search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Award"

    • சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கராவுக்கு வழங்கப்பட்டது.
    • இவர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

    2016 ஆண்டு வெளியாகிய இறுதிச்சுற்று படம் குத்துச் சண்டையை மையமாக எடுக்கபட்ட படம். இப்படத்தில் மாதவன்,ரித்திக்கா சிங் நடித்தனர். சுதா கொங்கரா இயக்கினார். இவர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

    இறுதிச்சுற்று படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியானது. ரித்திக்கா சிங்கை தமிழ் சினிமாவிற்கு அறிமுக படுத்தியவர் சுதா கொங்கரா. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்தார்.மாதவனின் சிறந்த நடிப்பும், ரிதிக்கா சிங்கின் நடிப்பும் மக்களிடையே பேசப்பட்டது. இறுதி சுற்று அமேசான் மற்றும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கராவுக்கு வழங்கப்பட்டது.  இன்று முத்தமிழ் மன்றத்தில் நடக்கும் விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  விருது வழங்கி கவுரவித்தனர்..

    • மோகன் ராஜாவுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
    • இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த கதையாசியருக்கான விருது மோகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

    2015 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி,நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வெளிவந்த படம் "தனி ஒருவன்".

    இப்படம்  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அரவிந்த சாமிக்கும், ஜெயம் ரவிக்கும் இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிக பெரிய ஹிட் ஆனது.

    இப்படம் தெலுங்கு,கன்னடம் மொழியிலும் ரீமேக் செய்தார்கள்.2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைபடங்களில் மிக பெரிய வசூல் செய்த படம் தனி ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    படம் ரிலீஸ் ஆகி 8 ஆண்டு முடிந்த நிலையில் மோகன்ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளியிட போவதாக  வீடியோவை வெளியிட்டு அறிவித்தார்..இந்நிலையில் இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த கதையாசியருக்கான விருது மோகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

    இன்று முத்தமிழ் மன்றத்தில் நடைப்பெற்று வரும் விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மோகன் ராஜாவுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். .

    • பேராசிரியரான அசோக் வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • பொறியியல் துறையில் சாதனை படைத்தற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    டெக்சாஸ்:

    அமெரிக்காவில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெக்சாசின் மிக உயரிய கல்வி விருதான எடித் மற்றும் பீட்டர் ஓடோனல் விருது இந்திய வம்சாவளியை சேர்ந்த கணிணி பொறியாளர் மற்றும் பேராசிரியரான அசோக் வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பொறியியல் துறையில் சாதனை படைத்தற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    • விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்று உள்ளார்.
    • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ''கோல்டன்' தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார்.

    49-வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் விழா கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் நடந்தது. 1975-ம் ஆண்டு முதல் 'மக்கள் தேர்வு' விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.

    பாப் பாடல், இசை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் கலைஞர்' விருதை 'BTS'இசைக்குழுவை சேர்ந்த ஜங்குக் பெற்றுள்ளார். மக்களின் விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யப்படும் இவ்விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்று உள்ளார்.


    தற்போது ஜங்குக் ராணுவத்தில் சேர்ந்துள்ளதால் விருதை நேரில் பெற வர முடியவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ''கோல்டன்' தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார். இந்த விருது கிடைத்த செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் ஜங்குக்வுக்கு இணைய தளத்தில் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

    • சிறந்த கோல் கீப்பர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார்.
    • சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் அயிட்டனா பொன்மதி வென்றார்.

    லண்டனில் 2023-ம் ஆண்டுக்கான பிபா-வின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்ஸிக்கும், எர்லிங் ஹாலண்ட்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இருவருமே 48 புள்ளிகள் பெற்றிருந்தனர். ஆனால், அதிக தேசிய அணியின் கேப்டன்கள் மெஸ்ஸிக்கு வாக்களித்ததால் அவர் விருத்தினைத் தட்டிச் சென்றார்.

    கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். சிறந்த அணியின் மேலாளர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் பெப் கார்டியோலா வென்றார்.

    சிறந்த கோல் கீப்பர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார். சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் அயிட்டனா பொன்மதி வென்றார்.    

    • அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
    • விவரங்களுக்கு தொலைபேசி எண்: 044-27269148 தொடர்பு கொள்ளவும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுர மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச்சுடர் மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு வருகிற 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 044-27269148 தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 68-வது ரெயில்வே வார விழா நேற்று முன்தினம் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்தது.
    • விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார்.

    டெல்லியில் நடந்த விழாவில் வணிகத்தில் சிறந்து விளங்கியதற்காக தெற்கு ரெயில்வேக்கு மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் விருது வழங்கினார்.

    இந்திய ரெயில்வே துறை சார்பில் ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வாரம் தோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 68-வது ரெயில்வே வார விழா நேற்று முன்தினம் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்தது.

    இந்த விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மண்டலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 100 ரெயில்வே ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

    இதில், தெற்கு ரெயில்வேக்கு வர்த்தகத் திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பெற்றுக்கொண்டார். இதுபோக, தெற்கு ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் 9 ஊழியர்களுக்கு நட்சத்திர செயல்திறன் விருதுகள் வழங்கப்பட்டது.

    அதன்படி, தண்டவாள பராமரிப்பு பணிக்காக வீரபெருமாள் என்பவருக்கும், லோகோ பைலட் பிரிவில் சுதீஷ்குமார் என்பவருக்கும், டிக்கெட் இன்ஸ்பெக்டர் பிரிவில் செல்வக்குமார், ஆர்.பி.எப்.இன்ஸ்பெக்டர் பிரிவில் மதுசூதன் ரெட்டி, சீனியர் செசன் என்ஜினீயர் பிரிவில் செல்வராஜா, சீனியர் கோட்ட பொறியாளர் மயிலேரி, தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் துர்காதேவி, கோட்ட வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன், சிறப்பான திட்டங்கள் பிரிவில் மாரியப்பன் என்பவருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    • எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு கனவு ஆசிரியர் விருது கிடைத்துள்ளது
    • பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வானியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கொண்டு செல்கிறார்

    திருச்சி,

    ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    கனவு ஆசிரியர் 2023 தேர்வானது பின்வரும் மூன்று படி நிலைகளில் நடத்தப்பெற்றது. இணையவழி மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் தேர்வில் 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் இரண்டாம்நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு.

    மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடு களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்க ளுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

    இதில் திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி- எடமலைப்பட்டி புதூர் பள்ளியின் ஆசிரியை சு.உமா தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட கனவு ஆசிரியர் தேர்வின் மூன்று நிலைகளிலும் தேர்ச்சி பெற்று கனவு ஆசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவர் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் கீழ் இயங்கி வரும் திருச்சி அஸ்ட்ரோ கிளப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளராக இருந்து விடுமுறை நாட்களிலும், திருச்சி விழா, திருச்சி புத்தகத் திருவிழா போன்ற நிகழ்வுகளிலும் பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வானி யல் விழிப்புணர்வு நிகழ்வு களை கொண்டு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • விவசாயி விளைவிக்கப்பட்ட ரப்போஸ்டா செர்ரீ என்ற காபி வகை அகில இந்திய அளவில் சிறந்த சுவையுள்ள காபியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு 2-ம் இடமும், இதேபோல் அரபிக்கா தேன்காபி வகை 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது.
    • இயற்கைவிவசாயி மகேஸ் நாராயணனுக்கு இந்திய அளவில் சிறந்த சுவையுடைய காபி உற்பத்தி செய்துள்ளதை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, தடியன்கு டிசை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணை க்காடு, கும்பம்மாள்பட்டி, கொங்கப்பட்டி, பூலத்தூர், கும்பரையூர், மங்களம்கொம்பு, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பாச்சலூர் போன்ற கீழ்பழனிமலைப் பகுதிகளில் காபி பிரதான விவசாயமாக விளங்கி வருகின்றது.

    இம்மலைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபி விவசாயம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு பருவ மழை மற்றும் காபி செடிகளுக்கு ஏற்ற சீதோஷண நிலை, விவசாய பரப்பளவை அதிகரிக்க காபி வாரியம் எடுத்த நடவடிக்கை மற்றும் விலை ஏற்றம் காரணமாக விவசாயிகள் காபி விவசாயத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    பட்டிவீரன்பட்டியை சேர்ந்த இயற்கைவிவசாயி மகேஸ் நாராயணன் என்பவர் காபி தோட்டம் வைத்துள்ளார். அங்கு இவரது காபி தோட்டத்தில் விளை விக்கப்பட்ட ரப்போஸ்டா செர்ரீ என்ற காபி வகை அகில இந்திய அளவில் சிறந்த சுவையுள்ள காபியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு 2-ம் இடமும், இதேபோல் அரபிக்கா தேன்காபி வகை 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது.

    இதனையடுத்து இந்திய காபி வாரியம் சார்பில் இதற்கான விருது வழங்கும் விழா தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய காபி வாரிய ஆராய்ச்சி இயக்குனர் செந்தில்குமார் கலந்து கொண்டு இயற்கைவிவசாயி மகேஸ் நாராயணனுக்கு இந்திய அளவில் சிறந்த சுவையுடைய காபி உற்பத்தி செய்துள்ளதை பாராட்டி விருதுகளை வழங்கினார்.

    இவ்விழாவில் மண்டல இணை இயக்குனர் (விரிவாக்கம்) கருத்தமணி, துணை ஆராய்ச்சி இயக்குனர் ஜெயக்குமார், முதுநிலை விரிவாக்க தொடர்பு அலுவலர் தங்கராஜன், மலைத் தோட்ட மூத்த விவசாயி விஜயசாரதி, காபி வாரிய உறுப்பினர் சேகர்நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து விருது பெற்ற இயற்கைவிவசாயி மகேஸ்நாராயணன் கூறிய தாவது, நமது தாண்டிக்குடி மலைப்பகுதியில் விளைந்த காபிக்கு விருது கிடைத்துள்ளது. இப்பகுதி அனைத்து விவசாயி களுக்கும் பெருமையான விஷயமாகும். இங்கு உலக தரம் வாய்ந்த சுவையான காபிகளை விளைவிக்க முடியும், அதற்கு இந்த விருது உத்வேகம் அளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

    • பூளவாடி கிளை நூலகம் வாசகா் வட்டத்துக்கு தமிழக அரசு விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
    • குழந்தைகளின் படைப்பு ஆக்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    உடுமலை : 

    உடுமலை வட்டம் பூளவாடி கிளை நூலகம் வாசகா் வட்டத்துக்கு தமிழக அரசு விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

    இந்த நூலகத்தில் சிறாா்களுக்காக பொம்மலாட்டம், கதை வட்டம், காகித பொம்மை செய்தல், விளையாட்டு மற்றும் குழந்தைகளின் படைப்பு ஆக்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இளம் வயது மாணவா்களிடம் வாசிப்பை நேசிக்க வைக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில் மாநில அளவில் நூலக வளா்ச்சியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய 14 நூலகங்கள் தோ்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி விருதுகளை வழங்கினாா்.

    இதில் உடுமலை வட்டம் பூளவாடி முழு நேர கிளை நூலகத்துக்கு மாநில அளவில் முனைப்புடன் செயல்பட்ட பூளவாடி கிளை நூலக வாசகா் வட்டத்துக்கு தமிழக அரசின் விருது மற்றும் கேடயம் வழங்கப்பட்டன.வாசகா் வட்டத் தலைவா் சுப்பிரமணியன், செயலாளா் மற்றும் நூலகா் லட்சுமணசாமி ஆகியோா் இதனை பெற்றுக்கொண்டனா்.

    • கிளை நூலகம் மற்றும் ஊர்ப்புற நூலகங்களுக்கு தலா 4 கேடயங்கள் வழங்கப்பட்டது.
    • முடிவில் பொது நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி நன்றி கூறினார்.

    சீர்காழி:

    நூலகத் தந்தை என போற்றப்படும் டாக்டர். எஸ்.ஆர். அரங்கநாதன் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சிறப்பாக சேவையாற்றும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

    அதன்படி சீர்காழியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார்.

    பொது நூலக இயக்குனர் க.இளம்பகவத் வரவேற்றார்.

    பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம்,சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), நிவேதா.எம்.முருகன் (பூம்புகார்), தாசில்தார் அர்ச்சனா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், மாவட்ட கவுன்சிலர்கள் விஜ யேஸ்வரன், விஜயபாரதி, நகர்மன்ற தலைவர் துர்காரா ஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று இவ்வாண்டு சிறப்பாக சேவையாற்றிய 34 மாவட்டங்களை சேர்ந்த 34 நூலகர்களுக்கு அரங்கநாதன் விருது மற்றும் சான்றிதழ், வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.5ஆயிரம் காசோலை ஆகியவற்றை வழங்கினார்.

    மேலும் மாநில அளவில் அதிக உறுப்பினர்கள், புரவலர்களை சேர்த்த மற்றும் அதிக நன்கொடைகள் பெற்ற மாவட்ட மைய நூலகம் முழு நேர கிளை நூலகம், கிளை நூலகம் மற்றும் ஊர் புற நூலகங்களுக்கு தலா நான்கு கேடயங்கள் விதம் 12 கேடயங்கள் வழங்கப்பட்டது.

    மாநில அளவில் சிறப்பாக பங்காற்றிய 13 வாசகர் வட்ட தலைவர்களுக்கு நூலக ஆர்வலர்கள் விருது வழங்கி பேசுகையில்,

    நூலகர்களுக்கு விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்யப்பட்டு அந்த விழாவினை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்த முடிவு செய்த பின் முதல்வரை சந்தித்து கூறிய பொழுது நூலகத் தந்தை பிறந்த ஊரான சீர்காழியிலே விழாவினை நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்.

    எஸ். ஆர். அரங்கநாதன் 1974 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் நூலகராக பணியாற்றிய 20 ஆண்டுகள் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய பெருமை அவரையே சாரும்.

    பள்ளிக்கல்வித்துறை 234/77 என சட்டமன்ற தொகு திகளில் ஆய்வுகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    கல்வித்துறை கடல் போன்றது இதுவரை 92 சட்டமன்ற தொகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆசிரியர்களும், நூலகர்களும் இரு கண்கள் போல் என்று பேசினார்.

    முடிவில் பொது நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி நன்றி கூறினார்.

    • பள்ளி கல்வித்துறை பொது நூலகத்துறை சார்பில் எஸ்.ஆர். அரங்கநாதன் நூலக விருது வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்தது.
    • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் நூலகம் தமிழ்நாட்டில் முதன்மை நூலகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் நூலகர் மாதவனுக்கு அமைச்சர்கள் விருது வழங்கினர்.

    உடன்குடி:

    பள்ளி கல்வித்துறை பொது நூலகத்துறை சார்பில் எஸ்.ஆர். அரங்கநாதன் நூலக விருது வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் நூலகம் தமிழ்நாட்டில் முதன்மை நூலகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் நூலகர் மாதவனுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் விருது வழங்கினர்.

    தொடர்ந்து 5-வது முறையாக மாநில விருது பெற்ற நூலகர் மாதவனுக்கு வி.வி.பி., கல்வி டிரஸ்ட் சேர்மனும், தட்சணமாற நாடார் சங்க கல்லூரி செயலாளர் வி. பி. ராமநாதன், தஞ்சாவூர் தொழிலதிபர் நடராஜன், தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர், நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர் ஜாண் சாமுவேல் மற்றும் வாசிப்பு இயக்க பொருளாளர் ஜெகநாத பெருமாள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×