என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dog Exhibition"

    • கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்தது.
    • கண்காட்சியில் 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன.

    கொடைக்கானல்:

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடைவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தினமும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நேற்று நடந்தது. இந்த கண்காட்சியில் சைபீரியன் ஹாஸ்டர், கோல்டன் ரெட்ரீவர், பிக்புல், டாபர்மேன், பிகில், கிரேட்டேன், அமெரிக்கன்புல்கீ, மினியேச்சர், பாக்சர், சிசு, இங்கிலீஷ் பாயிண்டர் உள்ளிட்ட 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன. மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    முதல் பிரிவில் ஜெர்மன் ஷெப்பர்ட், 2-வது பிரிவில் கிரேட்டேன் வகைகள் 3-வது பிரிவில் குட்டிநாய்கள், 4-வது பிரிவில் சிறிய வகை நாய்களுக்கான போட்டிகள் நடந்தது. வளையம் தாண்டுதல், உரிமையாளர்கள் கைகளை கோர்த்து தாண்டுதல், கீழ்ப்படிதல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டின.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கையில் குடைகளுடன் கண்டு ரசித்தனர்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவரின் டாபர்மேன் நாய் தட்டி சென்றது.

    இந்த நாய் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தது குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகளைத் தொடர்ந்து வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • தேசிய அளவிலான நாய்கள் நலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாய்கள் கண்காட்சி திருச் செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • விழாவில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருத்தரங்க மலரை வெளியிட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து நடத்திய தேசிய அளவிலான நாய்கள் நலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாய்கள் கண்காட்சி திருச் செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருத்தரங்க மலரை வெளியிட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கி, நாட்டின நாய்களை பாதுகாப்பதற்கான தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கி செல்ல பிராணிகள் வளர்ப்போர் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு பேசினார்.

    மேலும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துணை வேந்தர் செல்வகுமார் சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநர் மீனாட்சி சுந்தரம் வரவேற்று பேசினார்.

    விழாவில் நாய்களுக்கான இலவச பரிசோதனை, வெறி நோய்க்கான தடுப்பூசி, நாட்டின நாய்களுக்கு நுண் சில்லுபொருத்துதல் போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறந்த அயலின மற்றும் நாட்டின நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் 342 செல்ல பிராணிகள் கலந்து கொண்டது.

    நிகழ்ச்சியில் ஒட்டப்பி டாரம் எம்.எல்.ஏ. சண்மு கையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.

    பரிசு பெற்ற நாய் உரிமையாளர்களுக்கு கால்நடைத்துறை முன்னாள் உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீம் பரிசுகள் வழங்கினார்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கோடை விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடந்தது. 21வது நாய்கள் கண்காட்சியில் 13 வகையான நாய்கள் இடம்பெற்றன. 54 நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டன. 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வகைகளுக்கு ஒரு பிரிவும், இதர வகைகளைச் சேர்ந்த நாய்களுக்கு ஒரு பிரிவும், குட்டிகளுக்கு ஒரு பிரிவும் என்று 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நாய்கள் கண்காட்சியில் செயின்ட் பெர்னார்டு, பிட்புல், கோல்டன் ரெட்ரீவர், கிரேட் டான், ராட்வீலர், புள்டெரியர், பொமரேனியன், ஜெர்மன் ஷெப்பர்ட், பக், சீட் ஜூ, ஸ்பிட்ஸ், டாபர்மேன், டெரியர், உள்ளிட்ட 13 வகைகளைச் சேர்ந்த நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன.

    போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் செயிண்ட் பெர்னார்டு இன நாய் உரிமையாளர் ஹரிசுக்கு வழங்கப்பட்டது. ஜெர்மன் ஷெப்பர்ட் பிரிவில் கொடைக்கானலைச் சேர்ந்த ஜீன் பால் வளர்த்த நாய்க்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதர பிரிவில் கோல்டன் ரெட்ரீவர் நாய் உரிமையாளர் அனுராதாவிற்கும், பிட்புல் நாய் உரிமையாளர் சபிக்கும், கிரேட் டேன் நாய் உரிமையாளர் அருணுக்கும் முதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

    பரிசு பெற்ற நாய் உரிமையாளர்களுக்கு கால்நடைத்துறை முன்னாள் உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீம் பரிசுகள் வழங்கினார். இந்த கண்காட்சி மற்றும் விழாவிற்கு கொடைக்கானல் கால்நடைத்துறை உதவி இயக்குனர் பிரபு, பழனி கால்நடை துறை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறந்த நாய்களை கால்நடைத்துறை டாக்டர்கள் சங்கர விநாயகம், அருண், தினேஷ் பாபு, பாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்தனர். நாய்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தார்கள்.


    ×