நண்பரின் பதிவால் வாலிபருக்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு

நண்பருக்கு லாட்டரியில் 100 டாலர் கிடைத்ததாக பதிவிட்டிருந்தார். நானும் லாட்டரி வாங்க முடிவு செய்து, எனது அதிர்ஷ்ட எண்ணில் லாட்டரி வாங்கினேன்.
நண்பரின் பதிவால் வாலிபருக்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு
Published on

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் மெல்வின் புருக்ஸ். இவர் சமீபத்தில் லாட்டரி சீட்டு வாங்கி இருந்தார். அதில் அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3.34 கோடி பரிசு விழுந்தது. இதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார்.

அதில், எனது நண்பரின் வலைதள பதிவு ஒன்றை பார்த்தேன். அதில் அவருக்கு லாட்டரியில் 100 டாலர் கிடைத்ததாக பதிவிட்டிருந்தார். எனவே நானும் லாட்டரி வாங்க முடிவு செய்து, எனது அதிர்ஷ்ட எண்ணில் லாட்டரி வாங்கினேன். அதில் எனக்கு ஜாக்பாட் பரிசு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

இந்த பரிசு மூலம் தனது அடமானத்தை செலுத்த உள்ளதாகவும், எனது மனைவி மற்றும் மகள்களுக்கு உதவவும் பரிசு தொகையை பயன்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com