search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரஞ்சன்குடி கோட்டையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
    X

    ரஞ்சன்குடி கோட்டையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

    • விடுமுறை காலம் என்பதால் குவியும் சுற்றுலா பயணிகள்
    • வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் சுற்றுலாவினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி ரஞ்சன்குடியில் கம்பீரமாக அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. பகைவா்கள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு, உயரமான மதில் சுவா்களுடன் காட்சியளிக்கும் இந்த கோட்டையானது, செஞ்சி கோட்டையை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    கோட்டையின் மேல்புற மதில் சுவரின் நான்கு திசைகளிலும் பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டைச்சுவரில் மீன் சின்னமும், போா் வாள்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கோட்டையின் முதல் தளத்தின் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு, சிறு சிற்பங்களும் உள்ளன. மேலும், இதே பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவா்களுக்கும் தொடா்புடைய விஷயங்கள் இக்கோட்டையில் இருப்பது, வரலாற்று ஆய்வாளா்களுக்கும், ஆராய்ச்சியாளா்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ரஞ்சன்குடி கோட்டையை பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறையினால் ரஞ்சன்குடி கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த கோட்டைக்கு வந்து வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

    Next Story
    ×