என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் வளர்ச்சித்துறை"

    • பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும்
    • பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி குமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கிடையே யான பேச்சுப் போட்டிகள் நடை பெற்றன. பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    பள்ளிகள் பிரிவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரத்தை மாணவர்ஜெப்றின், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி அகஸ்தியா, 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்தை மாணவன் ஆஷிக்எ.எல்ஜித் ஆகியோர் பெற்றனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான சிறப்பு பரிசுத் தொகை தலா ரூ. 2 ஆயிரத்தை குமாரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஆக்னஸ் லிவிஷா, மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ருதி ஆகியோர் வென்றனர்.

    கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு 5 ஆயிரத்தை மாணவி ஷானு, 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி ஆஷா, 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரத்தை மாணவி அஞ்சனா ஆகியோர் பெற்றனர்.

    பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 பிரிவுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
    • போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நூல் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்நூலை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 பிரிவுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நூல் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்நூலை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்பட உள்ளது.

    மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை), சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்), அகராதி கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில் நுட்பவியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், சட்டவியல், அரசியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல், மருந்தியல், விளையாட்டு, மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும்.

    இத்துறையின் வலைதளம் மூலமாக (www.tamilvalarchithurai.tn.gov.in)போட்டிக்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100-ம் "தமிழ் வளர்ச்சி இயக்குனர், சென்னை" என்ற பெயரில் வங்கி கேட்புக் காசோலையாக அளிக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30-ந் தேதிக்குள் "தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், எழும்பூர்" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் விவரங்களுக்கு 044-28190412, 28190413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விருதாளர்களுக்கு விருது தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
    • 2024-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது ரவிக்குமார் எம்.பி.க்கு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

    சென்னை:

    தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் படிக்கராமுவுக்கும், 2024-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கே.வி. தங்கபாலுவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மேலும் மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வ கணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதிய வெற்பனுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார். இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருது தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

    மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது ரவிக்குமார் எம்.பி.க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

    முத்து வாவாசிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருதுடன், விருதுத்தொகையாக பத்து லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பித்தார்.

    இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மெய்யநாதன், டாக்டர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், உயர் அதிகாரிகள் விஜயராஜ்குமார், ராஜாராமன், வைத்திநாதன், அருள் கலந்து கொண்டனர்.

    ×