என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பரிசு"
- பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
- பாமினியில் பழங்குடியினர் கவுரவிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கவுரவிப்பு தினம் நவம்பர் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக நிறுவன தலைவர் கவுசல்யா தலைமையில் மன்னார்குடி அடுத்த பாமினியில் பழங்குடியினர் கவுரவிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பால கணேஷ், ஸ்கார்டு செயலாளர் பாபு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஸ்கார்டு தொண்டு நிறுவனம் சார்பில் அனைத்து குடும்பத்தினருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
விழாவில் கூட்டமைப்பு தலைவர் சின்னதுரை, மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் விஜயராகவன், கனகதுர்க்கா, திலகவதி, ஸ்கார்டு கள பணியாளர் சிந்துகவி, பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
- போட்டியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கடையம்:
மாரத்தான் போட்டி உலகம் முழுவதும் நடத்தப் படும் ஒரு விளையாட்டு. இந்த போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
பெரும்பாலும் சர்வ தேச போட்டிகளில் மினி மாரத்தான் போட்டிகளுக் கான தூரம் 10 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வெற்றியை சொல்ல ஓடிய இந்த போட்டியில் பங்கேற்றால் உடல் நலம் சிறப்படையும் என்பதோடு வாழ்வில் வெற்றியை காணலாம் என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு.
மேலும் தற்போது உலகம் முழுவதும் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று தென்காசி அருகே கடையம் தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உன்னதமான உணவு முறையுடன் ஆரோக்கியத்தை பேணு வதை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
மாரத்தான்
இதனை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் இணைந்து நடத்தியது. காலை 6 மணி அளவில் தென்காசி அருகே மத்தளம் பாறையில் உள்ள ஷோகோ நிறுவனம் முன்பு போட்டி தொடங்கியது. இதில் மாணவர்கள் இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு ஓடினர். இதில் இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
10 கிலோ மீட்டர்
போட்டியை தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.
ஓட்டப்பந்தய வீரர்கள் திரவியநகர், மாதாபுரம் செக்போஸ்ட், கானாவூர், வழியாக தோரணமலையை அடைந்தனர். அவர்கள் மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி வெற்றி எல்லையை அடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் டி.சர்ட், சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு
விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச் சந்திரன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு பரிசு களை வழங்கினார். முன்னதாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தோரணமலையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
போட்டியில் முதலிடம் வந்த மாரிசரத் ரூ.10 ஆயிரம் பரிசை பெற்றார். 2-வதாக வந்த அஜித்குமார் ரூ.5 ஆயிரமும், 3-வது வந்த பத்ரி நாராயணன் ரூ.3 ஆயிரமும் பரிசாக பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம் பாலமுருகன், தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.
- கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
- முடிவில் இணை செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
மன்னார்குடி:
மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராசுப்பிள்ளை, நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை இலக்கிய படைப்பிதழான 'விளையும் பயிர்' கையெழுத்து ஏட்டினை திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இந்திரா பாண்டியன் வெளியிட அதனை மேனாள் தலைமை யாசிரியர் தவமணி சந்திரன் பெற்றுக்கொண்டார்.
சாரணர் இயக்கத்தின் மாவட்ட ஆணையர் மீனாட்சி உள்ளிட்ட அனைவரும் குத்து விளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினர். பின், பல்வேறு கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
முன்னதாக பாரதியார் தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் முதுகலை தமிழாசிரியர் ராச கணேசன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இணை செயலாளர் சுகந்தி இலக்கிய மன்றத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார்.
முடிவில் இணை செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- போட்டியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
தென்காசி:
தேசிய கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பால் இந்தியா ஸ்வச் பாரத் என்னும் தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி, வண்ணம் தீட்டுதல் போட்டி, படம் வரைதல் போட்டி மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற பல்வேறு வகையான போட்டிகளை இந்தியா முழுவதும் நடத்தியது.
பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதில் 5-ம் வகுப்பு மாணவன் அபினவ் ஜெய் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 7-ம் வகுப்பு மாணவன் முஹம்மது சுலை மான் கையெழுத்து போட்டி யிலும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் 12 பேர் கையெழுத்து போட்டியிலும், 3 பேர் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 3 பேர் கட்டுரை போட்டியிலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.
- சுழல் வெள்ளி கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் நடத்தப்பட்டது.
- காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
காரைக்குடி
காரைக்குடி சவுத் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தெற்கு தெரு இளைஞர்களால் முதலாம் ஆண்டு சுழல் வெள்ளி கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் நடத்தப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டி யில் கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு அணியும், என்.எஸ்.கே. கண்டனூர் பாலையூர் அணியும் மோதின.
ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆகி டைபி ரேக்கர் வழங்கப்பட்டு அதி லும் சமனாகி வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசான ரூ.50,001 மற்றும் வெள்ளி கோப்பையை என்.எஸ்.கே. கண்டனூர் பாலையூர் அணியினர் பெற்றனர்.
இரண்டாம் பரிசு ரூ.40001 ஐ கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு காரைக்குடி அணியினர் பெற்றனர். 3-வது மற்றும் 4-வது பரிசுகளை முறையே யுனைடட் கால்பந்து கிளப் காட்டு தலைவாசல் மற்றும் செய்யாறு அணிகளும் பெற்றன.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இதில் அனைத்து கட்சி பிர முகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.பிரதர்ஸ் அணி தலைமை நிர்வாகி குமரன், உறுப்பி னர்கள் சிறப்பாக செய்தி ருந்தனர்.
- நேஷனல் ஷாப்பிங் மாலில் பரிசுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை கொடுக்கப்படுகிறது.
- மேலும் விபரங்களுக்கு 97881 01122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, நெற்குப்பை அருகே உள்ள பொன்னமராவதி பஸ் நிலையத்தின் அருகே உள்ள அஞ்சப்பர் டவர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நேஷனல் ஷாப்பிங் மால் பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதி யில் பிரபலமான கடையாக உள்ளது.
இங்கு மளிகை சாமான் கள் முதல் வீட்டில் அன்றாட பயன்பாட்டுக்கு தேவை யான அனைத்து பொருட்க ளும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி வரை ஏராளமான காம்போ ஆபர்கள், பரிசு களுடன் சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட் டுள்ளது. இத்துடன் பிளாஸ் டிக் பக்கெட்டு இலவசமாக வழங்கபடுகிறது.
மேலும் ரூ.1,449-க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்குவோருக்கு பிளாஸ் டிக் டப், ரூ.2,999-க்கு மேல் வாங்குவோருக்கு பக்கெட், ரூ.4,999-க்கு மேல் வாங்கு வோருக்கு சேர், குலோப் ஜாமூனுக்கு பாக்கெட்டுக்கு பாக்கெட் இலவசத்துடன் வாளியும் வழங்கப்படுகிறது.
இந்த ஆபர்களை பயன்ப டுத்தி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி, பரிசு களையும் பெற்றுச் சென்று தீபாவளி பண்டி கையை சிறப்பாக கொண்டாடிட பொன்னமராவதி நேஷனல் ஷாப்பிங் மால் நிறுவனத் தார் அழைப்பு விடுத்துள்ள னர். மேலும் விபரங்களுக்கு 97881 01122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.
- 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாய் கிருஷ்ணன் 3-ம் இடம் பிடித்தார்.
- மாணவி செரினா சோபி பட்டர்பிளை 50 மீட்டர், 100மீட்டர், 200 மீட்டரில் முதலிடம் பிடித்தார்.
தென்காசி:
தென்காசி அச்சம்பட்டியில் எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஜீடோ போட்டி நடைபெற்றது.
இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாய் கிருஷ்ணன் 3-ம் இடமும், 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஜேக்கப் ஜாய் குமார் 2-ம் இடமும், ஜெபின் 3-ம் இடமும் பெற்றனர். அதேபோன்று தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான நீச்சல் போட்டி குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவி செரினா சோபி பட்டர்பிளை 50 மீட்டர், 100மீட்டர், 200 மீட்டரில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ரெ.ஜே.வே.பெல், செயலாளர் கஸ்தூரி பெல்,முதல்வர் டாக்டர் அலெக்சாண்டர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
- ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி. பர்ணபாஸ், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, பள்ளித் தாளாளர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சிகள், கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பாட்டம், மனித பிரமீடு ஆகியவற்றை மாணவர்கள் நிகழ்த்தினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ், ராஜபாளையம் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.
ராமநாதபுரம்
ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தா டைகள் மற்றும் அன்னதா னம் வழங்கும் விழா ராமையா சுவாமி தலைமை தாங்கினார். கண்ணபிரான் வரவேற்று பேசினார்.
அறக்கட்டளையின் சேவைகள் பற்றி உறுப்பி னர்கள் எடுத்துரைத்தனர்.அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி குருநாதர் ஆர்.ஈஸ்.மோகன் விளக்க உரையாற்றினார்.ராமநாதபுரம் ராமலிங்கா அன்பு இல்ல நிர்வாகி ஏற்புரையாற்றினார்.
விழாவில் 10,12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராஜசேகரன் நினைவு கல்விப் பரிசும், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கினார்.
பின்னர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தா டைகள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு அன்ன தானம் வழங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி கலந்து கொண்டு சிறப்பித் தார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொ ண்டனர். இதற்கான ஏற்பாடு களை வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.
- போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
- பொதிகை சாம்பியன் கோப்பை வென்ற வீரருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பாக பொதிகை சதுரங்க கோப்பை மாநில சதுரங்க போட்டி தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நெல்லை வீரர் முதலிடம்
போட்டியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் பொது பிரிவு மற்றும் 9, 11, 13, 17 ஆகிய வயது பிரிவுகளில் தனித்தனியாக 6 சுற்றுகள் நடைபெற்றது.
போட்டியை எம்.கே.வி.கே. பள்ளி தாளாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் ஜீவக்குமார் தலைமையில் தேனி சையது மைதீன், மேனகா, சதீஷ்குமார், ராஜாகாந்தன், வைதேகி, தமிழ்ச்செல்வி ஆகியோர் நடுவர் குழுவாக செயல்பட்டனர். நெல்லை மாவட்ட வீரர் ஸ்கேனி முதலிடம் பெற்று பொதிகை கோப்பை சாம்பியன் பரிசை வென்றார். தென்காசி மாவட்ட வீரர்கள் சபின், விஷால், ரித்திக் ரக்சன், ஷாம் ஜெப்ரி, மதுரை மாவட்ட வீரர் பாலன் வைரவன் ஆகியோர் முதல் 5 இடங்களை பெற்றனர்.
பொதிகை சாம்பியன் கோப்பை வென்ற வீரருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசுடன் சாம்பியன் கோப்பையும் வழங்கப்பட்டது. மாண வர்கள் பிரிவில் பிரித்வி, ஹரிஷ் லிங்கம், அஸ்வத், முகமது அசில், மாணவிகள் பிரிவில் பிரதிக்ஷா, ராஜ லட்சுமி, யாமினா, தார ணிகாஸ்ரீ ஆகியோர் அவ ர்கள் வயது பிரிவில் முத லிடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு தட்சண மாற நாடார் சங்க தலை வரும், மாவட்ட சதுரங்க கழக தலைவருமான ஆர்.கே. காளி தாசன் பரிசுகள் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் சங்க செயலாளர் அழகேசன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பால சுப்பிரமணியன், குல சேகரபட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மணி வண்ணன், தென்காசி மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பாலகிருஷ்ணன், நெல்லை நகர சதுரங்க கழக செய லாளர் கருணாகரன், சதுரங்க கழக ஆர்வலர்கள் கமலக்கண்ணன், அருணா ச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சதுரங்க கழக இயக்குனர் எஸ்.கண்ணன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.