search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prize"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 16 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கல்லால் தாக்கப்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரத்தின் போது கல் வீசி தாக்கபட்டார்.

    இதில் அவருக்கு கண் புருவத்திற்கு மேல் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 16 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து விஜயவாடா நகர போலீஸ் கமிஷனர் காந்தி ராணா கூறியதாவது:-

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கல்லால் தாக்கப்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருட்டாக இருந்தது. 1480 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி இருந்தோம். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கண்காணிப்பு கேமரா காட்சிகள், வீடியோக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் படி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லை வலுக்கட்டமாக வீசியதை கண்டறிந்துள்ளோம்.

    முதல் மந்திரி மீது கல் வீசியவர்களை போலீசார் கைது செய்ய உதவும் வகையில் தகவல் அளிப்ப வர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும்

    அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
    • முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமான மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி திருச்செந்தூரில் சட்டமன்ற அலுவலகம் முன்பு நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஆண்களுக்கான போட்டி திருச்செந்தூர் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் வழியாக சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிலும், பெண்களுக்கு திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரையிலான சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி. கொடி அசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன்-சூர்யா தம்பதியினர் வெற்றி பெற்றனர்.

    இதனையடுத்து வெற்றி பெற்ற தம்பதியினருக்கு முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    2-வது பரிசாக 75 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 50 ஆயிரம் உட்பட 10 பரிசுகள் தலா இருபாலர்களுக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், நகர செயலாளர் சுடலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    டால்மியாபுரம்:

    கல்லக்குடி பேரூராட்சியில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியினை ஆர்.டி.ஓ. சிவசுப்பிரமணியன், லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம், தாசில்தார் முருகன், கல்லக்குடி பேரூரட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, ஊட்டத்தூர் ஊராட்சி மன்ற இந்திரா அறிவழகன், அன்பழகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மாடு பிடி களமானது எந்த வித வளைவுகளும் இன்றி நேர் பாதையாக அமைந்ததால், காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியில் வந்து, வீரர்களை சுழற்றி அடித்து நேராக புயலென விரைந்து சென்று கெத்து காட்டின.

    காளைகள் கெத்து காட்டினால் வீரர்கள் சும்மா இருப்பார்களா? சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடிக்க 450 வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் களமிறக்கப்பட்டனர். இவர்கள் அணி அணியாக மாடு பிடி களத்திற்குள் வந்து புயலென வாடி வாசலை விட்டு வெளியில் வந்த காளைகளை, லாவகமா மதில்களை தழுவி, தங்களின் புஜ பலத்தால் காளைகளை வீரர்கள் அடக்கினர்.

    திமிழ் உள்ள திமிரல், பாய்ந்து வந்து, காளைகள் வீரர்களை சிதறடித்தபோது, உன் திமிழ் பிடித்து, தமிரை அடக்குகிறேன் பார் என்று காளையர்கள் வீரம் காட்டிய போதும், பார்வையாளர்கள் மெய் சிலிர்த்து உற்சாகமாக கரகோஷம் எழுப்பி, கத்திய சத்தம் விண்ணை பிளந்தது. சிறப்பாய் சீற்றம் காட்டிய காளையின் உரிமையாளர்களுக்கும், பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடை பெற்றதோடு, மாடுகள் காயமடைந்தால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் காயமடையும் இளைஞர்களுக்கு சிசிக்கை அளிப்பதற்காக அவசர கால ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர். கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் அடுத்த தங்கனூர் கிராமத்தில் தைப்பூ சத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி கோர்ட்டு அனுமதியுடன் நேற்று தொடங்கியது. இந்த சேவல் சண்டை போட்டியில் ஒரே நேரத்தில் 136 சேவல்கள் மோதின. இதற்காக தனித்தனியாக மோதும் களங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இதனை காண திருவள்ளூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து இருந்தனர். இதனால் சேவல் சண்டை போட்டி களைகட்டியது.

    நேற்று வரை மொத்தம் 724 சேவல்கள் களத்தில் நேருக்கு நேர் மோதி இருந்தன. தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சண்டை சேவல்கள் இதில் பங்கேற்றன.

    இன்று 2-வது நாளாக தங்கனூரில் சேவல் சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே பார்வையாளர்களும் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளித்தது. இன்று 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் மோதுகின்றன. இரண்டு நாட்களில் மொத்தம் 1200-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றதாக போட்டியை நடத்தும நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று மாலை 5 மணியுடன் சேவல் சண்டை போட்டிகள் முடிந்தன. போட்டியில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு தங்க காசு மற்றும் சான்றிதழ்,கோப்பைகள், கியாஸ் ஸ்டவ் அடுப்புகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

    திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் புல்லரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சுழல் வெள்ளி கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் நடத்தப்பட்டது.
    • காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

    காரைக்குடி

    காரைக்குடி சவுத் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தெற்கு தெரு இளைஞர்களால் முதலாம் ஆண்டு சுழல் வெள்ளி கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் நடத்தப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டி யில் கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு அணியும், என்.எஸ்.கே. கண்டனூர் பாலையூர் அணியும் மோதின.

    ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆகி டைபி ரேக்கர் வழங்கப்பட்டு அதி லும் சமனாகி வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசான ரூ.50,001 மற்றும் வெள்ளி கோப்பையை என்.எஸ்.கே. கண்டனூர் பாலையூர் அணியினர் பெற்றனர்.

    இரண்டாம் பரிசு ரூ.40001 ஐ கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு காரைக்குடி அணியினர் பெற்றனர். 3-வது மற்றும் 4-வது பரிசுகளை முறையே யுனைடட் கால்பந்து கிளப் காட்டு தலைவாசல் மற்றும் செய்யாறு அணிகளும் பெற்றன.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இதில் அனைத்து கட்சி பிர முகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.பிரதர்ஸ் அணி தலைமை நிர்வாகி குமரன், உறுப்பி னர்கள் சிறப்பாக செய்தி ருந்தனர்.

    • குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பாடகர்களும், இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் தின பாடல்கள், விழிப்புணர்வு மற்றும் தத்துவப் பாடல்கள் பாடி பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

    நிகழ்ச்சியில் திருக்குறள் ஓப்புவித்தல் மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை பள்ளித் தாளாளர் - முதல்வர் மணி அந்தோணி தலைமையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • நேருவின் வரலாறு குறித்து பேரூராட்சியின் முன்னாள் உறுப்பினர் சலீம் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி பெரியதெருவில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழாவையொட்டி உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ்பேகம் தலைமை தாங்கி, நேரு வேடம் அணிந்து வந்த சிறுமிகள், கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நேருவின் வரலாறு, குழந்தைகள் மீதான அவரது பாசம் குறித்து பேரூராட்சியின் முன்னாள் உறுப்பினர் சலீம் பேசினார். இதில் குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் சுகிர்தா, அங்கன்வாடிப் பணியாளர்கள் சுபா, சாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பளுதூக்கும் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள், பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் பிரிவில் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி அணி முதலிடத்தையும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி அணி 2-வது இடத்தையும், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணி 3-வது இடத்தையும், கோவில்பட்டி கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்தது.

    பெண்கள் பிரிவில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி அணி முதலிடத்தையும், தெற்கு கள்ளிக்குளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி அணி 2-வது இடத்தையும், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி அணி 3-வது இடத்தையும், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ரூ.25,000 ரொக்க பரிசை வழங்கினர்.
    • பரிசு பெற்ற மாணவர்களுக்கு எல்.கே மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையில் நடந்த புத்தாக்க மேம்பாட்டு திட்ட அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டியில் காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளியின் மாணவர் குழுவினர் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். வாகன கதவு திறப்பு கண்காணிப்பு கருவி என்னும் தலைப்பில் கண்டுபிடிப்பில் வெற்றியைப் பெற்ற இந்த குழுவினர் தொடர்ந்து மாநில அளவிலும் இடம்பெற்றனர்.

    இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ரூ.25,000 ரொக்க பரிசை வழங்கினர். பரிசு பெற்ற மாணவர்களான முகம்மது அப்துல் காதர் ஆரிஷ் ,மஹ்மூது மிக்தாத், சேக் முகம்மது அலி,நாக அனு கார்த்திக்,நாக அனு சேஷன் ஆகியோருக்கும் அவர்களுக்கு பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியர் ராஜாவுக்கும் எல்.கே மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செய்யது முகைதீன் தலைமை தாங்கினார்.ஆட்சி மன்ற குழு உறுப்பினர் லெப்பை தம்பி முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் சுபைர் அலி வரவேற்று பேசினார்.உதவி தலைமை ஆசிரியர்கள் முகம்மது சித்திக்,சேக் பீர் முகம்மது காமில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தா டைகள் மற்றும் அன்னதா னம் வழங்கும் விழா ராமையா சுவாமி தலைமை தாங்கினார். கண்ணபிரான் வரவேற்று பேசினார்.

    அறக்கட்டளையின் சேவைகள் பற்றி உறுப்பி னர்கள் எடுத்துரைத்தனர்.அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி குருநாதர் ஆர்.ஈஸ்.மோகன் விளக்க உரையாற்றினார்.ராமநாதபுரம் ராமலிங்கா அன்பு இல்ல நிர்வாகி ஏற்புரையாற்றினார்.

    விழாவில் 10,12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராஜசேகரன் நினைவு கல்விப் பரிசும், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கினார்.

    பின்னர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தா டைகள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு அன்ன தானம் வழங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி கலந்து கொண்டு சிறப்பித் தார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொ ண்டனர். இதற்கான ஏற்பாடு களை வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

    • மாப்பிள்ளையூரணியில் மாட்டு வண்டி எல்கை பந்தய விழா நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி 3-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தய விழா நடைபெற்றது.

    மாட்டு வண்டி போட்டி தொடக்கம்

    சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவரும், கூட்டுறவுகடன் சங்க தலைவருமான சரவணக்குமார், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டேவிஸ்புரம் முதல் தருவைகுளம் வரை 5 மைல் பூஞ்சிட்டு 51 ஜோடி, 4 மைல் தேன்சிட்டு 27 ஜோடி மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை சண்முகையா எம்.எல்.ஏ, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவுகடன் சங்க தலைவருமான சரவணக்குமார், தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி உறுப்பினருமான தங்கமாரிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர்

    ராமசந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், ஊராட்சி உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மகாராஜா, கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, குமார், தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி மற்றும் நேதாஜி நற்பணி மன்றம், ரேக்ளா கமிட்டியாளர்கள் சந்தனகுமார், பொன்ராஜ், ராஜா, சுடலை, முத்துகிருஷ்ணன், பாலு, அர்ஜுனன், மூக்காண்டி, மணிகண்டன், பாண்டி, பாஸ்கர், முத்து, தி.மு.க. இளைஞர் அணி கவுதம், கப்பிக்குளம் பாபு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பேச்சு போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் வள்ளல்பெருமான் வருவிக்கஉற்ற 200-வது ஆண்டு நிறைவு விழா, மாநில அளவில் நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா, நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    Vallalar 200th Anniversary Celebrationநிகழ்விற்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவள்ளு வன் தலைமை தாங்கினார். பதிவாளர்(பொ) முனைவர் இளையாப்பிள்ளை முன்னிலை வகித்தார்.

    புலமுதன்மையர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வரவேற்புரை ஆற்றினார். தொ டர்ந்து அருட்பெருஞ்ஜோதி ஞானதீபத்தை துணைவேந்தர் திருவள்ளுவன் ஏற்றித் தலைமையுரை ஆற்றினார்.

    தொடர்ந்து தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகளின் இயக்குநர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி எழுதிய வைகுண்டர் வள்ளலார் ஓர் ஒப்பீட்டு நூல் வெளியிடப்பட்டது.

    நூலின் முதல் படியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன் வெளியிட துணைவேந்தர் திருவள்ளுவன் பெற்றுக் கொண்டார்.

    சிறப்பு விருந்தினராக நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் புதல்வர் ராஜாராமலிங்கம், வடலூர் சங்க கெளரவத் தலைவர் ராமதாஸ், வடலூர் தலைமைச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் வெற்றிவேல், மருத்துவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாகக் காலையில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிப் பேச்சுப் போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேல் கலந்து கொண்டனர்.

    அதில் முதல் பரிசு 30,000, இரண்டாம் பரிசு 20,000, மூன்றாம் பரிசு 10,000 மற்றும் ஆறுதல் பத்துப் பரிசுகள் தலா 1000 என்கிற வகையில் வழங்கப்பட்டன.

    நிகழ்வின் ஏற்பாடுகளை வடலூர் தலைமைச் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் அருள் நாகலிங்கம், பேராசிரியர்கள் குறிஞ்சி வேந்தன், மஞ்சுளா, சங்கரராமன், கவிஞர் வெற்றிச்செல்வன், கவிஞர் யோகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×