ரஞ்சன், ஓன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பாய்ஸ், அஜய், ஓன்றிய பொருளாளர் தண்டு பத்து பாலகணேசன் மற்றும் மகாலிங்கம், சுடலைக்கண், மோகன், சாத்தான்குளம் ஓன்றியக்குழு உறுப்பினர் சுதாகர், ரஜினிகாந்த், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேப்பங்காடு
வேப்பங்காட்டில் நடை பெற்ற நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் பாலசிங், வேப்பங்காடு பஞ்சாயத்து தலைவர் ஆதிலிங்கம், யூனியன் கவுன்சிலர் தங்கலட்சுமி, கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேசிய அளவிலான நாய்கள் நலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாய்கள் கண்காட்சி திருச் செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- விழாவில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருத்தரங்க மலரை வெளியிட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
திருச்செந்தூர்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து நடத்திய தேசிய அளவிலான நாய்கள் நலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாய்கள் கண்காட்சி திருச் செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருத்தரங்க மலரை வெளியிட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கி, நாட்டின நாய்களை பாதுகாப்பதற்கான தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கி செல்ல பிராணிகள் வளர்ப்போர் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு பேசினார்.
மேலும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துணை வேந்தர் செல்வகுமார் சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநர் மீனாட்சி சுந்தரம் வரவேற்று பேசினார்.
விழாவில் நாய்களுக்கான இலவச பரிசோதனை, வெறி நோய்க்கான தடுப்பூசி, நாட்டின நாய்களுக்கு நுண் சில்லுபொருத்துதல் போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறந்த அயலின மற்றும் நாட்டின நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் 342 செல்ல பிராணிகள் கலந்து கொண்டது.
நிகழ்ச்சியில் ஒட்டப்பி டாரம் எம்.எல்.ஏ. சண்மு கையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.
- கடம்பா குளத்திலிருந்து திருச்செந்தூர் வரையிலான 13 குளங்களுக்கு தண்ணீர் சென்று விவசாயம் நடக்கிறது.
- தமிழக அரசின் நீர்ப்பாசன துறை சார்பில் உபரிநீர் செல்லும் வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் அணைக்கட்டு உள்ளது.இதன் தென்கால் மூலம் தென்திருப்பேரை அருகில் உள்ள கடம்பாகுளம் நிரம்புகிறது.
கடலில் சிறியது கடம்பா' என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரியதான இந்த குளத்திலிருந்து திருச்செந்தூர் வரையிலான 13 குளங்களுக்கு தண்ணீர் சென்று விவசாயம் நடக்கிறது.
மழை காலங்களில் அதிக நீர் வரத்து காரணமாக கடம்பாகுளத்தின் உபரி நீர் குரும்பூரை அடுத்த அங்கமங்கலம் அருகில் இருந்து வடிகால் வாய்க்கால் மூலம் ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி வழியாக கடலில் சென்று கலக்கிறது.
சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலான இந்த வாய்க்காலில் ஆத்தூர் குளத்தின் உபரி நீரும், வயல் பகுதிகளின் உபரி நீரும் கலந்து செல்கிறது.ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் வயல் பகுதிகள் மூழ்கி விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு அருகில் உள்ள வாய்க்கால் பாலம் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு விடும்.இதனால் அவ்வழியில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.வடிகால் வாய்க்கால் குறுகலாக இருப்பதே இந்த அவல நிலைக்கு காரணம். ஆறு போல அகலமாக இருக்க வேண்டிய இந்த வாய்க்காலின் ஒரு பகுதி வயல்களாலும், மற்றொரு பகுதி உப்பளங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.இதற்கு நிரந்தர தீர்வுகாணப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் நீர்ப்பாசன துறை சார்பில் கடம்பா குளத்திற்கான நீர்வரத்து கால்வாய், உபரிநீர் செல்லும் வாய்க்கால் ஆகியவற்றை சீரமைத்தல், குளத்தின் கரை மற்றும் மடைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டது.இந்தத் திட்ட பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கடம்பாகுளத்தின் வடிகால் வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.ஆங்கிலேயர் காலத்து வரைபடத்தின் அடிப்படையில் வடிகாலுக்குரிய இடம் இரு பக்கமும் முழுமையாக அகற்றப்படுகிறது.இதனால் வயல்களும், உப்பளங்களும் காலியாகி விட்டன. இதனிடையே இப்பகுதி உப்பு உற்பத்தியாளர்களின் நூற்றுக்கணக்கான உப்பளங்கள் அடியோடு பாதிக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.
எனவே உப்பளங்களை அகற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக சங்கத்தின் நிர்வாகிகளான ராமச்சந்திரன், பூபால் மகேஷ், கணேசமூர்த்தி, வெங்கடேசன், சரவணன் உள்ளிட்ட குழுவினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் நேரில் சென்று கோரிக்கை மனு வழங்கினர்.
இது குறித்து அதிகாரிகளிடம் பேசி பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அப்போது அவருடன் ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி போன்று இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் வருகிற 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற 1-ந் தேதி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியக் கழக அமைப்புகள் மூலம் 199 ஊராட்சிகளில் உள்ள கிளைகள், 8 மாநகராட்சி வட்டங்கள், 2 நகராட்சியில் உள்ள 45 வார்டுகள், 12 பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டுகள் முழுவதும் தி.மு.க. கொடியேற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், மாணவர் விடுதிகள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநல காப்பகம் ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு காலை, மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட உள்ளன. நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் ஒன்றியப் பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளன.
மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்களான கிரைண்டர், மிக்சி, சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, வேன் ஓட்டுனர்களுக்கு சீருடை, 5 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. முதலூர் அரசு ஆஸ்பத்திரியில் மார்ச் 1-ந் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. மாநகராட்சி 1-வது வட்டத்தில் இலவச கண் மருத்துவ முகாம், 14-வது வட்டத்தில் மரம் நடும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி போன்று இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






