தொலைந்த லாட்டரி சீட்டுக்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு

தனது மகளை பூங்காவிற்கு அழைத்து சென்று விளையாடி உள்ளார். தேடிய போது அவர் டிக்கெட் வாங்கிய கடைகளிலேயே அதனை வைத்து விட்டு வந்தது தெரியவந்தது.
தொலைந்த லாட்டரி சீட்டுக்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு
Published on

லாட்டரியில் ஜாக்பாட் பரிசு கிடைப்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்பார்கள். அந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் சரியான நேரத்தில் கிடைப்பது இல்லை. ஆனாலும் சிலருக்கு அதிர்ஷ்டம் எதிர்பாராத வகையிலும் கிடைத்து விடும்.

அந்த வகையில் அமெரிக்காவில் விர்ஜீனியா பகுதியை சேர்ந்த டியாரா என்ற இளம்பெண் ஒருவர் லாட்டரி டிக்கெட்டை வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது மகளை பூங்காவிற்கு அழைத்து சென்று விளையாடி உள்ளார்.

இந்நிலையில் திடீரென அவர் தான் வாங்கிய லாட்டரி சீட்டை தேடிய போது அதனை காணவில்லை. தொடர்ந்து அந்த சீட்டை தேடிய போது அவர் டிக்கெட் வாங்கிய கடைகளிலேயே அதனை வைத்து விட்டு வந்தது தெரியவந்தது. ஒரு வழியாக தொலைந்து போன டிக்கெட் மீண்டும் கிடைத்த சந்தோசம் ஒருபுறம் என்றால் அந்த டிக்கெட்டிற்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.41.5 லட்சம்) பரிசு விழுந்தது அவருக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com