என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இருந்து கன்னியாகுமரிக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா
    X

    கல்வி சுற்றுலா பேருந்தை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நெல்லையில் இருந்து கன்னியாகுமரிக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா

    • 6 வயதிற்கு உட்பட்ட 27 மாற்றுத் திறனுடைய குழந்தைகள் இன்ப சுற்றுலாவிற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .
    • குழந்தைகளுடன் ஆசிரியர்கள், பெற்றோர் என மொத்தம் 59 பேர் செல்கின்றனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 6 வயதிற்கு உட்பட்ட இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 27 மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கன்னியா குமரிக்கு இன்ப சுற்றுலா செல்லும் வாகனத்தை கலெக்டர் கார்த்திகேயன் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

    பின்னர் அவர் கூறு கையில், சுற்றுலாத்துறை சார்பில் 6 வயதிற்கு உட்பட்ட 27 மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கன்னியாகுமரிக்கு இன்ப சுற்றுலாவிற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் . இந்த சுற்றுலா பயணம் இன்று ஒரு நாள் முழுவதும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று சுற்றி காண்பிக்கப்படும்.

    உணவு, குடிநீர் வசதி

    இந்த சுற்றுலா செல்லும் 27 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுடன் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள், மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர் என மொத்தம் 59 பேர் செல்கின்றனர். இந்த சுற்றுலா பயணம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஊக்கத் தையும், தன்னம்பிக்கையும் அளிக்கும். மேலும் அவர்களுக்கு உணவு வசதியும், குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் பிரம்ம நாயகம், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன், குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள், மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×