என் மலர்

  நீங்கள் தேடியது "lottery prize"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துபாயில் முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது குடும்பத்தை தன்னுடன் வாழ அழைத்து வரும் தனது கனவை இப்போது நிறைவேற்ற முடியும்.

  ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த முகமது அடில் கான், தான் வாங்கிய முதல் லாட்டரி சீட்டின் மூலம் ஃபாஸ்ட்5 பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார். இதன்மூலம் அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் பெறுகிறார்.

  உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான முகமது அடில் கான், துபாயில் முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அதை வாங்கும்போது அவர் தன்னை பெரும் பரிசின் வெற்றியாளராக மாற்றும் என்று கற்பனைகூட செய்திருக்க மாட்டார்.

  2018 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிலிருந்து துபாய் சென்ற முகமது அடில், ஒரு நாள் சமூக ஊடகங்களை ஸ்க்ரோலிங் செய்யும்போது அதில் வந்த விளம்பரத்தை கண்டு லாட்டரி சீட்டை வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி லாட்டரி டிக்கெட்டையும் வாங்கியுள்ளார்.

  இந்நிலையில், முகமது அடில் பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார்.

  இதுகுறித்து முகமது அடில் கூறுகையில், " எனது முதல் லாட்டரி டிக்கெட் என்னை முதல் ஃபாஸ்ட்5 பரிசை வென்றவராக மாற்றும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு எனது வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஏஇடி 25,000 (ரூ.5.5 லட்சம்) பெறுவது நம்பமுடியாதது.

  இந்த வெற்றியால், ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது குடும்பத்தை தன்னுடன் வாழ அழைத்து வரும் தனது கனவை இப்போது நிறைவேற்ற முடியும். தனது குடும்பத்திற்காக வீடு வாங்க வேண்டும்.

  இதுபோன்ற தனித்துவமான பரிசு வழங்குவதை வேறு எந்த லாட்டரி நிறுவனத்திடம் இருந்தும் நான் பார்த்ததில்லை. இந்த வெற்றி எனது நிதி சுமைகளை நீக்கி, நிலையான இரண்டாம் நிலை வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க எனக்கு உதவும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் வசிக்கும் வங்காளதேசத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிக்கு லாட்டரி சீட்டு மூலம் ரூ.65 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. #Keralalottery
  திருவனந்தபுரம்:

  கேரள அரசு லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தி பம்பர் பரிசுகளை வழங்கி வருகிறது.

  வங்காளதேசத்தைச் சேர்ந்த பாபுலு வர்மன்(வயது 27) என்பவர் குடும்பத்துடன் கேரள மாநிலம் அடூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

  இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. சமீபத்தில் கேரள அரசின் காருண்யா பாக்கிய ஸ்ரீ என்ற லாட்டரியை இவர் வாங்கி இருந்தார். இதில் முதல் பரிசு ரூ.65 லட்சம் இவருக்கு கிடைத்துள்ளது.

  தனக்கு பரிசு விழுந்த விபரத்தை லாட்டரி சீட்டு வாங்கிய கடைக்காரர் மூலம் உறுதி செய்து கொண்ட பாபுலு வர்மன் அந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார்.

  இது பற்றி பாபுலு வர்மன் கூறியதாவது:-

  நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சொந்தமாக எதுவும் கிடையாது. நான் பல முறை லாட்டரி சீட்டு வாங்கிய போதும் தற்போது தான் பரிசு கிடைத்துள்ளது. இந்த பணம் மூலம் கேரளாவில் சொந்த வீடு வாங்குவேன். இங்கேயே எனது வாழ்க்கையை நடத்துவேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #Keralalottery
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் பணியாற்றிவரும் இந்தியரான பிரிட்டி மார்கோஸ் லாட்டரி குலுக்கலில் சுமார் 20 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசாக வென்றுள்ளார். #Indianwins #Dh10million #UAEraffledraw #BrittyMarkose
  துபாய்:

  ஐக்கிய அரபு அமீரகத்தில் மாதந்தோறும் ‘பிக் டிக்கட் அபுதாபி’ என்ற லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த பலர் பலமுறை பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.

  அவ்வகையில், இந்த மாதம் நடைபெற்ற குலுக்கலில் கேரளாவை சேர்ந்த பிரிட்டி மார்கோஸ் என்பவருக்கு ஒரு கோடி திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 19 கோடியே 85 லட்சம் ரூபாய்) முதல் பரிசாக கிடைத்துள்ளது.

  கடந்த 2004-ம் ஆண்டுமுதல் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் இரு மகன்கள் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பரிசுத்தொகையை கொண்டு தனக்கு இருக்கும் கடன்களை எல்லாம் அடைத்த பின்னர் தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்ட விரும்புவதாக  பிரிட்டி மார்கோஸ் தெரிவித்துள்ளார். #Indianwins #Dh10million  #UAEraffledraw #BrittyMarkose
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்தில் விரைவில் திருமணம் நடைபெற உள்ள இளம் ஜோடிக்கு லாட்டரியில் ரூ.10 கோடி கிடைத்த சம்பவத்தால் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். #LotteryPrize
  லண்டன்:

  இங்கிலாந்தில் மெய்ட்ஸ் டோன் அருகேயுள்ள ஸ்னாட்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி மிக் டைலர் (35), சாரா ஹார்மர் (33). காதலர்களான இவர்கள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.

  இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி மிக் டைலர் ஆன்லைன் மூலம் லாட்டரி வாங்கினார். அந்த லாட்டரி குலுக்கல் சமீபத்தில் நடந்தது. அதில் அவருக்கு ரூ.10 கோடி (1 மில்லியன் பவுண்ட்) பரிசு கிடைத்தது.

  நே‌ஷனல் லாட்டரியில் இருந்து அந்த தகவல் மெயிலில் வந்தது. அதை பார்த்த அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த பரிசு தொகையை கொண்டு ஆசையாக தாங்கள் விரும்பிய வீட்டை வாங்க இருப்பதாகவும், திருமணத்துக்கு பயன்படுத்த இருப்பதாகவும் அந்த இளம் ஜோடி தெரிவித்துள்ளது. #LotteryPrize
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அபுதாபியில் வேலைபார்த்து வந்த கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.13 கோடி பம்பர் பரிசு விழுந்துள்ளது. #LotteryPrize
  அபிதாபி:

  கேர மாநிலம் காசர் கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது குஞ்சு மய்யலாத். இவர் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

  சமீபத்தில் அங்கு விற்பனையான ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டு வாங்கினார். அதன் குலுக்கல் நடந்தது. அதில் பம்பர் பரிசு தொகையான 70 லட்சம் திர்ஹாம் விழுந்தது.

  இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 கோடியாகும். இவரது சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதை முதலில் அவர் நம்பவில்லை. விளையாட்டாக கேலி செய்கிறார்கள் என நினைத்தார். பின்னர் உண்மையில் பரிசு கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

  லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையில் இருந்து ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார். இவருடன் பணிபுரியும் நண்பரின் 2 சிறுநீரங்களும் செயலிழந்துவிட்டன. அவரது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய இருப்பதாகவும் கூறினார்.

  வழக்கமாக நண்பர்களுடன் இணைந்து தான் பரிசு சீட்டு வாங்குவேன். முதன் முறையாக நானே தனியாக லாட்டரி சீட்டு வாங்கினேன். அதற்கு தான் பரிசு கிடைத்துள்ளது என்றார். #Keralaman #LotteryPrize
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கனடாவில், கடந்த 5 மாதத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் லாட்டரி மூலம் ரூ.25 கோடி சம்பாதித்துள்ளார். #MelhigMelhig #Melhig #WinningLottery
  டொரண்டோ:

  கனடாவில் வின்னிபெக் நகரை சேர்ந்தவர் மெல்கிக் (28) மேற்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது நாட்டில் இருந்து குடும்பத்துடன் புலம் பெயர்ந்து கனடா வந்து தங்கினார்.

  இவர் கடந்த ஏப்ரல் முதல் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கினார். அவற்றின் மூலம் 5 மாதங்களில் ஜாக்பாட் பரிசு மூலம் ரூ.20 கோடி சம்பாதித்தார்.

  கடந்த ஏப்ரல் மாதம் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.11 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது. 2-வது தடவையாக அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.14 கோடி ஜாக்பாட் பரிசு தொகை கிடைத்துது. இதன் மூலம் 5 மாதத்தில் இவர் 25 கோடி சம்பாதித்துள்ளார்.


  முதலில் கிடைத்த லாட்டரி சீட்டு பரிசு தொகையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு புதிய வீடு வாங்கி கொடுத்தார். 2-வது லாட்டரி சீட்டு குலுக்கலில் கிடைத்த பரிசு தொகையை வியாபார அபிவுருத்திக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

  மேலும் ஆங்கில அறிவை மேம்படுத்தி வியாபாரத்தை பெருக்க மெல்கிக் முடிவு செய்துள்ளார். தனக்கு தச்சு வேலை செய்வதில் மிகவும் விருப்பம் என்றும் அவர் கூறினார். #MelhigMelhig  #Melhig #WinningLottery
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வளைகுடா நாடுகளில் ஆன்லைன் லாட்டரி குலுக்கல் நடந்து வருகிறது. இதில் கேரள தொழில் அதிபருக்கு ரூ.18.68 கோடி பரிசு கிடைத்துள்ளது. #KeralaLottery
  திருவனந்தபுரம்:

  வளைகுடா நாடுகளில் ஆன்லைன் லாட்டரி குலுக்கல் நடந்து வருகிறது.

  கேரள தொழில் அதிபருக்கு ரூ.18.68 கோடி பரிசு

  கேரள மாநிலம் வள்ளப்பள்ளி நகரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் யோகனன் சைமன் என்பவருக்கு சமீபத்தில் நடந்த லாட்டரி குலுக்கலில் 10 மில்லியன் திர்காம் பரிசு விழுந்தது. இது இந்திய பணத்திற்கு ரூ.18.68 கோடியாகும்.

  யோகனன் சைமன் வளைகுடா நாட்டில் உள்ள பர்னிச்சர் கடையில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். பரிசு விழுந்தது பற்றி கூறும்போது, இதற்கு முன்பு பல முறை நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி வாங்கி உள்ளேன்.

  முதல் முறையாக இப்போதுதான் தனியாக லாட்டரி வாங்கினேன். அதற்கு ரூ.18.68 கோடி பரிசு விழுந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

  வளைகுடா நாட்டில் நடைபெறும் ஆன்லைன் லாட்டரியில் தொடர்ந்து கேரள வாலிபர்களுக்கே அதிர்ஷ்டம் அடிக்கிறது. கடந்த மாதம் சந்தீப்மேனன் என்பவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு விழுந்தது.

  கடந்த ஏப்ரல் மாதம் ஜாண் வர்கீஸ் என்ற டிரைவருக்கு 12 மில்லியன் திர்காம் பரிசு கிடைத்தது. ஜனவரி மாதம் இன்னொரு கேரள வாலிபருக்கு இதுபோல 12 மில்லியன் திர்காம் பரிசு விழுந்தது. இப்போது யோகனன்சைமன் ரூ.18.68 கோடி பரிசு வென்றுள்ளார். #KeralaLottery
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒர்க்‌ஷாப் தொழிலாளிக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசான ரூ.4 கோடி கிடைத்துள்ளது.
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் மாநில அரசே லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்து வருகிறது. காருண்யா பாக்கிய லெட்சுமி, பாக்கியஸ்ரீ, ஸ்ரீசக்தி ஆகிய பெயர்களில் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

  ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் பம்பர் பரிசுகளுடன் லாட்டரி குலுக்கல்கள் நடத்தப்படுகிறது. தற்போது பாக்கியலெட்சுமி லாட்டரி குலுக்கலில் கேரள மாநிலம் மலப்புரம் மேலாற்றூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 58) என்பவருக்கு முதல் பரிசான ரூ.4 கோடி கிடைத்துள்ளது.

  இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ள பாலகிருஷ்ணனுக்கு தற்போதுதான் பெரிய பரிசு கிடைத்துள்ளது.

  இதுபற்றி அவர் கூறும் போது, ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வரும் நான், இனி சொந்தமாக ஒர்க்‌ஷாப் தொடங்குவேன். எனது குடும்பத்தினருக்கும் மற்றும் ஏழைகளுக்கும் லாட்டரி பணத்தை செலவு செய்வேன் என்றார். #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள அரசின் காருண்யா பாக்கியலட்சுமி லாட்டரியை வாங்கிய வடமாநில தொழிலாளிக்கு முதல் பரிசான ரூ.60 லட்சம் கிடைத்துள்ளது. #Kerala #Lottery
  திருவனந்தபுரம்:

  கேரள அரசு லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்த லாட்டரி விற்பனை மூலம் கிடைக்கும் பணம் அரசின் நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

  கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தேரி பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து கூலி தொழிலாளர்களாக பணி செய்து வருகிறார்கள். இவர்களில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விஸ்வஜித்ராய். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் அங்கு தொழில் நலிவடைந்ததால் கேரளாவில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

  இவருக்கு லாட்டரிச்சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. சமீபத்தில் இவர் கேரள அரசின் காருண்யா பாக்கியலட்சுமி லாட்டரியை வாங்கி இருந்தார்.

  சமீபத்தில் இதன் குலுக்கல் நடந்தது. இதில் விஸ்வஜித்ராய் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு முதல் பரிசான ரூ.60 லட்சம் கிடைத்தது. இதுபற்றி விஸ்வஜித்ராய் கூறியதாவது:-

  எனது தாய், தந்தையர் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனது சகோதரிக்கு மட்டும் திருமணம் நடந்துள்ளது. ஊரில் விவசாயம் சரிவர நடைபெறாததால் நான் கேரளாவுக்கு வந்து கட்டிட தொழில் செய்து வந்தேன்.

  பல ஆண்டுகளாக நான் லாட்டரிச்சீட்டுகள் வாங்கி வருகிறேன். இதுவரை பரிசு எதுவும் எனக்கு கிடைத்தது இல்லை. தற்போது முதல் பரிசு ரூ.60 லட்சம் கிடைத்து உள்ளது. முதலில் என்னால் அதை நம்பமுடியவில்லை. அருகில் உள்ள லாட்டரி ஏஜென்டிடம் எனது லாட்டரிச் சீட்டை காண்பித்து உறுதி செய்துகொண்டேன். லாட்டரி பரிசு பணம் மூலம் எங்கள் ஊரில் சொந்தமாக வீடு கட்டுவேன். மேலும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன். எனது சகோதரி மற்றும் உறவினர்களுக்கும் உதவிகள் செய்வேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #Kerala #Lottery
  ×