search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "tour"

  • நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
  • ஜனவரி 24-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

  கோவை:

  அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

  அந்த வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், இன்று முதல் அடுத்த மாதம் 24-ந் தேதி வரை ஒரு மாதம் காலம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி தனது ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை கொங்குமண்டலமான கோவை மாவட்டம் சூலூரில் தொடங்கினார்.

  சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை களை வழங்கி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

  கோவையில் ஆலோசனை கூட்டம் முடிந்ததும், இன்று மாலை நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

  அதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை திருப்பூர் மாவட்டத்திலும், மாலையில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து அவர் ஜனவரி 24-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

  இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறியதாவது:-

  மக்களவை தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைக்கும் பணியை இன்று கோவையில் தொடங்கியுள்ளோம். அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த மாதம் வரை இந்த பணிகள் நடக்க உள்ளது.மேலும் கோவையில் ஒரு மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

  அ.தி.மு.க ஒருங்கிணை ப்பாளராகத் தான் இன்னும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பெயர் உள்ளது. மக்களவை தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன்.
  • தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

  திருவனந்தபுரம்:

  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கேரள மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குறிப்பாக தனது தொகுதியான வயநாட்டில் மக்களை சந்தித்தும் வருகிறார். திருவாலியில் வலி மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியதாவது:-

  கேரளாவின் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு துறை நாட்டிலேயே மிகச்சிறந்த துறைகளில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் நோய் தடுப்பு சிகிச்சையில் கேரளா ஒரு முன்னோடியாக உள்ளது. தன்னால் இயன்ற உதவிகளை செய்யத்தயாராக இருப்பதாகவும், ஆனால் எம்.பி.யாக இருந்து தனக்கு கிடைத்த நிதி மட்டுப்படுத்தப்பட்டதாகவும், கவனமாக பகிர்ந்தளிக்க வேண்டியதாகவும் உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  முன்னதாக மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் சீத்தி ஹாஜி பற்றிய புத்தக வெளியீட்டு விழாவிலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வயநாடும், கேரளாவும் தனக்கு 2-வது வீடு போன்றது என்றார். கேரளா மற்றும் வயநாட்டுக்கு நான் எவ்வளவு அதிகமாக வருகிறேனோ, அவ்வளவு அதிகமாக இது எனது வீடு என்று உணர்கிறேன். வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன். மேலும் அடுத்த திட்டமாக எனது தாய் சோனியா காந்தியை இங்கு அழைத்துவர உள்ளேன். நான் இங்கு வரும்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கிறேன். தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றார்.

  • சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

  நாமக்கல்:

  உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்றது.

  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  இதில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியின 50 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மற்றும் குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட உள்ளார்கள்.

  இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

  • பேராசிரியர் கற்பகம் வாழை மூலம் தயாரிக்கப்படும் மதிப்பூட்டிய பொருட்கள் சந்தைபடுத்துதல் பற்றி விரிவாக கூறினார்.
  • வாழை சாகுபடிக்கான காணொலி காட்சிகள் காண்பிக்கப்பட்டன.

  செய்துங்கநல்லூர்:

  ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் தோட்டக்கலைத்துறை சார்பில் ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகளை மாநில அளவிலான கல்வி கண்டுநர் சுற்றுலா தோட்டக்கலை உதவி இயக்குநர் செல்வபிரபு தலைமையில் வாழை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

  இக்கண்டுநர் சுற்றுலாவில் முதலாவதாக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விரிவாக்க பேராசிரியர் கற்பகம் ஆராய்ச்சி மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், வாழை சாகுபடியிலுள்ள நவீன தொழில்நுட்பங்கள், வாழை மூலம் தயாரிக்கப்படும் மதிப்பூட்டிய பொருட்கள் சந்தைபடுத்துதல் பற்றி விரிவாக கூறினார்.

  அடுத்தபடியாக வாழை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றி சிவா கூறுகையில், வாழை பழத்தின் நன்மைகள் வாழை இலையின் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழை சாகுபடிக்கான காணொலி காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதனைக் கண்டு விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

  முடிவில் வாழை செயலாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வாழை பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருளான பனானா சாக்லேட் செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான செய்முறை விளக்கத்தை ரவிச்சாமி விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.

  சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகள் வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றி விரிவாக தெரிந்து கொண்டதாக கூறி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்களுக்கு நன்றி கூறினர். இச்சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அட்மா அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

  • வெள்ளி விழாவை முன்னிட்டு ஆசிரியர்கள் இலவச விமான சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்
  • பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி நிர்வாகம் ஏற்பாடு

  வேலாயுதம்பாளையம், 

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனம் தொடங்கி 24- ஆண்டுகள் முடிவடைந்து 25-வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்வாக 10 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை பெருமைப்படுத்தி அவர்களை சிறப்பிக்கும் வகையில் இலவச விமான சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டது. விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை வரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 28 ஆசிரிய, ஆசிரியைகள் பயணம் சென்றனர் . இவர்களுடன் ஆர்.என். ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சக்திவேல் , செயலாளர் ராஜா, இயக்குனர் டாக்டர் அருள் ஆகியோரும் சென்றனர் .சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அந்தப் பகுதிகளை சுற்றிப் பார்த்து விட்டு திரும்ப படுக்கை வசதியுடன் கூடிய ஏசி சொகுசு பேருந்தில் பயணம் செய்து பள்ளியை வந்தடைந்தனர். விமான பயண சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

  • இங்கிலாந்து மன்னர் சார்லஸ்-பிரதமர் ரிஷிசுனக்குடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்.
  • ஜோபைடன் அங்கு நடக்கும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார்.

  வாஷிங்டன்:

  நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இங்கிலாந்து, லிதுவேனியா, பின்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளில் வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார்.

  முதலில் லண்டன் செல்லும் ஜோபைடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மற்றும் அந்நாட்டு பிரதமர் ரிஷிசுனக் ஆகியோருடன் இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

  11 மற்றும் 12-ந்தேதிகளில் லிதுவேனியாவுக்கு செல்லும் ஜோபைடன் அங்கு நடக்கும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர் பின்லாந்து நாட்டுக்கு செல்லும் அவர் பின்லாந்து-அமெரிக்க நார்டிக் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

  • இமாச்சலப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களால் 19 பேர் உயிரிழப்பு.
  • இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகாண்ட் மாநிலத்தில் மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.

  உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முக்கிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதால் வெறியேற முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர்.

  பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7ன் ஒரு பகுதி சாமோலி மாவட்டத்தில் உள்ள சின்கா அருகே சரிந்த மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  ஏற்கனவே, அண்டை மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் குலுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் சுமார் 15 கி.மீ சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் , சுற்றுலா பயணிகள் உள்பட 200 பேர் சிக்கினர். இந்த சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களில் சாமோலியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

  இமாச்சலப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களால் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியோகி உள்ளது.

  இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகாண்ட் மாநிலத்தில் மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது.
  • இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

  மும்பை:

  இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது.

  டெஸ்ட் தொடர் ஜூலை 12-ந் தேதியும், ஒருநாள் போட்டிகள் ஜூலை 27-ந் தேதியும், 20 ஓவர் தொடர் ஆகஸ்டு 3-ந் தேதியும் தொடங்குகிறது. ஆகஸ்டு 13-ந் தேதியுடன் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிவடைகிறது.

  அதை தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

  அயர்லாந்து அணியுடன் இந்தியா மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது.

  ஆகஸ்டு 18-ந் தேதி முதல் 20 ஓவர் போட்டியும், 20-ந் தேதி 2-வது ஆட்ட மும் ஆகஸ்டு 23-ந் தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது.

  அயர்லாந்தில் உள்ள மலாஹிட் நகரில் 3 போட்டிகளும் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

  • ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
  • திரவுபதி முர்மு 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  ராஞ்சி :

  ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று ஜார்கண்ட் சென்றார். இதற்காக திேயாகர் விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவரை மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

  பின்னர் அவர் அங்குள்ள பாபா பைத்யநாதர் கோவிலுக்கு சென்றார். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த புகழ்பெற்ற கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க முர்மு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

  முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் வாரியம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முர்முவின் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக தலைநகர் ராஞ்சியில் நேற்று மாலையில் ஐகோர்ட்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார்.

  ரூ.550 கோடியில் 165 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த ஐகோர்ட்டு வளாகம் நாட்டின் மிகப்பெரிய ஐகோர்ட்டு வளாகங்களில் ஒன்றாகும்.

  இதற்காக தியோகரில் இருந்து ராஞ்சி சென்றடைந்த திரவுபதி முர்முவை, அங்குள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில், மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

  பின்னர் அங்கிருந்து பிர்சா சவுக் சென்ற ஜனாதிபதி, அங்கு பழங்குடியின தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தியாகி ஆல்பர்ட் எக்காவுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

  ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (வியாழக்கிழமை) குன்றி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்கள் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். அத்துடன் ராஞ்சி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவிலும் மாலையில் பங்கேற்கிறார்.

  ஜனாதிபதியாக 2-வது முறையாக ஜார்கண்ட் சென்றுள்ள திரவுபதி முர்முவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகின்றன. அவர் கடந்த 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • விடுமுறை காலம் என்பதால் குவியும் சுற்றுலா பயணிகள்
  • வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் சுற்றுலாவினர்

  பெரம்பலூர், 

  பெரம்பலூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி ரஞ்சன்குடியில் கம்பீரமாக அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. பகைவா்கள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு, உயரமான மதில் சுவா்களுடன் காட்சியளிக்கும் இந்த கோட்டையானது, செஞ்சி கோட்டையை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

  கோட்டையின் மேல்புற மதில் சுவரின் நான்கு திசைகளிலும் பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டைச்சுவரில் மீன் சின்னமும், போா் வாள்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கோட்டையின் முதல் தளத்தின் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு, சிறு சிற்பங்களும் உள்ளன. மேலும், இதே பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவா்களுக்கும் தொடா்புடைய விஷயங்கள் இக்கோட்டையில் இருப்பது, வரலாற்று ஆய்வாளா்களுக்கும், ஆராய்ச்சியாளா்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ரஞ்சன்குடி கோட்டையை பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறையினால் ரஞ்சன்குடி கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த கோட்டைக்கு வந்து வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.