என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ghana"

    • பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தைப் பெற ஆப்பிரிக்காவின் வளர்ச்சி கட்டமைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.
    • ஒரு வலிமையான இந்தியா, மிகவும் நிலையான மற்றும் வளமான உலகத்திற்கு பங்களிக்கும்.

    இந்திய பிரதமர் மோடி கானா சென்றுள்ளார். இந்திய நேரப்படி இன்று மதியம் கானா பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    * மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இருப்பது ஒரு பாக்கியம்.

    * உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 140 கோடி இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன்.

    * எங்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஒரு அமைப்பு அல்ல. அது எங்கள் அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதியாகும்.

    * எனக்கு வழங்கப்பட்ட கானா தேசிய விருதை இரு நாடுகளையும் இணைக்கும் நீடித்த நட்பு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.

    * நமது உறவுகளை விரிவான கூட்டாண்மையாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

    * இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஆர்டர் வேகமாக மாறி வருகிறது.

    * மாறிவரும் சூழ்நிலைகள் உலகளாவிய நிர்வாகத்தில் நம்பகமான மற்றும் பயனுள்ள சீர்திருத்தங்களைக் கோருகின்றன.

    * உலகளாவிய தெற்கிற்கு குரல் கொடுக்காமல் முன்னேற்றம் வராது.

    * 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.

    * ஒரு வலிமையான இந்தியா, மிகவும் நிலையான மற்றும் வளமான உலகத்திற்கு பங்களிக்கும்.

    * பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தைப் பெற ஆப்பிரிக்காவின் வளர்ச்சி கட்டமைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    * ஒன்றாக, வாக்குறுதிகள் மற்றும் முன்னேற்றம் நிறைந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • கானா நாட்டிற்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

    பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக கானா நாட்டிற்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அரசு பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, 'The Officer of the Order of the Star of Ghana' என்ற விருதை வழங்கி கானா அரசு கௌரவித்துள்ளது. இந்த விருது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய மரியாதையாக கருதப்படுகிறது.

    கானா நாட்டை தொடர்ந்து டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். மேலும், வரும் 6, 7ம் தேதி பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

    கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்ப்ட்ட வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #GhanaHeavyRains
    அக்ரா:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில்  தற்போது கன மழை பெய்து வருகிறது. கானாவின் வடக்கு பகுதியில் மிகவும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில், கானாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள புர்கினா பாஸோ என்ற இடத்தில் உள்ள பாக்ரே அணை முழுவதும் நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கரையோரம் வசித்த மக்கள் அணையில் இருந்து வெளியான வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 



    இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 34 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #GhanaHeavyRains
    ×